Advertisment

முறை தவறிய உறவால் நடந்த விபரீதம்; குழப்பத்தில் அலைந்த போலீஸ் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :77

thilagavathi ips rtd thadayam 77

Advertisment

இந்தியாவையே உலுக்கிய சம்பவமான ஷீனா போரா என்ற இளம்பெண்ணின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

ஷீனா போரா என்ற இளம்பெண் காணாமல் போன வழக்கு இது. 2012 ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், மும்பையில் இருந்து 84 கி.மீ தூரம் உள்ள ராய்காட் எனும் காட்டுப்பகுதியில், ஒரு மனித உடலை சாக்கு மூட்டையைகட்டிக் கொண்டு காரில் இருந்து மூன்று பேர் இறங்கி அந்த மனித உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிடுகிறார்கள். அது முழுமையாக எரிந்த பின்னர், அவர்கள் மூவரும் மும்பைக்கு திரும்பி வந்துவிடுகிறார்கள். சில வாரங்கள் கழித்து, அந்த காட்டுப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவருக்கு, தீயில் கருகிய வாசம் வருகிறது. அதன்படி, அந்த பகுதிக்கு சென்று பார்க்கையில், மனித உடல் வெளிப்படுகிறது. உடனடியாக இது குறித்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கொடுக்கிறார். அதன் பேரில், அங்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல், அந்த மனித எலும்புகளை மட்டும் சேகரித்து வைக்கிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், இந்த சம்பவம் பற்றி யாருக்கும் தெரியாமல் போகிறது. இதற்கிடையில் மூன்று வருடங்கள் செல்கிறது. இதையடுத்து, முக்கியமான காவல்துறை அதிகாரி ஒருவருக்கு மீரட்டில் இருந்து சில தகவல்கள் சொல்லப்படுகிறது.

அந்த தகவலை வைத்து, ஷியாம்வர் பிண்டுராம் ராய் என்பவரை பின் தொடர்ந்து சென்று விசாரிக்கிறார். அப்படி ஷியாம்வர் ராய்யை போலீசார் பின்தொடர்ந்து அவரை போலீசார் சோதனை செய்து பார்த்ததில், ஷியாம்வர் கையில் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்து விசாரித்தனர். உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருந்ததால், அவரை போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிக்கின்றனர். அதில், இந்திராணி முகர்ஜி என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்திராணி முகர்ஜியின் கணவர் பீட்டர் முகர்ஜி, ஸ்டார் டிவியின் இந்திய பிரிவினுடைய தலைவராக 10 வருடமாக வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். இந்திராணிக்கும் அவருடைய தங்கைக்கும் இடையேபிரச்சனை இருந்ததால், இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவர் சஞ்சய் கண்ணாவை இந்திராணி வரவழைத்து, ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொன்று மும்பையில் இருந்து 84 கி.மீ தூரம் தள்ளி புதைத்த போது தான், கூட இருந்ததால் தன்னை பாராட்டி இந்த துப்பாக்கியை இந்திராணி கொடுத்ததாகச் சொன்னார். அதன்படி, புதைக்கப்பட்ட இடத்தில் போலீசார் தேடி பார்த்ததில், அங்கு சில உடல் பகுதிகள் இருந்தது. ஏற்கெனவே, கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளையும் இந்த மனித உடலை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை செய்கிறார்கள். இதற்கிடையில், 21-08-2015 ஆம் ஆண்டில் ஷியாம்வரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

Advertisment

அதில், 24 ஏப்ரல் 2012 ஆண்டில் சஞ்சய் கண்ணாவை கொல்கத்தாவில் வரவழைத்ததன் பேரில், அவர் இங்கு வந்து ஹில்தாப் என்ற ஹோட்டலில் தங்கியிருக்கிறார். ஒரு வாடகை காரை எடுத்து, ஷியாம்வர் ஓட்ட சஞ்சய் கண்ணாவும் இந்திராணி முகர்ஜியும் பயணிக்கிறார்கள். இதற்கிடையில், இந்திராணி அழைத்ததன் பேரில் கொல்லப்பட்ட ஷீனா போராவின் காதலன் ராகுல் முகர்ஜி, பாந்த்ரா என்ற ஏரியாவில் அந்த பெண்ணை ட்ராப் செய்கிறார். ஏற்கெனவே, இந்திராணிக்கும் ஷீனா போராவுக்கும் காதல் சம்பந்தமான பிரச்சனை இருப்பதால் ராகுல் பயந்தாலும் ஷீனா போராவை இறக்கிவிடுகிறார். இதையடுத்து, இந்திராணி வந்த காரில் ஷீனா ஏறி பயணிக்கிறார். இதனை தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு காரை ஓட்டிச் சென்று, அங்கு வைத்து ஷீனா போராவை சஞ்சய் கண்ணா கழுத்தை நெரித்து கொலைசசெய்கிறார். அதன் பின்னர், சாக்கு பையில் ஷீனா போராவின் உடலை கட்டிவிட்டு புதைப்பதற்காக சென்ற போது போலீஸ் நடமாட்டம் இருந்ததால் திரும்பி இந்திராணி வீட்டுக்கு வந்து அதிகாலை 3 மணியளவில் புதைப்பதற்காக செல்கிறார்கள். போலீஸ் நடமாட்டம் இருக்கும் என்ற பயத்தால், சாக்கு பையில் இருந்து ஷீனா போராவின் உடலை வெளியே எடுத்து உயிரோடு இருப்பது போல் அலங்காரம் செய்து அந்த காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்கிறார்கள் என்று ஷியாம்வர் விசாரணையில் சொல்கிறார்.

ஷியாம்வரை கைது செய்த பின்னால், 25ஆம் தேதி இந்திராணியை கைது செய்து விசாரிக்கிறார்கள். அதில், இந்திராணி முகர்ஜியின் தங்கை ஷீனா போரா என்பது தெரிகிறது. மேலும், ஷீனா போராவின் காதலனான ராகுல் முகர்ஜி, இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியின் மகன் என்பதும் தெரிகிறது. காதலி ஷீனா போரா காணாமல் போனதை போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும், இந்திராணியின் அதிகாரத்தால், காவல்துறையும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சஞ்சய் கண்ணாவுக்கும், இந்திராணிக்கும் பிறந்த, விதி என்ற பெண் குழந்தை 9 வயதாக இருக்கும் போது குழந்தையை தூக்கிக்கொண்டு இந்திராணி அங்கிருந்து கிளம்பி மும்பைக்கு வந்து விவாகரத்து வாங்கி அடுத்த வருடம் பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்துகொள்கிறார். ஏற்கெனவே திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்று பெரும் பணக்காரராக இருக்கும் பீட்டர் முகர்ஜிக்கு சொத்துக்காக தனது பெண் குழந்தையை இந்திராணி தத்து கொடுக்கிறார். ஆனால், நாளடைவில் பீட்டர் முகர்ஜி தனது மகன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலும், ஷீனா, பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜியைதிருமணம் செய்யவிருப்பதாலும் சொத்து எல்லாம் தன்னை மீறி சென்றுவிடும் என்ற பயத்தை சஞ்சய் கண்ணாவிடம் சொல்லி ஷீனா போராவை கொலை செய்ய திட்டுமிட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

இந்திராணி பற்றி போலீசார் விசாரிக்க விசாரிக்க, தெளிவுபடுவதற்கு பதிலாக குழப்பங்கள் தான் அதிகமாக வருகிறது. கெளகாத்தில் இருக்கக்கூடிய உபேந்திரா என்பவருடைய மகள் இந்திராணி. இவரது அம்மா பெயர் துர்கா ராணி. போரி போரா என்பது தான் இந்திராணியின் இளம்பெயர். தனது 19 வயதில் சிராக் என்பவரை இந்திராணி காதலிக்கிறார். வேலைக்கு எதுவும் செல்லாததால், சிராக்குக்கு கணேஷ் புரி எனும் பகுதியில் ரெஸ்டாரண்டை இந்திராணியின் அப்பா வைத்துக் கொடுக்கிறார். ரெஸ்டாரண்டை சிராக் ஒழுங்காக நடத்த முடியாத நேரத்தில் படிப்பிற்காக ஷில்லாங்கில் லேடி கிங் காலேஜில் சேர்கிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே, சித்தார்த் தாஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாகி அதன் பின், இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். இதில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கிறது. அதில், 1987ஆம் வருடத்தில் ஷீனா போரா பிறக்கிறாள். 1988ல் மிக்கேல் என்ற ஆண் குழந்தை பிறக்கிறான். தங்களுக்கு வரும் சிறிய பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் கவனித்து வருகின்றனர். அதனால், கஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கை இந்திராணிக்கு பிடிக்காமல் போனதால், 1999ல் சித்தார்த் தாஸை விட்டு விலகி இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய பெற்றோரிடம் இந்திராணி ஒப்படைத்துவிட்டு கொல்கத்தாவுக்கு செல்கிறார். அங்கு ஓரளவு பணம் படைத்த பணக்காரர் ஒருவருடன் இந்திராணி பழக்கத்தைஏற்படுத்திக் கொள்கிறார். அந்த நபரின் மனைவிக்கு, இவர்களது தொடர்பு தெரிந்ததும் ஆத்திரமடைந்து சண்டை போட்டதால், அந்த உறவில் இருந்து இந்திராணி வெளியே வந்துவிடுகிறார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe