Advertisment

15 வயதில் வந்த காதல்; பெற்றோர்கள் தான் காரணமா? - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :30

parenting counselor asha bhagyaraj advice 30

பெற்றோரிடம் இருந்து அன்பு கிடைக்காததால் வேறு ஒரு பையனுடன் காதல் கொண்டு பிசிக்கல் ரிலேசன்ஷிப் வைத்துக்கொண்ட 15 வயது சிறுமிக்கும், பெற்றோருக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யரஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

Advertisment

ஒரு 15 வயது உள்ள ஒரு சிறுமி தனக்கு கான்செட்ரேட் இல்லை, படிப்பில் கவனம் இல்லை அதனால் தனக்கு கவுன்சிலிங் தேவைப்படுது என்று அவரது பெற்றோரிடம் சொல்லி என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தார். அந்த சிறுமி பள்ளியில் நன்றாக படித்து நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். அந்த பரிசுப்பொருட்களை எல்லாம் என்னிடம் காமிப்பதற்காக கொண்டு வந்தார். நானும், அதை பார்த்துவிட்டு அந்த சிறுமியை பாராட்டிய போது, அவர் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். மேலும் அவர், இவ்வளவு பரிசுப்பொருட்களை பெற்றாலும் தனக்கு சரியான அங்கீகாரம் இல்லை, அதனால் உங்களுடைய உதவி தேவைப்படுது என்று ஒரு உண்மையை உடைத்தார்.

Advertisment

அதை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறித்தான் ஆரம்பித்தார். நானும் சொல்ல மாட்டேன் என உறுதியளித்தபின் கூறினார். அவர் ஒரு பையனுடன் பிசிக்கல் ரிலேஷன்ஷிப் வைத்திருந்ததாகக் கூறினார். அது தவறு என்றுதான் எனக்கு தெரிகிறது. அந்த பையனும் என்னை யூஸ் பன்ற மாதிரி தெரியுது, அதனால் அதை நிறுத்திவிட்டு அதில் இருந்து நான் வெளியே வரவேண்டும் என நினைக்கிறேன். எந்த இடத்திலும் எனக்கு லவ் அண்ட் அஃபெக்‌ஷன் கிடைக்கவில்லை, அது அந்த பையனிடம் இருந்து கிடைத்தது. ஒரு அவார்டை வெற்றி பெற்று எனது பெற்றோரிடம் காமிக்கும்போது அதைப் பாராட்டக்கூட செய்யாமல் அப்படியே நகர்ந்து செல்வார்கள் எனச் சொன்னார்.

நல்ல ஒரு பணக்காரக் குடும்பம் தான் அவர்கள். அவர்களிடம் நல்ல கார், ஆப்பிள் செல்போன் உள்ளிட்ட அனைத்தும் இருக்கிறது. ஆனால், அந்த சிறுமிக்கு அன்பு இல்லை. பிசிக்கல் ரிலேசன்ஷிப் பற்றி கண்டிப்பாக பெற்றோரிடம் மறைக்க முடியாது அதனால் அதை சொல்லியே ஆகவேண்டும் என்று அந்த சிறுமியிடம் கூறியபோது வேண்டாம் என அழுதார். உனக்கு ஒரு லவ் கிடைக்கவில்லை என்பதால் தானே அந்த மாதிரி ரிலேசன்ஷிப்புக்குள் போன, அதனால் அதை பற்றி உன் பெற்றோரிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று சொல்லி, அந்த விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உடனே கோபப்பட்டு அடிக்கப் போனார்கள். அந்த சிறுமி, தன்னுடைய ஆறு வயதில் இருந்து பெற்றோரிடம் என்னென்ன அன்பு கிடைக்கவில்லை என பட்டியலிட்டு சொன்னார்.

ஒரு முறை தன்னுடைய பிறந்தநாளுக்காக எல்லோரையும் அழைத்து பெரிய ஹோட்டலில் விருந்து வைத்தீர்கள். ஆனால், நீங்கள் ஒரு முறைக்கூட எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதேயில்லை. வெக்கேஷனுக்காக மலேசியா போனபோது என்னை மட்டும் உங்களுடைய அசிஸ்டெண்டோடு அனுப்புனீர்கள், ஆனால் நீங்கள் வரவில்லை என நிறைய சொன்னார். உன் தப்பை மறைக்க எங்கள் மீத தப்பு கண்டிபிடிக்கிறியா என்பது தான் பெற்றோரின் பார்வை. அப்போது, இன்றைய தலைமுறைகள் தகுதிக்கு மீறி நிறைய கேட்கிறார்கள் தான், ஆனால், உங்களுடைய மகளுக்கு அதையும் தாண்டி உங்களுடைய அன்பு தான் தேவைப்படுகிறது என்பதை புரியவைத்தேன். உடனேயே அந்த ரிலேசன்ஷிப்புக்குள் போயிருக்கமாட்டாள், அந்த பையன் மீது நம்பிக்கை வைத்து அன்பு கிடைத்தப்பின் தான் அது மாதிரி செய்திருப்பாள் என்பதையும் புரியவைத்தேன். இன்னும் அவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு புரிய வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். அம்மா ஓரளவுக்கு இறங்கிட்டாங்க, ஆனால், அப்பாவுக்கு இன்னமும் அந்த கோபம் இருக்கிறது. ஒரு மனிதரிடம் இருந்து மட்டும்தான் அன்பு வரும் என எதிர்பார்க்காமல் எங்கே இருந்து அது கிடைக்கும் எனத் தேடி முயற்சி பண்ணு என அந்த சிறுமிக்கும் கவுன்சிலிங் கொடுத்தேன். இப்ப இருக்கும் சூழ்நிலையில், கணவனும் மனைவியும் வேலைக்கு போய் தான் ஆகவேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு பத்து நிமிடமாவது குழந்தையிடம் பேசி அவர்களுடைய எண்ணத்தை புரிந்துகொள்ள வேண்டும். என்ன வேலையில் இருந்தாலும், ஒரு 10 நிமிடமாவது குழந்தைக்காக நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள வேண்டும்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe