Today rasi palan - 08.01.2026
இன்றைய பஞ்சாங்கம்
08-01-2026, மார்கழி 24, வியாழக்கிழமை, பஞ்சமி திதி காலை 06.34 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பகல் 12.24 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 12.24 வரை பின்பு மரணயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 08.01.2026
மேஷம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உள்ள நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். பொருளாதார பிரச்சினைகள் நீங்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.
துலாம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
தனுசு
இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 06.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். தேவையற்ற குழப்பங்கள் சற்று விலகி மனநிம்மதி ஏற்படும். மாலைக்கு பிறகு அனுகூலமாக செய்தி கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது.
கும்பம்
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 06.39 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
Follow Us