Advertisment

குடும்பத்தையே கொலை செய்த மாணவி; உதவிய ஆசிரியர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 40

thilagavathi-ips-rtd-thadayam-40

Advertisment

தன்னுடைய தவறான பழக்கவழக்கத்தால் நான்கு கொலைகளுக்கு காரணமாக அமைகிறாள் பள்ளி மாணவி. அது குறித்து நம்மிடையே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

தன்னுடைய டியூசன் ஆசிரியருடன்ஏற்பட்ட நெருக்கத்தால் அவருக்கு பண உதவி செய்ய விரும்பிய மாணவி, அவருக்கு தன்னுடைய நகையை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள். ஒரு நாள் மோதிரம் காணாமல் போனதாக தன்னுடைய தாயிடம் சொல்லிய போது அவளது அம்மா கடுமையாக அடித்து விடுகிறார்

அன்று மாலை வந்த டியூசன் ஆசிரியரிடம் தன் அம்மா தன்னை கடுமையாக தாக்கி வருகிறார், அதனால் அவரை நான் கொல்லப் போகிறேன் என்றிருக்கிறார். அவரோ எப்படி கொல்லப் போகிறாய் என்று கேட்டதற்கு சுற்றுலா செல்லும் போது மலையிலிருந்து கீழே பிடித்து தள்ளி விடலாம் என்றிருக்கிறேன் என தன் திட்டத்தைச் சொல்கிறாள்

Advertisment

ஆனால், டியூசன் ஆசிரியர் வேறொரு ஐடியா சொல்கிறார். அவர் ஒரு கெமிஸ்ட்ரி ஆசிரியர். அதனால் நிறையா கெமிக்கல் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார். இரண்டு கெமிக்கல்களைக் கலந்தால் உயிர் போய் விடும் என்பதை கண்டறிந்து அதை வாங்கிக் கொண்டு வந்து இவளிடம் தருகிறார்.

இவளும் அதை ஒரு ஸ்வீட் பாக்சில் கலந்து வீட்டில் உள்ள தன்னுடைய தாய்க்கு கொடுக்கிறாள். அந்த அம்மாவிற்கு பிடித்த ஸ்வீட் என்பதால் விரும்பி சாப்பிடுகிறார், உடனேயே மயங்கி விழுகிறார், அந்த நேரத்திற்கு வீட்டிற்கு வரும் தந்தைக்கு தாய் மயங்கி விழுந்ததை மறைப்பதற்காக அவருக்கும் கொடுக்கிறாள், அப்படியே தாத்தா, பாட்டிக்கும் கொடுக்கிறாள். அனைவரும் மயங்கி விழுந்து இறந்து போகிறார்கள்

பின்னர் டியூசன் ஆசிரியரின் உதவியுடன் மின்சார வயர்களைக் கொண்டு அனைவரையும் கட்டிவிட்டு தன்னையும் கட்டிப் போட்டுக் கொண்டு கொலைகாரர்கள் செய்தது போல சித்தரித்திருக்கிறார். இதையெல்லாம் தான் மட்டும் செய்யவில்லை, தன்னுடைய டியூசன் ஆசிரியரின் உதவியுடன் செய்ததாக அப்ரூவர் ஆகிறார். இளம் வயது என்பதாலும், தன்னுடைய தேவைக்காக மாணவியை இதை செய்ய வைத்திருக்கிறார் என்று, ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

thadayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe