Advertisment

இன்றைய ராசிப்பலன் -  21.01.2026

rasipalan

Today rasi palan - 21.01.2026

இன்றைய  பஞ்சாங்கம்

21-02-2026, மாசி 09, சனிக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 01.01 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.07 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 07.07 வரை பின்பு சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  

Advertisment

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. .

Advertisment

இன்றைய ராசிப்பலன் - 21.01.2026

மேஷம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் தனவரவு உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வீண் பேச்சை குறைத்தால் அனுகூலங்கள் உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவுகேற்ற செலவுகள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். நினைத்தது நிறைவேற பொறுமையுடன் இருப்பது நல்லது.​

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். 

daily rasipalan rasipalan today rasipalan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe