ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 11

கர்நாடகா நில ஊழல்!- LAND SCAM (KARNATAKA).

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

மத்திய பாஜக முன்னாள் முதல்வராக பொறுப்பு வகித்த சதானந்தகவுடா 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஏக்கர் நிலத்தைக் ஒதுக்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய் என்றும் ஆனால் அரசு வெறும் 30 லட்சம் ரூபாயை மட்டுமே விலையாக நிர்ணயித்தது என்று குற்றம்சாட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இந்த நிலம் ஒதுக்கீடை மாநில வருவாய்த்துறை ரத்து செய்தது.

கோவா நில ஊழல்- LAND SCAM (GOA).

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

கோவா தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாளராக இருந்தவர் திலிப் மல்வான்கர். இவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவர் கோவா மாநில பாஜக முன்னாள் முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகரின் மைத்துனர். டுயெம் தொழில்பேட்டையில் இடம் ஒதுக்கீடு செய்வதற்காக இவர் லஞ்சம் பெற்றார்.

எல்இடி பல்புகள் வாங்கியதில் ஊழல் (ராஜஸ்தான்)- LED BULBS SCAM (RAJASTHAN).

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

ராஜஸ்தான் மாநிலம் பொதுசுகாதாரத்துறை என்ஜினீரிங் துறைக்கு அளவுக்கதிகமான விலை கொடுத்து எல்இடி பல்புகள் வாங்கப்பட்டன. ஒரு 15 வாட்ஸ் எல்இடி பல்பின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றும், 9 வாட்ஸ் பல்பின் விலை 972 ரூபாய் என்றும், 12 வாட்ஸ் பல்பின் விலை 12 ஆயிரம் ரூபாய் என்றும் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த பரிசீலனையும் செய்யாமல் காண்ட்ராக்டர் சொன்ன 2 கோடி ரூபாய் விலையை அப்படியே சாங்ஷன் செய்திருக்கிறார்கள் பாஜக அரசின் அதிகாரிகள்.

சத்தீஷ்கர் பாஜக அரசின் நில ஊழல்- LAND SCAM (CHHATTISGARH).

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

சத்தீஷ்கர் மாநில அமைச்சராகவும் பாஜக தலைவராகவும் இருந்தவர் பிரிஜ்மோகன் அகர்வால். இவரது மனைவி சரிதா அகர்வால். இவர் அரசுக்குச் சொந்தமான வனத்துறை நிலம் 4.12 ஹெக்டேரை ஒரு ரிஸார்ட் கட்டுவதற்காக அபகரித்திருக்கிறார். அதுபோக, அதே திட்டத்திற்காக மேலும் 13.9 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக மேற்படி கம்பெனிக்கு பலமுறை அரசு நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது. ஆனால், தங்களுடைய சொந்த நிலத்தை மீட்டிருப்பதாக அந்தக் கம்பெனி பதில் அனுப்பியிருக்கிறது.

மகாராஸ்டிரா மாநில நில ஊழல்- MIDC LAND SCAM (MAHARASHTRA).

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

மகாராஸ்டிரா மாநில தொழில்வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ரூ 40 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 3.75 கோடி ரூபாய்க்கு அந்த மாநில அமைச்சர் ஏக்நாத் கேட்ஸே விற்பனை செய்திருக்கிறார். அதுவும் தனது மனைவி மற்றும் மருமகன் பெயரில் அந்த நிலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில சர்வீஸ் கமிஷன் ஊழல்- MPPSC SCAM.

thodargal athanur chozhan A z corruptions bjp scam part 11

வியாபம் ஊழல் வெளியாகி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் உதவி கலெக்டர் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு மத்தியப்பிரதேச மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்விலும் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கோடி ரூபாய் வரை பதவிகளுக்கு பேரம் நடைபெற்றது

color:black;mso-ansi-language:EN-US;mso-fareast-language:EN-US;mso-bidi-language:

AR-SA">அம்பலமாகியது. வியாபம் ஊழலுக்கு யார் காரணமாக இருந்தாரோ அவரே அவரே இந்த ஊழலிலும் முக்கியஸ்தராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

athanurchozhan BJP SCAM PART 11
இதையும் படியுங்கள்
Subscribe