Advertisment

பெண்களை குறி வைத்து கொன்ற சயனைட் மல்லிகா - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 52

thilagavathi ips rtd thadayam 52

Advertisment

பெண்களை ஏமாற்றி சடலங்களை குவித்த ‘சைனைட் மல்லிகா’ வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

அடுத்ததாக ஆறு வருடங்கள் கழித்து திட்டமிட்டு குறையோடு வரும் பெண்கள் அதிகமாக சேருமிடமான மருத்துவமனை, கோவில்கள் என்று குறிவைத்து தன் கொலைகளை செய்கிறாள். இப்படியாக கெம்பம்மா மேலும் 50 வயதான சாத்தனூரைச் சேர்ந்த எலிசபெத் தன் பேத்தியைக் கண்டுபிடிக்க வர அவளை கோவில் வளாக அறைக்கு அழைத்துச் சென்று பலகாரத்தில் சைனைட் கலந்து குடுத்து கொல்கிறாள். மருத்துவமனையில் சந்தித்த 60 வயதான யசோதாம்மா சித்தகங்கா மடத்தில் கொல்லப்பட்டார். இப்படிதான் முனியம்மா என்பவர் யடியூர் சித்தாலங்கேஷ்வர் கோயிலில் 15.12.2007 அன்று கொல்லப்பட்டார். 60 வயதான பில்லாமா, ஹெப்பல் கோவிலுக்கு ஒரு புதிய வளைவை நிறுவ ஆசைப்பட்டதை அறிந்து அவருக்கு நிதியுதவி செய்வதாக கெம்பம்மா உறுதி அளித்து, அவரையும் தன் வழக்கமான முறையில் மத்தூர் வியாத்யநாதபுரத்தில் கொல்கிறாள். ஒரு 30 வயதுடைய பெண் தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் வேண்ட அவளையும் தன் இரையாக்கி கொல்கிறாள்

இப்படி நிறைய கொலைகள் ஆங்காங்கு ஆதாரமில்லாமல் நிறைய பிணங்கள் கிடைக்கின்றன. மேலும் 2006ல் ரேணுகா என்ற பெண் காணாமல் போய் சடலம் கிடைக்கிறது. கெம்பம்மா சமையற்காரராக வேலை செய்த இடத்தில் மணியும் வேலை செய்து வந்தார். கெம்பம்மா மணியின் சகோதரி ரேணுகாவுடன் பேசி பழகி அவளுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற குறை இருப்பதை தெரிந்து கொண்டு கெம்பம்மா கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு யாத்ரீக மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறாள். அதேபோல வரவழைத்து போலி பூஜை நடத்தி கொன்று விடுகிறாள். அப்போது வேலைக்கு சென்றிருந்த ரேணுகாவின் கணவர் துபாயில் இருந்து வருகிறார். ஏற்கெனவே பிரபலமான முறையில் நிறைய கோவில் தொடர்பான கொலைகள் நிறைய பார்த்ததால் கணவர் போலீசில் புகார் அளிக்கிறார். ஏற்கெனவே நிறைய புகார்கள் இதுபோல பதிந்ததால் இந்த கொலையும் சேர்த்து மொத்தம் எட்டு கொலைகள் கெம்பம்மா மீது பதியப்படுகிறது.

Advertisment

கோர்ட் விசாரணையின் போது திறமையான வக்கீலின் வாதாடலால் எலிசபெத் வழக்கில் கிடைத்த எல்லா பத்து சாட்சியையும் உறுதியாகஇல்லை என்று கெம்பம்மாவை அதிலிருந்து விலக்குகிறார். ஆனால் நாகவேணி கொலையின் போது மட்டும் அறை ரிஜிஸ்டர் செய்யும்போது ஒரே கையெழுத்தினால் தொடர்புபடுத்தி அதில் மாட்டி கொள்கிறார். இதில் முனியம்மா வழக்கின் மீது கிடைத்த ஆதாரம் வைத்து அது மட்டும் முக்கிய வழக்காக கருதப்படுகிறது.

ஆனாலும் அந்த வழக்கில் கெம்பம்மா பக்கமுள்ளவக்கீல் போலீசாரிடம் இவர் தான் குற்றவாளி என்றால் பேருந்து நிலையத்தில் இவரை பிடித்த போதே அங்கிருந்த ஐந்து சாட்சியங்களை வைத்து அப்பொழுதே அவரிடம் கைப்பற்றப்பட்டதை வழக்கு பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அப்படி செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தான் சைனைட் கொப்பி வாங்கி, போலிசாவி, ரசீது என்று எல்லாவற்றையும் வாங்கி நீங்கள் செட் செய்திருக்கிறீர்கள் என்று மாத்திவிடுகிறார். அப்படி செய்தும் சாட்சியத்தின் போது அடகு கடை ரசீது வைத்து அந்த கடையின் உரிமையாளரை அழைத்து சாட்சியாக விசாரிக்கிறார்கள். அவரும் இந்த அம்மா காட்டி கொடுத்து அவர் வைத்த நகைகளையும் சொல்லி விடுகிறார். மேலும் அவருக்கு தான் தான் ரூம் அளித்தேன் என்று அந்த கோயில் வளாகத்தில் சாவி கொடுத்தவரும் சாட்சி சொல்லிவிடுகிறார். இப்படியாக கிடைத்த ஆதாரத்தை வைத்து இந்தியாவில் முதல் முறையாக மரண தண்டனை பெற்ற முதல் பெண் குற்றவாளியாகிறார் சயனைடு மல்லிகா. மொத்தம் எட்டு வழக்கில் எலிசபெத் கேஸ் தவிர பாக்கி ஏழு வழக்குகளில்இரண்டு வழக்குகள் தூக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டு மீதம் ஆயுள் தண்டனையாக கொடுக்கப்பட்டுபின்னர் எல்லா வழக்குகளுக்கும் சேர்த்து ஆயுள் தண்டனை கொடுத்து விட்டனர்.

இத்தனை கொலைகளுக்கும் இருக்கும் அந்த பெண்ணின் ஒரே பின்னணி தன் வறுமையின் காரணமாக செய்ததுதான். முதலில் ஆறு வருடங்கள் செய்யாமல் இருந்தாலும் தன் பெண்களை வேற இடத்தில் திருமணம் செய்துகொடுத்த பின்னர் டாக்ஸி டிரைவராக இருக்கும் தன் மகனுக்கு சொந்தமாக ஒரு டாக்ஸி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 2006ல் இருந்து இத்தனை கொலைகள் அவர் செய்து இருக்கிறார். எனவே பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தன் குறைகளை கூறுவது தன் அந்தரங்க விஷயங்களை பகிர்வது என்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் அவர்களை அனுப்பிவிட்டு வேறு ஒரு நபரை தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர் சொல்வது போல செய்தால், இது போல தான் உயிர் போகும். அசம்பாவிதம் நடக்கும். எவ்வளவு மன உருக பேசினாலும் சுய பாதுகாப்பை மக்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe