Advertisment

இன்றைய ராசிப்பலன் -  18.02.2026

rasipalan

Today rasi palan - 18.02.2026

இன்றைய  பஞ்சாங்கம்

18-02-2026, மாசி 06, புதன்கிழமை, பிரதமை திதி மாலை 04.58 வரை பின்பு வளர்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் இரவு 09.16 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் இரவு 09.16 வரை பின்பு அமிர்தயோகம். சந்திர தரிசனம்.  

Advertisment

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  

Advertisment

இன்றைய ராசிப்பலன் - 18.02.2026

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

கடகம்

இன்று உங்களுக்கு வீண் கவலைகளும் குழப்பங்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

கன்னி

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இழுபறி நிலை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். 

daily rasipalan rasipalan today rasipalan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe