ADVERTISEMENT

பணமும் கொடுத்து உயிரையும் விட்ட பணக்காரர் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 12

10:42 AM Sep 14, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண்களிடம் பணத்தை பறிகொடுத்த பணக்காரர் பற்றிய வழக்கு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் தொடரின் வழியே நம்மிடம் விவரிக்கிறார்

பெண்களும் இந்த அளவுக்கு இறங்குவார்களா என்கிற ஆச்சரியம் இந்த வழக்கு பற்றி கேள்விப்பட்டபோது எனக்கு ஏற்பட்டது. தென் சென்னையில் நடைபெற்ற விஷயம் இது. பங்குச்சந்தை தரகர் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து வந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரிடம் ஒரு பெண் பணிபுரிந்து வந்தார். அவளுக்கு இவர் நிறைய பணம் கொடுத்து உதவினார். வாங்கிய பணத்தை அந்த பெண் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்பப் பெற படித்த, சட்டம் தெரிந்த, ஒரு பெண்மணியை அவர் அணுகினார்.

ஆனால் நடந்தது என்னவோ அந்த இரண்டு பெண்களும் நண்பர்களானார்கள். இருவரும் சேர்ந்து அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவரும் முடிந்த அளவுக்கு பணம் கொடுத்தார். கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறும் அவர் அழுத்தம் கொடுத்தார். இதனால் இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ரவுடிகளிடம் பேசினர். சமாதானம் பேசுவது போல் அவரை அழைத்து வந்து கொலை செய்யலாம் என்று அந்த ரவுடிகள் ஐடியா கொடுத்தனர். பஞ்சாயத்து பேச அவரைப் படகில் அழைத்துச் சென்றனர்.

நடுக்கடலில் அவரைக் கொலை செய்து கடலில் தூக்கி வீசினர். அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். அவருடைய செல்போனை ஆராய்ந்தபோது அந்த ரவுடிகளின் இருப்பிடம் தெரிந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் அவர்கள் தெரிவித்தனர். உண்மையை ஒப்புக்கொண்டு சிறை சென்றால், விரைவில் பெயில் வாங்கி வெளியே வந்துவிடலாம் என்பது அவர்களுடைய எண்ணம். அதுபோலவே அவர்கள் வெளியே வந்தனர். அவருடைய உடலும் கிடைக்கவில்லை.

உதவி கேட்டு வந்த ஒருவரைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் இது. உதவி கேட்கச் செல்லும்போது குறிப்பிட்ட நபரின் தரம் குறித்து அறிந்த பிறகே கேட்க வேண்டும். இந்த கேஸ் இப்போதும் நடந்து வருகிறது. கூலிப்படையினருக்கு காசு மட்டும் தான் முக்கியம். உலகம் முழுவதுமே கூலிப்படை என்பது இருக்கிறது. அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. கொலை செய்வது மட்டுமே தொழில். நியாயம், தர்மம் எல்லாம் அதில் பார்க்க மாட்டார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT