parenting counselor asha bhagyaraj advice 78
குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி நக்கீரன் 360 சேனலில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ். அந்த வகையில் தான் சந்தித்த வழக்கு பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
குழந்தைகளுக்கு பியூபர்ட்டி எஜுகேஷன், செக்ஸ் எஜுகேஷன் எப்படி கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு எல்ஜிபிடிக்யூ (LGBTQ) பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனது மகள் லெஸ்பியனாக இருக்கிறார் என்று ஒரு அம்மா குழந்தையை அழைத்து வந்தார். இந்த குழந்தை சிறு வயதில் இருந்தே பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். பள்ளி விடுமுறையின் போது வீட்டுக்கு வந்த அந்த குழந்தை, இன்னொரு பெண்ணிடம் அது மாதிரியாக பேசி வந்திருப்பதை அம்மா பார்த்துள்ளார். அதனால் என்னிடம் அந்த பெண் குழந்தையை அவரது அம்மா அழைத்து வந்தார்.
அந்த பெண் குழந்தையிடம் பேசினேன். நான் லெஸ்பியன் தான் என்று அந்த குழந்தை அடித்துப் பேசுகிறார். இது ஆரம்பித்தது என்று குழந்தையிடம் கேட்டேன். இந்த ஒரு பெண்ணிடம் தற்போது ரிலேஷன்சிப்பில் இருப்பதாகவும், இதற்கு முன்பு ஒரு பெண்ணுடன் ரிலேஷன்சிப்பில் இருந்து அது பிரேக் அப் ஆகிவிட்டதாகவும், அந்த பெண்ணின் நியாபகங்கள் இன்னும் இருப்பதாகவும் கூறினாள். தனக்கு ஆண்களை பிடிக்கவில்லை, பையனை பார்த்தாலே வெறுப்பு வருகிறது என்றெல்லாம் சொல்கிறாள். ஆனால், அவளுக்கு இது பற்றியான புரிதல் இல்லை என்று எனக்கு தோன்றியது.
5,6 செஷன்ஸ் போய்விட்டது. அந்த குழந்தையிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது அந்த குழந்தையை லெஸ்பியன் இல்லை என்று தான் எனக்கு தோன்றியது. அந்த குழந்தையின் அப்பா மது போதைக்கு அடிமையாகி, அம்மாவை நிறைய அடித்திருக்கிறார். இதன் காரணமாக தான் குழந்தையை பள்ளி விடுதியில் சேர்த்திருக்கிறார்கள். நிறைய கெட்ட வார்த்தைகளை பேசி, அம்மாவை அடிப்பதால் அப்பாவை அந்த குழந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதில் ஆரம்பித்து ஆண்களையே பிடிக்காமல் போயிருக்கிறது. இதனிடையே, பள்ளியில் ஒரு பையனோடு பழகி வந்திருக்கிறார். அந்த பையனும், இந்த பெண்ணை குணத்தை வைத்து அநாகரிகமாக பேசி நிறைய கெட்ட வார்த்தையால் திட்டிருக்கிறார். இதன் பிறகு, ஆண்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என்ற மனநிலைக்கு அந்த குழந்தை வந்திருக்கிறார். ஒரே வேவ் லெந்தில் (Same wavelength) இருப்பதால் பெண்களுடன் பேசி வந்திருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும் தான் அந்த பெண்ணுக்கு நிறைய பாதிப்படைய செய்திருக்கிறது.
செஷனில், நிறைய ஆண்கள் ரோல் மாடல்கள் பற்றிய புத்தகங்களை அந்த குழந்தைக்கு படிக்க சொன்னேன். ஏ.ஆர் ரஹுமான் போன்றவர்கள் பற்றிய வாழ்க்கையை பற்றி படிக்க சொன்னேன். அதே மாதிரி, எல்ஜிபிடிக்யூ சம்பந்தமான புத்தகம் ஒன்றையும் பரிந்துரைத்து படிக்க சொன்னேன். இதையெல்லாம் படித்து முடித்தவுடன், நானாகவே லெஸ்பியனாக நினைத்து கொண்டிருக்கிறனோ என்று அந்த குழந்தையே என்னிடம் கூறியது. இருப்பினும், நிறைய நேரம் எடுத்துக்கொள், நாம் தொடர்ந்து பேசுவோம் என்று கூறியிருக்கிறேன். உனக்கான புரிதல் வரும்வரை நேரம் எடுத்துக்கொள், லெஸ்பியனாக இருப்பதிலும் எந்த தவறு இல்லை என்றும் கூறியிருக்கிறேன். ஒருவேளை லெஸ்பியனாக இல்லையென்றால் ரிலேஷன்சிப்பில் இருந்த பெண்ணிடம், உண்மையை சொல்லி வெளியே வருவதாக கூறியிருக்கிறாள். அந்த அளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி வந்திருக்கிறது. குழந்தைகள் எல்ஜிபிடிக்யூ-வாக இருந்தாலும், பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பெண்ணுக்கு செஷன் வந்த அப்பறம் தான் தெரிந்தது. ஒருவேளை உணர்வு ரீதியாக லெஸ்பியன்ஸ் நிறைய இருக்கலாம். குழந்தைகள் அதை நேரடியாக வந்த சொன்னால், பெற்றோர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் குழந்தைகளின் மீது எந்த தவறும் இல்லை.
இந்த குழந்தை சிறு வயதில் இருந்தே விடுதியில் படித்து வந்திருக்கிறார்கள். 60 குழந்தைகள் இருக்கும் அந்த விடுதியில் எல்லோருமே அப்படி லெஸ்பியனாக தான் இருந்திருக்கிறார்கள். விடுதியில், இரண்டு இரண்டு பிள்ளைகளாக இப்படி இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நெருக்கமாக பழகி தங்களை லெஸ்பியானாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அக்கா தங்கை போல் பெயரளவில் அழைத்துக் கொண்டு லெஸ்பியனாக இருப்போம் என்று அந்த குழந்தை சொன்னது. இதன் மூலமாக தான் பிஷிக்கல் ரிலேஷன்சிப்பில் இருந்திருக்கிறார்கள். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். அந்த 60 பிள்ளைகளுக்கும் எஜுகேஷன் கொடுத்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.