Skip to main content

பணமும் கொடுத்து உயிரையும் விட்ட பணக்காரர் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 12

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

rajkumar-solla-marantha-kathai-12

 

பெண்களிடம் பணத்தை பறிகொடுத்த பணக்காரர் பற்றிய வழக்கு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் தொடரின் வழியே நம்மிடம் விவரிக்கிறார்

 

பெண்களும் இந்த அளவுக்கு இறங்குவார்களா என்கிற ஆச்சரியம் இந்த வழக்கு பற்றி கேள்விப்பட்டபோது எனக்கு ஏற்பட்டது. தென் சென்னையில் நடைபெற்ற விஷயம் இது. பங்குச்சந்தை தரகர் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து வந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரிடம் ஒரு பெண் பணிபுரிந்து வந்தார். அவளுக்கு இவர் நிறைய பணம் கொடுத்து உதவினார். வாங்கிய பணத்தை அந்த பெண் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்பப் பெற படித்த, சட்டம் தெரிந்த, ஒரு பெண்மணியை அவர் அணுகினார். 

 

ஆனால் நடந்தது என்னவோ அந்த இரண்டு பெண்களும் நண்பர்களானார்கள். இருவரும் சேர்ந்து அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவரும் முடிந்த அளவுக்கு பணம் கொடுத்தார். கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறும் அவர் அழுத்தம் கொடுத்தார். இதனால் இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ரவுடிகளிடம் பேசினர். சமாதானம் பேசுவது போல் அவரை அழைத்து வந்து கொலை செய்யலாம் என்று அந்த ரவுடிகள் ஐடியா கொடுத்தனர். பஞ்சாயத்து பேச அவரைப் படகில் அழைத்துச் சென்றனர். 

 

நடுக்கடலில் அவரைக் கொலை செய்து கடலில் தூக்கி வீசினர். அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். அவருடைய செல்போனை ஆராய்ந்தபோது அந்த ரவுடிகளின் இருப்பிடம் தெரிந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் அவர்கள் தெரிவித்தனர். உண்மையை ஒப்புக்கொண்டு சிறை சென்றால், விரைவில் பெயில் வாங்கி வெளியே வந்துவிடலாம் என்பது அவர்களுடைய எண்ணம். அதுபோலவே அவர்கள் வெளியே வந்தனர். அவருடைய உடலும் கிடைக்கவில்லை.

 

உதவி கேட்டு வந்த ஒருவரைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் இது. உதவி கேட்கச் செல்லும்போது குறிப்பிட்ட நபரின் தரம் குறித்து அறிந்த பிறகே கேட்க வேண்டும். இந்த கேஸ் இப்போதும் நடந்து வருகிறது. கூலிப்படையினருக்கு காசு மட்டும் தான் முக்கியம். உலகம் முழுவதுமே கூலிப்படை என்பது இருக்கிறது. அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. கொலை செய்வது மட்டுமே தொழில். நியாயம், தர்மம் எல்லாம் அதில் பார்க்க மாட்டார்கள்.

 

 


 

 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.