Advertisment

பெண்களை பின்தொடரும் சீரியல் கில்லர்; சோளக்கொல்லையில் நடக்கும் கொடூரச் சம்பவம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :73

thilagavathi ips rtd thadayam 73

Advertisment

உமேஷ் ரெட்டி என்ற சீரியல் கில்லர் செய்த கொடூரச் சம்பவங்களை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

கர்நாடகா மாநிலம், சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமேஷ் ரெட்டி. 13/11/1996 ஆம் தேதியன்று, நகைகளை அணிந்துகொண்டு அரசு ஊழியராக பணிபுரிந்து வரும் திவ்யா என்ற பெண், மாலை நேரத்தில் நடந்து சென்றிருக்கிறாள். இந்த சமயத்தில், உமேஷ் ரெட்டி அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று, அந்த பெண்ணின் தலை முடியை இழுத்து, கழுத்தை நெரித்து அருகில் உள்ள சோளக்காட்டு கொல்லைக்கு தள்ளிச் செல்கிறார். காதுகளை அறுத்தும், மூக்கை வெட்டியும் அந்த பெண் போட்டிருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து செல்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த திவ்யா, மயக்க நிலைக்கு சென்று, அதன் பின் கண் விழித்து கூச்சல் போடுகிறார். அதன்படி, அங்கு வந்த நபர்களிடம் பாலியல் வன்கொடுமை செய்ததை தவிர திருடிய சம்பவத்தை மட்டும் அந்த பெண் சொல்கிறார். இதன் பேரில், காவல்துறையும் பதிவு செய்துகொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், டிசம்பர் 6ஆம் தேதி பல்லவி என்ற சிறுமி, மில்லுக்கு சென்று கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில், உமேஷ் ரெட்டி அந்த சிறுமியை தடுத்து அதே மாதிரியாக கொலை செய்து அதன் பின்பு, பாலியல் வன்கொடுமை செய்து சோளக்கொல்லையில் போட்டு தப்பித்துவிடுகிறார். இதில் வெளியே சென்ற பல்லவியை மாலை வரை வீடு திரும்பாததால், அவருடைய வீட்டார் பல இடங்களில் தேடி வருகின்றனர். எங்கு தேடியும் கிடைக்காததால், அடுத்த நாள் மாலை நேரத்தில் சித்திரதுர்கா போலீசில் புகார் கொடுக்கிறார்கள். அதன்பேரில், காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து பல்லவியை தேடி வந்தாலும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, 8ஆம் தேதி பல்லவியின் சடலம் கோளக்கொல்லையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது. அங்கு சென்று பார்க்கும் போது, பல்லவி அடையில்லாமல் அரை நிர்வாணமாக இருப்பதை பார்த்து ஆச்சரியமடைகின்றனர். பல்லவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். பெண்ணுடைய பிறப்புறுப்பில் அதிகளவில் காயம் இருப்பதாகவும், சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பதால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் அறிக்கையில் தெரிகிறது.

Advertisment

அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு சம்பவங்கள் இதே போல் நடந்திருப்பதால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படி விசாரிக்கையில், பல்லவி இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, அதே இடத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று தெரியவருகிறது. உயிருடன் இருக்கும் அந்த பெண்ணை பற்றி விசாரிக்கும் போது அவள் பெயர் கீதா என்று தெரிகிறது. அவளிடம் சென்று போலீசார் விசாரிக்கிறார்கள். ஒரு நாள், தொப்பி அணிந்து வந்த நபர் கீதாவை பின் தொடர்ந்து வந்து இழுத்து பிடித்து சோளக்காட்டு கொல்லையில் கூட்டி செல்கிறான். அப்போது அங்கு வந்த கீதாவினுடைய அப்பா, அந்த நபரை தாக்குகிறார். இதில் தைரியமான கீதா, அவனின் தலைமுடியை பிடிக்க பார்க்கையில், குறைவான முடி இருந்ததால் முடி சிக்கவில்லை. இதனால், பக்கத்தில் கற்களை எடுத்து அப்பாவும், மகளும் சேர்ந்து அவனை தாக்குகிறார்கள். இதில் நெத்தியில் ரத்த காயமடைந்த அவன், அங்கிருந்து தப்பிச் செல்கிறான். அதன் பிறகும் அப்பாவும் மகளும் வீட்டுக்கு வருகிறார்கள் என்று போலீசுக்கு தெரியவருகிறது.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து ஊர்காவல் படை பயிற்சிக்காக கீதா சென்ற போது, அங்கு அந்த நபர் சுத்தம் செய்து கொண்டிருருந்ததாக கீதா மூலம் போலீசுக்கு தெரிகிறது. இதனையடுத்து, அந்த தேதியில் அந்த பயிற்சி மையத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த 4 பேரையும் தங்களுடைய ஸ்டேசனுக்கு சுத்தம் செய்யுமாறு பயிற்சி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். அதன்படி, அங்கு வந்த நான்கு பேரில், கீதாவிடம் தவறாக நடந்த கொண்ட அந்த உமேஷ் ரெட்டியை கீதா அடையாளம் கண்டு போலீசிடம் சொல்கிறார். உமேஷிடம் போலீஸ் தொடர்ந்து விசாரித்ததில், அவன் தொடர்ந்து மறுக்கிறான். இறுதியில் அவன் கூறியது பொய் என கண்டுபிடிக்கிறார்கள். உமேஷ் தங்கிருக்கும் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்கிறார்கள். அதில், இருந்த இரும்புபெட்டியில் திவ்யாவின் நகைகள் இருக்கிறது. பல்லவிக்கும் அவருடைய சகோதரிக்கும் வாங்கிய கால் கொலுசை இவனிடம் இருந்து எடுத்தால் ஏதாவது ஆதாரம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அந்த கொலுசை அந்த வீடு முழுவதும் தேடுகிறார்கள். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, அந்த பெட்டி நிறைய பெண்களுடைய உள்ளாடைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.

இவனை அவனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அவனை பற்றி விசாரிக்கையில், உமேஷின் அம்மா அனைவரிடம் அன்பாக பழகக்கூடியவர். ஆனால், இவனுடைய அப்பா, எப்போதும் ரகளையில் ஈடுபடுபவர். உமேஷ் சிறுவயதாக இருக்கும் போதே, கூட படிக்கும் பெண்களுடைய பென்சில், நோட் புக் போன்ற பொருட்களை திருடுவான். வளர வளர, யாரிடாவது கொல்லைக்குச் சென்று தானியம் அல்லது ஆடுகளை திருடி, அதை விற்று பணம் சம்பாரிப்பதுமாய் இருந்திருக்கிறான். காலேஜ் முடித்த பிறகு சிஆர்பிஎஃபில் செலக்சன் ஆகிறான். பயிற்சியை முடித்த பின் ஜம்மு காஷ்மீரில் உள்ள கமாண்ட் ஆபிஸரின் வீட்டு காவலாளியாக வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, கமாண்ட்டரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்கிறான். இதை தெரிந்து கமாண்டர், அவனை பிடித்து வேலையில் இருந்து தூக்கிவிடுகிறார். அதன் பிறகு, இங்கு வந்த உமேஷ் காவல்துறை பயிற்சியில் செலக்ட் ஆகிவிடுகிறார். அங்கு அவர் பயிற்சி பெற்று வந்தார். தினமும் பயிற்சி முடிந்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் பெண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe