Advertisment

இன்றைய ராசிப்பலன் -  22.12.2025

rasipalan

Today rasi palan - 22.12.2025

இன்றைய  பஞ்சாங்கம்

22-12-2025, மார்கழி 07, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 10.52 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.32 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பின்இரவு 05.32 வரை பின்பு அமிர்தயோகம். நிஜ உத்தராயண புண்ய காலம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  

Advertisment

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

Advertisment

இன்றைய ராசிப்பலன் -  22.12.2025

மேஷம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று தொழிலில் வேலையாட்களால் மன அமைதி குறையலாம். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 10.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 10.07க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.

தனுசு

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம் .

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு நற்பலனை தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். 

daily rasipalan rasipalan today rasipalan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe