தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வதால் எழும் பிரச்சனை என்ன? - கிருத்திகா தரண் பகிரும் உணவும் உணர்வும்:04

krithigatharan

nutritionist Krithika Tharan

ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர் கிருத்திகா தரன், மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ‘உணவும் உணர்வும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தூக்க மாத்திரையை அதிகமாக எடுத்துகொண்டால் வரும் பிரச்சனை குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

என்னிடம் தூக்க மாத்திரையை விட வேண்டுமா? என்று கேள்வி கேட்டவர்கள் உண்டு. 65 வயது பெண் ஒருவர் தூக்க மாத்திரையை விட்டதற்கு பின்பு, தொடர்ந்து 5 நாட்கள் விரதம் எல்லாம் இருந்தார். அந்த அளவுக்கு வலிமையாக மாறினார். இவர் 15, 20 வருடங்களாக தூக்க மாத்திரை போட்டு வந்திருக்கிறார். தூக்க மாத்திரையை போட்டுதான் அவர் தூங்குகிறாரா? என்றால் அதுவும் இல்லை. அதற்கு அவர் அடிமையாக ஆகிவிட்டார். எத்தனை வருடம் டோஸ் அதிகரிக்க போறீங்க இல்லை, தூக்கம் வராத ஒரு மாத்திரையை எத்தனை நாள் போட போறீங்கள் என்று கேட்டேன். அடுத்த நாளில் இருந்து அவர் தூக்க மாத்திரையை விட்டுவிட்டார். 15, 20 வருடமாக தூக்க மாத்திரையை போட்டால் தான் தூக்கம் வருகிறது என்று அவர் நம்பி இருக்கிறார்.

உறக்கத்தின் ஸ்கோரை 90க்கு கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டம். ஆனால், அவர் 98,99 ஸ்கோர் அளவில் உறங்குகிறார். காலையில் சரியான எக்சர்சைஸ், சரியான உணவு, சரியான மெண்டல் ஹெல்த் எல்லாமே சரியாக இருந்தால் தான் 95க்கு மேல் உங்களுடைய ஸ்லீப் ஸ்கோர் இருக்கும். தூக்க மாத்திரையை விட்டவர்களால் இந்த ஸ்லீப் ஸ்கோரை எடுக்க முடிகிறது. தூங்கும் போது முதலில் நம்முடைய காபாவ ஆக்டிவேட் செய்யும். அந்த நியூரோட்ரான்ஸ்மிட்ட நம்ம ஆக்டிவேட் பண்ணும் பொழுது அது ஆக்டிவேட் ஆகும். வெறும் காபாவை ஆக்டிவேட் செய்தால் தூக்கம் வரும் என்றெல்லாம் கிடையாது. நம்முடைய மூளையில் நிறைய சிஸ்டங்கள் இருக்கிறது. நாம்  வெளிநாட்டுக்கு போகும் பொழுது அந்த கிளாக்குக்கு (Clock) ஏற்ற மாதிரி நம்மளோட உடல் அட்ஜஸ்ட் ஆகும். சூரியனுக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் ஆகும். அதுக்கு பேர் சர்காரியன்தான்.

9 மணிக்கு உங்களுக்கு மெலோட்டனின் சுரக்க ஆரம்பிக்கும். மெலோட்டனின் ஆரம்பிச்ச உடனே உங்களோட பவுல் மூமென்ட் ஸ்டாப் ஆகும். பவுல் மூமென்ட் ஸ்டாப் ஆன உடனே நம்மளோடமோட்டார் ஆக்டிவிட்டிஸ் ஆகி நம்முடைய உடல் நின்றுவிடும். கிட்டத்தட்ட நம்மளோட எதுவுமே இருக்காது. தூக்கத்தில இருந்து ஒவ்வொரு நாளும் புதிய பிறப்பு. அந்த அளவுக்கு தூக்கம் உள்ளாகுது. ஆனால் தூக்க மாத்திரை அப்படி பண்றது இல்லை. நம்மளோட பிரீக்வன்சி (prequency) ஆல்பா, பீட்டா, காமா இப்படி எல்லாம் போகும். அதற்கு ஏத்த மாதிரி நம்மளோட பிரீக்வன்சி உடம்போட ஆக்டிவிட்டி ரொம்ப ஸ்லோ ஆகும். இன்னொரு பக்கம் ரெம், நான் ரெம். அதாவது ராப்பிட் ஐ மொமண்ட், நான் ராப்பிட் மொமண்ட். அது ஒவ்வொரு இரண்டரை மணிக்கு ஏற்ற மாதிரி மாறும். அதை தவிர நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸ், செரோட்டினின், காபா வேலை செய்யும். இவ்வளவு அறிவியல் நம்மளோட உடலுக்குள்ள தூங்கும் பொழுது நடக்குது. அது நடப்பதனால் தான் நாம் எல்லோரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறோம். அது நடக்கவில்லையென்றால், இம்சோம்னியா, ஸ்லீப்பின் டிஸ்ஆர்டர் என 6 வகையான மேஜர் டிஸ் ஆர்டர் வரும்.  

நாம் தூக்க மாத்திரை போடும் போது மூளையில் நடக்கக்கூடிய வேலைகளை அது கெடுக்கிறது. தூக்க மாத்திரை போடும் போது மூளையின் எந்த பகுதியை பாதிக்கிறது என்பது நமக்கு தெரியாது. அதற்கான கண்டுபிடிப்புகள் கம்மியாக இருப்பதால் டார்கெட்டட் ஸ்லீப் தெரப்பி கொடுக்கவே முடியாது. மாத்திரைகள் ஒட்டுமொத்த வேலைகளை செய்யும், ஆனால் இயற்கையாக வரும் தூக்கம் ஒட்டுமொத்தமாக செய்யாது. மாத்திரை போடுவதால், ஒட்டுமொத்த காக்னிஷன் பாதிக்கப்படும். நினைவு திறன் குறைவது போன்ற பாதிப்புகள் எல்லாம் ஏற்படும். சிலருக்கு அதிகமாக மூட் ஸ்விங்ஸ் வரும். அதுதான் ஹைரீட்டபிலிட்டி. இது மாத்திரை போடுறவங்களுக்கு வர வாய்ப்பு ஜாஸ்தி. அவங்களோட மூட் வந்து நம்மளோட மூட் மாதிரி இருக்காது.

தூக்க மாத்திரை போடலாம் தான், ஆனால் வருடக் கணக்கில் எல்லாம் போடுகக் கூடாது. இதனால், சிக்கல்கள் மிக அதிகமா இருக்கும். உடல் நலத்திலயும் பிரச்சனை வரும். உழைப்பு, நல்ல உணவு எடுத்துக்கொண்டால் இயற்கையாகவே நன்றாக தூக்கம் வரும். கண்டிப்பாக கவுன்சிலிங் செல்ல வேண்டும். இது எல்லாமே சேர்ந்து கண்டிப்பாக நம்மளோட ஸ்லீப்ப கொண்டு வர முடியும், மாத்திரைகளில்  இருந்து மீள முடியும் நம்ப வேண்டும். அதிக நிறம் இருக்கும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சாலட்ஸ் நிறைய சாப்பிட்டு  புரோட்டீனையும் பக்காவா வைக்கணும். சரியான முறையில் நல்ல கொழுப்புகள் இருக்கிற இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

Krithika Tharan Nutrition
இதையும் படியுங்கள்
Subscribe