Advertisment

ஏரிக்குள் கிடந்த மர்ம பீப்பாய்; வருடங்கள் கடந்து தெரிய வந்த உண்மை - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 53

Thilagavathi Ips rtd thadayam 53

ஒரு சிறிய ஸ்குரூ வைத்து ஒரு பெண்ணின் கொலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

Advertisment

கொச்சின் பனங்காடு ஏரியில் நெடுநாட்களாக காலமாக ஒரு நீல நிற பீப்பாய் ஒன்று சந்தேகப்படும்படி மிதந்து கொண்டு இருக்கிறது. அந்த ஏரியை சுத்தம் செய்யும் போது தான் அந்த பீப்பாய் எடுத்து கரையில் ஓரமாக வைக்கின்றனர். கரையில் வைத்தவுடன் அதில் துர்நாற்றம் வீசுகிறது. அதை கவனித்த மக்கள் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்திலிருந்து வந்து அதிகாரிகள் அதை உடைத்து பார்த்ததில் உள்ளே கான்கிரீட் உடன் கொஞ்சம் எலும்புகளோடு ஒரு ஆணி போல ‘மல்லியோலர் திருகு’, அதனுடன் ஒரு வாஷர், மற்றும் ஒன்றரை அடி நீளமுள்ள முடி கிடைக்கிறது. மேலும் மூன்று 500 ரூபாய் நோட்டுகளும் ஒரு நூறு ரூபாய் தாளும் பண மதிப்பிழப்பு நடப்பதற்கு முன்பு பயன்படுத்திய பழைய தாள்களாக இருக்கிறது. எனவே இது 2016க்கு முன்பு நடந்ததாக இருக்கலாம் என்று உறுதி செய்யபடுகிறது.

Advertisment

ஒரு சர்ஜனை கூப்பிட்டு அவரிடம் கருத்து கேட்டபோது, தாடை எலும்புகளை பார்க்கும் போது இது ஒரு பெண்ணுடலாக தான் இருக்கும் என்றும் உயரம் குறைவானதாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்ணினுடைய உடலாக இருக்கலாம் என்று சொல்கிறார். கொலைக் குற்றமாக ஐ. பி. சி 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கென்று ஒரு தனி படை அமைத்து விசாரிக்கின்றனர்.

அங்கிருந்து கடம்பு சேரியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு கிடைத்த எல்லா பொருள்களையும் கொடுத்து எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது கணுக்காலில் அறுவை சிகிச்சை ஏற்படும் போது பயன்படுத்தக்கூடியது தான் இந்த மல்லியோலார் திருகு என்றும் அதில் PITKAR என்று பொரிக்கப்பட்டிருந்ததை வைத்து அதை தயாரித்த நிறுவனம் மற்றும் பேட்ச் நம்பர் வைத்து விசாரித்ததில் அந்த பேட்ச்சில் மொத்தம் 161 திருகில் ஆறு மட்டுமே கேரளாவுக்கு கொடுத்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது.

அந்த ஆறு திருகுகள் எந்த மருத்துவமனைக்கு அளித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த மருத்துவமனைகளுக்கு சென்று ரெக்கார்ட்ஸ் விசாரிக்கப்பட்டது. கிடைத்த 6.5 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த ஸ்க்ரூ சகுந்தலா என்ற 60 வயது பெண்மணிக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றனர். எனவே ஹாஸ்ப்பிட்டல் ரெக்கார்ட்படி தொடர்பு கொள்ள வேண்டிய நபராக உதயம் பேரூரில் இருக்கும் தனது மகள் அஷ்மதி பெயரை கொடுத்திருக்கிறார் என்று அறியப்பட்டு அஷ்வதியிடம் விசாரிக்கின்றனர்.

அவள் மூலம் போலீஸ் அந்த சகுந்தலா வாழ்க்கை பற்றி சில தகவல்களை பெறுகின்றனர். அவர் உதயம் பேரூர் என்ற ஊரில் பிறந்து ஆறு மாத குழந்தையாக இருந்த போது சரஸ்வதி அம்மா என்ற ஒரு பெண் தத்தெடுத்து வளர்க்கிறார். அவரை வளர்த்து தாமோதரன் என்று ஒரு முன்னணி கட்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், கட்சி தொடர்பாக ஒரு முறை இவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இவருடைய மகனும் விபத்தாகி பின்னர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அஸ்வதியும் வீட்டை விட்டு ஓடி செல்கிறார். யாரும் துணை இல்லாததால் தன் வாழ்க்கை வருமானத்திற்காக ஸ்கூட்டியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வருகிறார். அப்படி ஸ்கூட்டியில் செல்லும்போது தான் ஒரு முறை விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் போது அந்த திருகு வைக்கப்படுகிறது.

அது செப்டம்பர் 15ஆம் தேதி 2016 அன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அதன் பின்னர் தான் மகள் வீட்டிற்கு சென்று தங்கியபோது சின்னம்மை போட்டு இருக்கிறது. அதனால் அஸ்வதி தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு லாட்ஜ் எடுத்து தங்குகிறாள். பின்னர் 26 ஆம் வீட்டிற்கு வந்தபோது தனது அம்மா அங்கு இல்லை என்று சஜித் என்பவனிடம் கேட்டபோது அவர் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கிறார் அவரை தேடாதே என்று சொல்லி விடுகிறான். இதுவரை தான் போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கின்றனர். அடுத்த கட்ட விசாரணைக்காக சஜித் என்பவரை சந்தேகித்து விசாரிக்கும் போது திருப்பணித்துறை என்ற ஊரில் சரிகா என்ற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார் என்று கண்டுபிடிக்கின்றனர். அங்கு சரிகாவை விசாரித்த போது தனது அம்மாவிற்கு இரண்டாவது திருமணத்தின் போது பிறந்த குழந்தை தான் சரிகா என்றும், சஜித் என்பவரை 18 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் எட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வருவதாக சொல்கிறார். மேலும் தன் கணவன் அஸ்வதி என்ற பெண்ணை அறிமுகம் செய்து அவள் அனாதையாக இருப்பதாகவும் தான் தான் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் பண உதவி செய்வதாக சொன்னார் என்று குறிப்பிடுகிறார்..

கிடைத்திருக்கும் தகவலை வைத்து மேற்கொண்டு விசாரித்ததில் சகுந்தலா மகள் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தபோது சஜித் பற்றி உண்மையை தெரிந்து கொள்கிறாள். அவனிடம் கண்டித்து திருமணமானது பற்றி தன் பெண்ணிடம் சொல்லி சொல்லி விடுவேன் என்று கண்டித்து அவனை முந்தைய மனைவியிடமே போய் வாழுமாறு சொல்லி பார்க்கிறார். ஆனால் அதைக் கேட்காததால் சஜித் சகுந்தலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொன்று தனக்கு தெரிந்த நான்கு நண்பர்களை வைத்து ஒரு பீப்பாயில் கான்கிரீட் நிரப்பி கொன்ற எலும்புகளை போட்டு அப்படியே செங்குத்தாக நிற்கிற நிலையில் நகர்த்திக் கொண்டு சென்று ஏரியில் போட்டு விடுகிறார். இதன் பின்னர் உண்மையை போலீஸ் கண்டுபிடித்து தன்னை போலீஸ் தேடுகிறது என்று தெரிந்தவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe