Advertisment

இன்றைய ராசிப்பலன் -  01.03.2026

rasipalan

Today rasi palan - 01.03.2026

இன்றைய  பஞ்சாங்கம்

01-03-2026, மாசி 17, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி இரவு 07.09 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் காலை 08.34 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ - நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  

Advertisment

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

Advertisment

இன்றைய ராசிப்பலன் -  01.03.2026

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வு மந்த நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும்.

சிம்மம்

இன்று முடியும் என்று நினைத்த காரியம் பாதியிலேயே தடைப்படலாம். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு என்றாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. பெண்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். 

மகரம் 
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மீனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

today rasipalan daily rasipalan rasipalan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe