rajkumar-solla-marantha-kathai-15

கணவனைக் கொன்ற மனைவியைப் பற்றியும், அந்த கொலை நடத்தப்பட்ட விதம் பற்றியும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார்

Advertisment

ஒரு அப்பாவிக் கணவன் தன்னுடைய உயிரை இழந்த கதை இது. சென்னையில் இண்டீரியர் டெகரேசன் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். மனைவி, குழந்தை என்று மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அழகுக் கலை பயின்றவர். அவர் வேலை செய்து வந்த ஆபீசுக்கு அருகில் இருந்த ஒருவரோடு அந்தப் பெண்ணுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. அந்த நபர் குடும்ப நண்பராகவே பழகி வந்தாலும் ஒருகட்டத்தில் மனைவியின் தொடர்பு குறித்து கணவர் கண்டுபிடித்தார். மனைவியை எச்சரித்தார். அதன் பிறகும் அந்த நபரோடு மனைவி ரகசியமாகப் பழகி வந்தார்.

Advertisment

கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், அந்த நபரோடு சேர்ந்து கணவரைக் கொல்ல மனைவி முடிவு செய்தார். ரகசியமாக ஒரு செல்போன் வாங்கினார். தன்னுடைய ஊருக்கு அவர் கிளம்பிச் சென்றார். அந்த நேரத்தில் கூலிப்படையை வைத்து கணவரைக் கொலை செய்யுமாறு காதலனுக்கு அறிவுறுத்தினார். காதலனிடம் அவளுடைய வீட்டின் போலி சாவி ஒன்று இருந்தது. கத்தியை எடுத்துக்கொண்டு போய் அவளுடைய கணவனை அவன் கொன்றான். அதன் பின்னர் அவளே காவல் நிலையத்துக்கு போன் செய்து தன்னுடைய கணவர் போனை எடுக்கவில்லை என்று கூறினாள். போலீசார் சென்று பார்த்தபோது கணவர் இறந்து கிடந்தார்.

இந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தனர். அவள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் பேசிய போன் கால்களை செக் செய்தனர். அவளையும் அவளுடைய காதலனையும் கைது செய்தனர். கணவன் வேண்டாம் என்று நினைத்திருந்தால் அந்தப் பெண் விவாகரத்து பெற்றிருக்கலாம். ஆனால் சொத்துக்காக அந்த அப்பாவி மனிதர் கொலை செய்யப்பட்டார். கடைசியில் அந்தப் பெண் நினைத்த எதுவும் நடக்கவில்லை. முதலில் பிசினஸ் சம்பந்தப்பட்ட யாரோ தான் கொலை செய்தார்கள் என்று காவல்துறையினர் நினைத்தனர். பிறகு தான் மனைவியே கொலை செய்திருக்கிறார் என்பதை கண்டறிந்தனர்.

Advertisment