Advertisment

முதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்!!! பழைய ரீல் #6

pazhaiya reel

Advertisment

சினிமா தோன்றிய காலத்திலிருந்தே காதல் காட்சிகளும், பலவந்த காட்சிகளும் பரவலாக இடம்பெற்றே வந்திருக்கிறது. அப்படியான காட்சிகளில் நடிக்கும் ஆண் - பெண் நட்சத்திரங்களிடையே மோதல் ஏற்படுவதும் அப்போதிலிருந்தே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ்சினிமாவின் முதல் சமூகப்படம் என்கிற பெருமைக்குரியது 1935-ஆம் ஆண்டு வெளியான ‘மேனகா’ திரைப்படம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்திய அளவில் புகழ்பெற்ற டைரக்டர் ராஜா சாண்டோ இயக்கிய படம். பாம்பே ஸ்டுடியோ ஒன்றில் ஷூட்டிங் நடந்தபோது... ஒரு சம்பவம்...

புகழ்பெற்ற ‘டி.கே.எஸ்.சகோதரர்களில் ஒருவரான டி.கே.சண்முகம் (அவ்வை சண்முகம்) இந்தப்படத்தில் வில்லனாக நடித்தார். எம்.எஸ்.விஜயாள் நாயகியாக நடித்தார்.கதைப்படி நாயகியை, வில்லன் பலாத்காரம் செய்ய முயலும் காட்சி.தாவிப்பிடிக்க வரும் சண்முகத்தை விஜயாள் பிடித்து கீழே தள்ளிவிட வேண்டும்.சண்முகத்தை தொட்டு நடிக்க சங்கடப்பட்ட விஜயாள்... பட்டும் படாமலும் லேசாக தள்ள... சண்முகம் பலமாக கீழே விழுவதுபோல நடித்தார்.“அவ மெதுவா தள்றா. நீ இவ்வளவு ஃபோர்ஸா கீழ விழுற. இது யதார்த்தமா இல்லையேடா...” எனச் சொன்ன ராஜா சாண்டோ, அந்த காட்சியை ரீ-டேக் எடுத்தார்.அப்போதும் இயல்பாக அமையவில்லை.மூன்றாவது முறையாக ரீ-டேக் எடுக்க ஆயத்தமானார் ராஜா சாண்டோ.

pazhaiya reel

“அம்மா... சரியா வராதவரைக்கும் டைரக்டர் நம்மள விடமாட்டார். நடிப்புதானேம்மா... சும்மா என்னைப் பிடித்து பலமா தள்ளுங்க” என விஜயாளிடம் சொல்லிவிட்டு... விஜயாளை பிடிப்பதற்காக சண்முகம் தாவ... விஜயாள் இந்த முறையும் பலமாக தள்ளவில்லை. ‘நாம் சொல்லியிருப்பதால் பலமாக தள்ளுவார்’ என்ற நினைப்பில் ஃபோர்ஸாக தாவிய சண்முகம்... விஜயா ஃபோர்ஸாக தள்ளாததால் தடுமாறி... விஜயாளின் மார்பு மீது மோதிவிட்டார். இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்.

ஆனால் விஜயாளோ... “இபப்டியெல்லாம் எனக்கு குஸ்தி போட்டு நடிக்கத் தெரியாது” எனச் சொல்லி சண்முகத்தை திட்டிவிட்டார். எல்லோரின்முன்பாகவும் திட்டுப்பட்ட சண்முகம்... “வேணும்னே அநத இடத்தில் நாம இடிச்சதாக நினைச்சு நம்ம மேல கோபப்படுதே இந்தம்மா...” என வேதனைப்பட்ட சண்முகம்... ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

தமிழ்சினிமாவின் முதல் டிஜிட்டல் படம் (டிஜிட்டல் கேமராவில் முழுதாக எடுக்கப்பட்ட திரைப்படம்) என்கிற பெருமைக்குரியது 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சிலந்தி’ திரைப்படம்.

பத்திரிகையாளர் ஆதிராஜ் இயக்கிய படம்.

பாண்டிச்சேரி ரிசார்ட்ஸ் ஒன்றில் ஷூட்டிங் நடந்தபோது... ஒரு சம்பவம்...

கதைப்படி நாயகி மோனிகாவும், நாயகன் முன்னாவும் முதலிரவு கொண்டாடுகிறார்கள்.

ஸீன் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு...

pazhaiya reel

”முதலிரவு காட்சி நடிப்புதான். ஆனால் முன்னா... எல்லை மீறி என் இடுப்பைத் தடவியதால் எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு” என மோனிகா புகார் சொல்ல...“காட்சி தத்ரூபமா வர்றதுக்கா இப்படி செஞ்சேன்” என முன்னா சொன்னார்.“தத்ரூமா வரணும்கிறதுக்காக சூஸைட் காட்சியில் சூஸைட் பண்ணிக்க முடியுமா?” என மோனிகா கோபப்பட்டார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இந்த சம்பவத்தால் முன்னா அப்-செட். அந்தச் சமயத்தில் முன்னாவுக்கும், ஒரு நடிகைக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. என்ன காரணாத்தாலோ... அந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது.

முந்தைய பகுதி:

சந்தேகத்திற்கு ஆளான சிவாஜி-தேவிகா ஜோடியும் கமல்-ஸ்ரீதேவி ஜோடியும்! பழைய ரீல் #5

pazhaya reel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe