Advertisment

போலீசில் மகன் கொடுத்த புகார்; பேராசையால் நடந்த கொடூரம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :71

thilagavathi ips rtd thadayam 71

Advertisment

கேரளாவையே உலுக்கிய நரபலி சம்பவம் பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

இந்த சம்பவத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், மனித குலத்தினுடைய நாகரித்திற்கே சவால் விடுகிற நடவடிக்கையாக இது இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்படி கேரளாவை உலுக்கிய சம்பவம் இது.

கேரளா மாநிலம், கொச்சியில் கடவந்தரா போலீஸ் ஸ்டேசனில் செல்வராஜ் என்ற தமிழர் ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரில், தருமபுரியில் இருந்து எனது அம்மா அப்பா, சித்தி என அனைவரும் கேரளாவில் 15 வருடமாக தோட்ட வேலைகள் செய்து வந்தனர். தோட்ட வேலை இல்லாத நேரத்தில், எனது அம்மா லாட்டரி டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார். இந்த நிலையில், எனது அம்மாவை செப்டம்பர் 26ஆம் தேதியில் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அவர் அளித்த அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ்ஜின் அம்மாவை பற்றி அனைவரிடமும் விசாரணை நடத்துகின்றனர். ஒரு மாதம் கடந்த பின்னும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அந்த அம்மாவினுடைய செல்போனை எடுத்து சோதனை செய்த போது தான் அவர், முகமது ஷபி என்பவருடன் அடிக்கடி பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. அதன்படி, சிக்லுர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் முகமது ஷபியை கண்டுபிடித்து அவருடைய செல்போனை சோதனை செய்கையில், அந்த அம்மாவுடன் இவர் பேசியிருப்பது உறுதியாகிறது. மேலும், அந்த அம்மா காணாமல் போன தேதியன்று முகமது ஷபி, எங்கு எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்று அவரது செல்போன் மூலம் தேடி பார்க்கும்போது, பட்டணம்திட்டா மாவட்டம், இலத்தூர் என்ற ஊர் வரைக்கும் சென்று, அந்த அம்மாவினுடைய செல்போனில் உள்ள எல்லா சிக்னலும் கட்டாகி இருப்பது தெரிந்தது.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அனைத்தையும் சோதனை செய்து பார்க்கிறார்கள். அந்த வீடியோவில், ஒரு காரில் முகமது ஷபி இறங்குவதும், இவரை தொடர்ந்து காணாமல் போன பத்மா என்ற பெண்மணியும் இறங்குவதுமாக இருக்கிறது. மேலும், அவர்கள் இருவரும், சாலை கடந்து செல்வதுமாக இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, அந்த பகுதி முழுவதும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். பகவத் சிங் என்ற ஆயுர்வேதிக் வைத்தியர் விட்டிற்கு, முகமது ஷபி அடிக்கடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், முகமது ஷபியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், பகவத் சிங் வீட்டில் அந்த அம்மாவை நரபலி கொடுத்ததாகச் சொன்னார். பகவத் சிங் பணச்சிக்கலில் இருப்பதால், அவருக்கு பொருளாதாரத்தில் அதிகப்படியான வருவாய் வருவதற்காக பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று பகவத் சிங் என்னிடம் கேட்டார். அதன்படி, அந்த அம்மாவிடம் அதிகப்படியான வருமானம் வரக்கூடிய வேலைக்கு சேர்த்துவிடுவதாகக் கூறி இந்த நரபலியை கொடுத்தோம் என்று கூறுகிறார்.

இதையடுத்து, பகவத் சிங்கிடம் விசாரணை நடத்துகிறார்கள். முற்போக்கு கருத்து கொண்ட நான், முகநூலில் நிறைய கவிதைகள் பதிவிடுவேன். அதன்படி, அப்படி முகநூல் மூலமாக ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் பழக்கமான பின், அவரிடம் என்னுடைய பொருளாதார சிக்கல்களை பகிர்ந்துகொண்டேன். அவர் தான் மாந்தீரிகம் செய்யக்கூடிய முகமது ஷபியை பற்றி என்னிடம் சொன்னார். அதன்படி, அவரை தொடர்பு கொண்டு இந்த நரபலி நடத்தப்பட்டது எனச் சொன்னார். இதையடுத்து, மேற்படி போலீசார் விசாரணை நடத்தியதில், முகமது ஷபியே முகநூல் ஸ்ரீதேவி என்று பேக் ஐடியை உருவாக்கி அங்கு பலரையும் தொடர்புகொண்டு நரபலி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், தான் பகவத் சிங், முகமது ஷபியின் வலையில் விழுந்திருக்கிறார். நரபலி கொடுத்தால், பொருளாதார சிக்கல் தீர்ந்துவிடும் என பகவத் சிங்கை நம்ப வைத்து அவரிடம் இருந்து கிட்டத்தட்ட ரூ. 6 லட்ச பணம் வாங்குகிறார்.

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe