rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப்இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார்

Advertisment

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது.அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில்வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

Advertisment

வந்தவர் ஆறு கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ளபோலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள். எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசிஎடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்தஉண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார்.

Advertisment

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்திஎல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது.