Skip to main content

ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ் கொள்ளை; 4 கோடியை திருடிய டெக்னிக்கல் திருடன்; ராஜ்குமார் பகிரும் ‘சொல்ல மறந்த கதை’ - 24

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
rajkumar-solla-marantha-kathai-24

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கிரெடிட் கார்டில் கிடைக்கும் ரிவார்டு பாயிண்ட்ஸ் வைத்து ஏமாற்றிய ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

எத்திக்கல் ஹேக்கிங் என்று ஒரு கோர்ஸ் இருக்கிறது. கண்காணிக்கவும், ஒருவரின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசாங்கம் அனுமதிப்பின் பேரில் வேலை செய்து வருவது என்பது இங்கே ஒரு பழக்கம் இருக்கிறது. ஆனால் அதை படித்த ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக செய்து மாட்டிய ஒரு சம்பவம் இது. பொதுவாக மத்த நாட்டைப் போல இல்லாமல் நம் நாட்டில் மிகவும் எதார்த்தமாக கிரெடிட் கார்ட்ஸ் உபயோகம் செய்வோம். நாம் அடிக்கடி செலவு  செய்யும் உணவு, மருத்துவம், பெட்ரோல் போன்ற பயன்பாட்டிற்கு பிறகு அதற்கு வரும் ரிவார்டு பாயிண்ட்ஸ் பற்றி கவலைப் படுவதில்லை, கண்டுகொள்வதில்லை. இதை தொடர்ச்சியாக ஒருவர் கவனித்து வந்திருக்கிறார். லண்டனில் எத்திக்கல் ஹேக்கிங் படித்துவிட்டு நம் நாட்டிற்கு வந்திருக்கும் அந்த நபர், மெதுவாக நிறைய கிரெடிட் கார்ட்ஸ் வாடிக்கையாளரின் தகவலை பெற்றுக்கொண்டு ஹேக் செய்து, கால் செய்து அவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் விழுந்திருக்கிறது என்று கூறி அவரது கார்ட் எண், பேங்க் டீடெயில்ஸ் கேட்டு அதை வைத்து அப்படியே பாங்கிலும் ரிவார்டு பாயிண்ட்ஸ்களை ஏமாற்றி பேசி அதனை பெற்றுக்கொண்டு தன்னுடைய அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றிக் கொள்கிறார். 

இப்படியாக 1000 கார்ட்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்து வந்திருக்கிறார். எல்லாரும் அவர்களுக்கு இன்விசிபிள் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் தனது ரிவார்ட் பாயிண்ட்ஸ் என்ன ஆகிறது என்று சந்தேகம் வந்து, அவருடைய வங்கியிடம் கேட்க, அவருக்கு போன மாதமே எல்லா பாயிண்ட்ஸ் கொடுத்து விட்டதாக சொல்லி விடுகிறது. வங்கியும் சோதித்ததில், மத்த வாடிக்கையாளர்கள் அனைவரது பாயிண்ட்ஸ் ஒன்றும் ஆகாமல் இருக்கிறது. இவரது கணக்கு மட்டுமே இப்படி சந்தேகத்திற்கு உட்பட்டு இருக்கிறது. வங்கியும் அடுத்தபடியாக கிரெடிட் கார்ட்ஸ் ஹாண்டில் செய்யும் கான்ட்ராக்டரிடம் போய் சரி பார்த்ததில், எல்லா ரிவார்ட் பாயிண்ட்ஸும் நாள் ஆனபிறகு சரியாக அத்தனையும் ஒரே அக்கவுண்டிற்கு சென்று இருக்கிறது. இதை ஒரு வழக்காக பெங்களூர் சைபர் கிரைமில் பதிவு செய்து கண்டுபிடித்ததில், அந்த நபர் ரிவார்டு பாயிண்ட் இணையதளத்தை ஹேக் செய்து, 4.61 கோடி மதிப்புள்ள பணத்தையும், அதன் மூலம் கிட்டத்தட்ட 5 கிலோ தங்கம், கார்கள், பங்களா உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளார். அவரை கண்டறிந்து கைது செய்து இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

என்னுடைய அனுபவத்தில், இந்தியாவில் முதல் முறை இப்படி ஒரு கேஸ் கையாண்டோம். ரிவார்டு பாயிண்ட்ஸ் மூலம் இழந்த பணத்தை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொடுப்பது புதுமையாக இருந்தது. இது வாடிக்கையாளரது அல்லது வங்கியின் தவறோ கிடையாது. ரிவார்டு பாயிண்ட்ஸ் மெயின்டெயின் செய்யும் கம்பனியே சரியாக பார்த்திருக்க வேண்டும். ஹேக் செய்தவுடன் பொதுவாக அலர்ட் வந்திருக்க வேண்டும். மக்களும் அதிகமாக பாதுகாப்பு செயலி அதிகம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 'கால் ஆப்' என்று ஒரு செயலி இருக்கிறது. இதன்மூலம் தப்பான ஸ்பேம் மற்றும் ஹேக்கர்களை கண்டறிந்து இதுபோல விஷயத்திலிருந்து பணத்தை மட்டுமல்லாது ரிவார்டு பாயிண்ட்ஸ் கொடுப்பதாக கூறி ஏமாற்றுபவர்களிடமும் இருந்து தப்பிக்கலாம்.