/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Rajkumar11.jpg)
பாலியல் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனை குறித்து, சொல்ல மறந்த கதை தொடரின் வழியே இன்சூரன்ஸ்நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
வரலாற்றில் பெண்கள் எப்போதும் தைரியமானவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 1971 காலகட்டத்தில் நாக்பூரில் யாதவ் என்கிற ரவுடி ஒருவன் செய்யாத குற்றங்களே இல்லை. பாலியல் குற்றங்களிலும் அவன் தொடர்ந்து ஈடுபட்டு வந்தான். குழந்தைகளைக் கூட அவன் விட்டு வைத்ததில்லை. பலமுறை அவன் கைது செய்யப்பட்டாலும் சரியான சாட்சியங்கள் கிடைக்கவில்லை. பாலியல் வன்புணர்வு செய்து பெண்களைக் கொலை செய்வது அவனுடைய வாடிக்கையாக இருந்தது.
பெண்கள் மத்தியில் இவன் குறித்த பயமும் கோபமும் அதிகரித்தது. பெண்கள் பலர் அவன் நீதிமன்றத்துக்கு வரும்போது ஒன்று சேர்ந்து அவனைக் கொல்ல வேண்டும் என்கிற முடிவை எடுத்தனர். வீட்டிலிருக்கும் மிளகாய்ப் பொடி, சமையல் கத்தி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்ற நடைமுறைகள் தொடங்குவதற்கு முன் பெண்கள் எழுந்து அவன் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர். அங்கு அவனைக் கொடூரமாகக் கொலையும் செய்தனர்.
அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. 200 முதல் 300 பெண்கள் இதைச் செய்தனர். அவன் எவ்வளவு கெஞ்சினாலும் அவர்கள் அவனை விடவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அவனால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாடு காவல்துறையாக இருந்திருந்தால் அவனை வேறு மாதிரியாக டீல் செய்திருப்பார்கள். இவ்வளவு பெண்கள் சேர்ந்து செய்த இந்த சம்பவம் மிகவும் முக்கியமான ஒன்று.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)