Skip to main content

ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்துக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 16

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 16

 

தமிழ்நாட்டையே உலுக்கிய ஹாசினி என்கிற 7 வயது சிறுமியைக் கொலை செய்த தஷ்வந்த் என்கிற இளைஞனின் வழக்கில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

பெயில் வாங்கி வீட்டில் இருந்த தஷ்வந்த் ஒருநாள் அவனுடைய அம்மாவிடம் நிறைய பணம் கேட்டான். அவர் கொடுக்க மறுத்தபோது அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து அவரைத் தாக்கினான். அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவனுடைய அம்மா கதறிய சத்தம் கேட்டு அருகிலிருப்பவர்கள் வந்து விசாரித்தபோது, ஒன்றுமில்லை எனக் கூறி அவர்களை அனுப்பினான். அதன் பிறகு அவனுடைய தாயின் தாலியை அறுத்தான். வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். விஷயம் அவனுடைய தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

 

அவனோடு சிறையில் இருந்த ஒருவனிடம் தான் மும்பைக்கு செல்லப்போவதாக அவன் சொன்னது போலீசுக்கு தெரிந்தது. மும்பையில் சூதாட்டம் நடக்கும் ஒரு இடத்தில் அவனைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து அவன் தப்பித்தான். அப்போது மும்பையில் இருந்த உதவி கமிஷனர் ஒருவரிடம் நடந்தவற்றை தமிழ்நாடு போலீசார் கூறினர். மும்பை போலீசும் அவனைத் தேட ஆரம்பித்தது. பாலியல் தொழிலாளியின் வீட்டில் பதுங்கியிருந்த அவனை மீண்டும் கைது செய்தனர். அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர். 

 

இவனை பெயிலில் எடுத்ததுதான் தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று அவனுடைய தந்தை கதறினார். தான் செய்த காரியங்களுக்காக அவன் சிறையில் கூட வருந்தவில்லை. குழந்தையைத் தான் கொன்றதைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று அவன் வாதாடினான். அவனுடைய தாயையும் அவன் கொலை செய்யவில்லை என்றான். இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதிகள் அவனுக்கு 46 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, அதன்பிறகு தூக்கு தண்டனை என்று தீர்ப்பளித்தனர். 

 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது, சமூகத்தின் எதிர்கால நலன் கருதி இவனுக்கு தூக்கு தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இப்போது அவன் சிறையில் இருக்கிறான். அளவற்ற அன்பும் பாசமும் தான் அவனைக் கெடுத்தது. தான் செய்தது தவறு என்பதை அவன் உணரவே இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது.

 

 

Next Story

ஏரிக்குள் கிடந்த மர்ம பீப்பாய்; வருடங்கள் கடந்து தெரிய வந்த உண்மை - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 53

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Thilagavathi Ips rtd thadayam 53

ஒரு சிறிய ஸ்குரூ வைத்து ஒரு பெண்ணின் கொலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

கொச்சின் பனங்காடு ஏரியில் நெடுநாட்களாக காலமாக ஒரு நீல நிற பீப்பாய் ஒன்று சந்தேகப்படும்படி மிதந்து கொண்டு இருக்கிறது. அந்த ஏரியை சுத்தம் செய்யும் போது தான் அந்த பீப்பாய் எடுத்து கரையில் ஓரமாக வைக்கின்றனர். கரையில் வைத்தவுடன் அதில் துர்நாற்றம் வீசுகிறது. அதை கவனித்த மக்கள் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்திலிருந்து வந்து அதிகாரிகள் அதை உடைத்து பார்த்ததில் உள்ளே கான்கிரீட் உடன் கொஞ்சம் எலும்புகளோடு ஒரு ஆணி போல ‘மல்லியோலர் திருகு’, அதனுடன்  ஒரு வாஷர், மற்றும் ஒன்றரை அடி நீளமுள்ள முடி கிடைக்கிறது. மேலும் மூன்று  500 ரூபாய் நோட்டுகளும் ஒரு நூறு ரூபாய் தாளும் பண மதிப்பிழப்பு நடப்பதற்கு முன்பு பயன்படுத்திய பழைய தாள்களாக இருக்கிறது. எனவே இது 2016க்கு முன்பு நடந்ததாக இருக்கலாம் என்று உறுதி செய்யபடுகிறது.

ஒரு சர்ஜனை கூப்பிட்டு அவரிடம் கருத்து கேட்டபோது, தாடை எலும்புகளை பார்க்கும் போது இது ஒரு பெண்ணுடலாக தான் இருக்கும் என்றும்  உயரம் குறைவானதாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்ணினுடைய உடலாக இருக்கலாம் என்று சொல்கிறார். கொலைக் குற்றமாக ஐ. பி. சி 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கென்று ஒரு தனி படை அமைத்து விசாரிக்கின்றனர்.

அங்கிருந்து கடம்பு சேரியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு  கிடைத்த எல்லா பொருள்களையும் கொடுத்து எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது  கணுக்காலில் அறுவை சிகிச்சை ஏற்படும் போது பயன்படுத்தக்கூடியது தான் இந்த  மல்லியோலார்  திருகு என்றும் அதில் PITKAR  என்று பொரிக்கப்பட்டிருந்ததை வைத்து அதை தயாரித்த நிறுவனம் மற்றும் பேட்ச் நம்பர் வைத்து விசாரித்ததில் அந்த பேட்ச்சில் மொத்தம் 161 திருகில் ஆறு மட்டுமே கேரளாவுக்கு கொடுத்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது.

அந்த ஆறு திருகுகள் எந்த மருத்துவமனைக்கு அளித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த மருத்துவமனைகளுக்கு சென்று ரெக்கார்ட்ஸ் விசாரிக்கப்பட்டது. கிடைத்த 6.5 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த ஸ்க்ரூ சகுந்தலா என்ற 60 வயது பெண்மணிக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றனர். எனவே ஹாஸ்ப்பிட்டல் ரெக்கார்ட்படி தொடர்பு கொள்ள வேண்டிய நபராக உதயம் பேரூரில்  இருக்கும் தனது மகள் அஷ்மதி பெயரை கொடுத்திருக்கிறார் என்று அறியப்பட்டு அஷ்வதியிடம் விசாரிக்கின்றனர்.

அவள் மூலம் போலீஸ் அந்த சகுந்தலா வாழ்க்கை பற்றி சில தகவல்களை பெறுகின்றனர். அவர் உதயம் பேரூர் என்ற ஊரில் பிறந்து ஆறு மாத குழந்தையாக இருந்த போது சரஸ்வதி அம்மா என்ற ஒரு பெண் தத்தெடுத்து வளர்க்கிறார். அவரை வளர்த்து தாமோதரன் என்று ஒரு முன்னணி கட்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், கட்சி தொடர்பாக ஒரு முறை இவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இவருடைய மகனும் விபத்தாகி பின்னர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அஸ்வதியும் வீட்டை விட்டு ஓடி செல்கிறார். யாரும் துணை இல்லாததால் தன் வாழ்க்கை வருமானத்திற்காக ஸ்கூட்டியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வருகிறார். அப்படி ஸ்கூட்டியில் செல்லும்போது தான் ஒரு முறை விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் போது அந்த திருகு  வைக்கப்படுகிறது.

அது செப்டம்பர் 15ஆம் தேதி 2016 அன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அதன் பின்னர் தான் மகள் வீட்டிற்கு சென்று தங்கியபோது சின்னம்மை போட்டு இருக்கிறது. அதனால் அஸ்வதி தன்  குழந்தைகளை கூட்டிக்கொண்டு லாட்ஜ் எடுத்து தங்குகிறாள். பின்னர்  26 ஆம் வீட்டிற்கு வந்தபோது தனது அம்மா அங்கு இல்லை என்று சஜித் என்பவனிடம் கேட்டபோது அவர் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கிறார் அவரை தேடாதே என்று சொல்லி விடுகிறான். இதுவரை தான் போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கின்றனர். அடுத்த கட்ட விசாரணைக்காக சஜித் என்பவரை சந்தேகித்து விசாரிக்கும் போது திருப்பணித்துறை என்ற ஊரில் சரிகா என்ற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார் என்று கண்டுபிடிக்கின்றனர். அங்கு சரிகாவை விசாரித்த போது தனது அம்மாவிற்கு இரண்டாவது திருமணத்தின் போது பிறந்த குழந்தை தான் சரிகா என்றும், சஜித் என்பவரை 18 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் எட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வருவதாக சொல்கிறார். மேலும் தன் கணவன் அஸ்வதி என்ற பெண்ணை அறிமுகம் செய்து அவள் அனாதையாக இருப்பதாகவும் தான் தான் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் பண உதவி செய்வதாக சொன்னார் என்று குறிப்பிடுகிறார்..

கிடைத்திருக்கும் தகவலை வைத்து மேற்கொண்டு விசாரித்ததில் சகுந்தலா மகள் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தபோது சஜித் பற்றி உண்மையை தெரிந்து கொள்கிறாள். அவனிடம் கண்டித்து திருமணமானது பற்றி தன் பெண்ணிடம் சொல்லி சொல்லி விடுவேன் என்று கண்டித்து அவனை முந்தைய  மனைவியிடமே போய் வாழுமாறு சொல்லி பார்க்கிறார். ஆனால் அதைக் கேட்காததால் சஜித் சகுந்தலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொன்று தனக்கு தெரிந்த நான்கு நண்பர்களை வைத்து ஒரு பீப்பாயில் கான்கிரீட் நிரப்பி கொன்ற எலும்புகளை போட்டு அப்படியே செங்குத்தாக நிற்கிற நிலையில் நகர்த்திக் கொண்டு சென்று ஏரியில் போட்டு விடுகிறார். இதன் பின்னர் உண்மையை போலீஸ் கண்டுபிடித்து தன்னை போலீஸ் தேடுகிறது என்று தெரிந்தவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்

Next Story

பெண்களை குறி வைத்து கொன்ற சயனைட் மல்லிகா - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 52

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
thilagavathi ips rtd thadayam 52

பெண்களை ஏமாற்றி சடலங்களை குவித்த ‘சைனைட் மல்லிகா’ வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

அடுத்ததாக ஆறு வருடங்கள் கழித்து திட்டமிட்டு குறையோடு வரும் பெண்கள் அதிகமாக சேருமிடமான மருத்துவமனை, கோவில்கள் என்று குறிவைத்து தன் கொலைகளை செய்கிறாள். இப்படியாக கெம்பம்மா மேலும் 50 வயதான சாத்தனூரைச் சேர்ந்த எலிசபெத்  தன் பேத்தியைக் கண்டுபிடிக்க வர அவளை கோவில் வளாக அறைக்கு அழைத்துச் சென்று பலகாரத்தில் சைனைட் கலந்து குடுத்து கொல்கிறாள். மருத்துவமனையில் சந்தித்த 60 வயதான யசோதாம்மா சித்தகங்கா மடத்தில் கொல்லப்பட்டார். இப்படிதான் முனியம்மா என்பவர் யடியூர் சித்தாலங்கேஷ்வர் கோயிலில் 15.12.2007 அன்று கொல்லப்பட்டார். 60 வயதான பில்லாமா, ஹெப்பல் கோவிலுக்கு ஒரு புதிய வளைவை நிறுவ ஆசைப்பட்டதை அறிந்து அவருக்கு நிதியுதவி செய்வதாக கெம்பம்மா உறுதி அளித்து, அவரையும் தன் வழக்கமான முறையில் மத்தூர் வியாத்யநாதபுரத்தில் கொல்கிறாள். ஒரு 30 வயதுடைய பெண் தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் வேண்ட அவளையும் தன் இரையாக்கி கொல்கிறாள்

இப்படி நிறைய கொலைகள் ஆங்காங்கு ஆதாரமில்லாமல் நிறைய பிணங்கள் கிடைக்கின்றன. மேலும் 2006ல் ரேணுகா என்ற பெண் காணாமல் போய் சடலம் கிடைக்கிறது. கெம்பம்மா சமையற்காரராக வேலை செய்த இடத்தில் மணியும் வேலை செய்து வந்தார். கெம்பம்மா மணியின் சகோதரி ரேணுகாவுடன் பேசி பழகி அவளுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற குறை இருப்பதை தெரிந்து கொண்டு கெம்பம்மா கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு யாத்ரீக மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறாள். அதேபோல வரவழைத்து போலி பூஜை நடத்தி கொன்று விடுகிறாள்.  அப்போது   வேலைக்கு சென்றிருந்த ரேணுகாவின் கணவர் துபாயில் இருந்து வருகிறார். ஏற்கெனவே பிரபலமான முறையில் நிறைய கோவில் தொடர்பான கொலைகள் நிறைய பார்த்ததால் கணவர் போலீசில் புகார் அளிக்கிறார். ஏற்கெனவே நிறைய புகார்கள் இதுபோல பதிந்ததால் இந்த கொலையும் சேர்த்து மொத்தம் எட்டு கொலைகள் கெம்பம்மா  மீது பதியப்படுகிறது.

கோர்ட் விசாரணையின் போது திறமையான வக்கீலின்  வாதாடலால் எலிசபெத் வழக்கில் கிடைத்த எல்லா பத்து சாட்சியையும் உறுதியாக இல்லை என்று கெம்பம்மாவை அதிலிருந்து விலக்குகிறார். ஆனால் நாகவேணி கொலையின் போது மட்டும் அறை ரிஜிஸ்டர் செய்யும்போது ஒரே கையெழுத்தினால் தொடர்புபடுத்தி அதில் மாட்டி கொள்கிறார். இதில் முனியம்மா வழக்கின் மீது கிடைத்த ஆதாரம்  வைத்து அது மட்டும் முக்கிய வழக்காக கருதப்படுகிறது.

ஆனாலும் அந்த வழக்கில் கெம்பம்மா பக்கமுள்ள வக்கீல் போலீசாரிடம் இவர் தான் குற்றவாளி என்றால் பேருந்து நிலையத்தில் இவரை பிடித்த போதே அங்கிருந்த ஐந்து சாட்சியங்களை வைத்து அப்பொழுதே அவரிடம் கைப்பற்றப்பட்டதை வழக்கு பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அப்படி செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தான் சைனைட் கொப்பி வாங்கி, போலி சாவி, ரசீது என்று எல்லாவற்றையும் வாங்கி நீங்கள் செட் செய்திருக்கிறீர்கள் என்று மாத்தி விடுகிறார். அப்படி செய்தும் சாட்சியத்தின் போது அடகு கடை ரசீது வைத்து அந்த கடையின் உரிமையாளரை அழைத்து சாட்சியாக விசாரிக்கிறார்கள். அவரும் இந்த அம்மா காட்டி கொடுத்து அவர் வைத்த நகைகளையும் சொல்லி விடுகிறார். மேலும் அவருக்கு தான் தான் ரூம் அளித்தேன் என்று அந்த கோயில் வளாகத்தில் சாவி கொடுத்தவரும் சாட்சி சொல்லிவிடுகிறார். இப்படியாக கிடைத்த ஆதாரத்தை வைத்து இந்தியாவில் முதல் முறையாக மரண தண்டனை பெற்ற முதல் பெண் குற்றவாளியாகிறார் சயனைடு மல்லிகா. மொத்தம் எட்டு வழக்கில் எலிசபெத் கேஸ் தவிர பாக்கி ஏழு வழக்குகளில் இரண்டு வழக்குகள் தூக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டு மீதம் ஆயுள் தண்டனையாக கொடுக்கப்பட்டு பின்னர் எல்லா வழக்குகளுக்கும் சேர்த்து ஆயுள் தண்டனை கொடுத்து விட்டனர்.

இத்தனை கொலைகளுக்கும் இருக்கும் அந்த பெண்ணின் ஒரே பின்னணி தன் வறுமையின் காரணமாக செய்ததுதான். முதலில் ஆறு வருடங்கள் செய்யாமல் இருந்தாலும் தன் பெண்களை வேற இடத்தில் திருமணம் செய்துகொடுத்த பின்னர் டாக்ஸி டிரைவராக இருக்கும் தன் மகனுக்கு சொந்தமாக ஒரு டாக்ஸி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 2006ல் இருந்து இத்தனை கொலைகள் அவர் செய்து இருக்கிறார்.  எனவே பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தன் குறைகளை கூறுவது தன் அந்தரங்க விஷயங்களை பகிர்வது என்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் அவர்களை அனுப்பிவிட்டு வேறு ஒரு நபரை தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர் சொல்வது போல செய்தால், இது போல தான் உயிர் போகும். அசம்பாவிதம் நடக்கும். எவ்வளவு மன உருக பேசினாலும் சுய பாதுகாப்பை மக்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.