ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர் கிருத்திகா தரன், மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ‘உணவும் உணர்வும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மாதவிடாயின் போது தொடர் ரத்தப்போக்கு பிரச்சனை குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பெண் வந்தார். அவரது எடை 80கி இருந்தார்கள். இவருக்கு திருமணமாகி இரண்டு டீனேஜ் மகள்கள் இருக்கின்றனர். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புமிக்க குடும்ப தலைவியாக இருக்கிறார். இந்த பொறுப்பே இவருக்கு பிரச்சனையாக மாறிவிட்டது. மகள்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதும், அவர்கள் மீதுள்ள அதீத அக்கறையும் கவலையும் இவருக்கு சிக்கலாக மாறியுள்ளது. இதனால் அவருக்கு அதிக மன அழுத்தம் வந்து மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு வந்துள்ளது. மன அழுத்ததால் தான் ரத்தப்போக்கு வந்தது நான் கூறவில்லை. ஆனால், அதுவும் ஒரு காரணம். கருப்பை சம்பந்தமாகன பிரச்சனை நிறைய இருக்கிறது. ஒன்று, மாதவிடாயே வராமல் இருப்பது இல்லையென்றால் அதிகமாக மாதவிடாய் வருவது, இல்லையென்றால் மூட் ஸுவிங் (Mood swing) இந்த மாதிரியான ஹார்மோன்ஸ் சிக்கல்கள் மிக அதிகமாக இருக்கிறது.
இந்த மன அழுத்தம் கூட அந்த பெண்ணுக்கு ஹார்மோன்ஸ் சிக்கலை கொண்டு வந்திருக்கும். டீனேஜ் பெண்கள், தாய் சொல்வதை எல்லாவற்றையும் கேட்க மாட்டார்கள் தான். அதனால் டீனேஜ் வயதில் இப்படி தான் இருப்பார்கள் என அதிகமாக சிந்திப்பை விட்டுவிட்டு அந்த தாய் பக்குவப்பட வேண்டும். டீனேஜ் பெண்களிடம் சமுதாயத்திற்கு தேவையான கல்வியைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். அதே மாதிரி அதிக ரத்தப்போக்கு மன அழுத்ததால் மட்டுமே வராது, அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். அதற்கான ஊட்டச்சத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து விஷயங்களையும் மருத்துவர் இல்லாமலே சரி செய்ய முடியாது. முக்கியமாக கருப்பை சம்பந்தமான சிக்கல்களை மருத்துவரோடு இணைந்து தான் சரி செய்ய முடியும். நான், அந்த பெண்ணின் கவுன்சிலிங்கை சரி செய்றேன், அவருடைய குடும்ப சூழலை சரி செய்றேன். உடல் நலத்தை சரி பண்ணும் போது உடலிலும் அழுத்தம் இருந்தது. அதனால், அவரை ஆயுர்வேத மசாஜையும் எடுத்துக்கொள்ள சொன்னேன். அதை தவிர ஸ்ட்ரெந்த் டிரெய்னிங் போக சொன்னேன். இதையெல்லாம் சேர்ந்து செய்யும் போது அவருக்கு ரத்தப்போக்கு சரியானது. மகள்களை பற்றியே கவலைப்படுவதை விட்டுவிட்டு இது போன்ற விஷயங்களில் கவனத்தை திருப்பியதால் அவருடைய எடை குறைந்து ரொம்ப நன்றாக இருக்கிறார். இந்த மன அழுத்தத்தை குறைந்த காலத்திலேயே சரி செய்ய முடியாது, அது வாழ்வின் மாற்றம். அதுவும் இந்த மாதிரியான மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட காலம் ஆகும்.
இந்த உடலை குறைக்கும் போது பெரிய தன்னம்பிக்கை வரும். மனிதர்கள் நம்மை விரும்புகிறார்கள் என்பது நமக்கு பிடிக்கும். நம்முடைய உடலை எப்படி வைத்திருக்கிறோம் என்பதை மனிதர்கள் கவனிக்கிறார்கள். உடல் மாறுவதே உணவு பழக்கத்தினால் தான். உடல் பயிற்சி, உணவு. ஆர்கன் மீட் மாதிரியான மீட், ரத்த பொறியல்கள், மோர், சத்துமிக்க கீரைகள், ஸ்பிரவுட்ஸ், நட்ஸ் இந்த மாதிரியான பல்வேறு உணவுகள் கொடுத்தேன். இப்படி செய்துமே அவருக்கு ஊசி போட்டு தான் சரியானது. ஏனென்றால் அவ்வளவு லீக்கேஜ் உள்ளே இருந்தது. அதனால், டயட், உடற்பயிற்சி, சரியான நேரத்தில் தூக்கம், போன்வற்றை செய்து ஹார்மோன்ஸ் பேலன்ஸ் செய்ய வேண்டும். இப்போது அவர் ரொம்ப நன்றாக வந்துவிட்டார்.
நமது வாழ்க்கை முறையே நிறைய மாறிவிட்டது. ஜங்க் ஃபுட் (Junk food) அதிகமாக எடுத்துக்கொள்கிறோம், விட்டமின் டி இல்லாமல் உணவு சாப்பிடுகிறோம். முக்கியமாக பெண்களுக்கு விட்டமின் டி மற்றும் ஹச்பி ஆகியவை குறைவாக இருப்பதால் தான் பிரச்சனை வருகிறது. பெண்களோட ஆரோக்கியத்தை முக்கியமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க ஆண்கள். அது ஒரு நல்ல மாற்றம். தன்னோட ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் என்பதற்கான புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு ரொம்பவே கம்மியாக இருக்கிறது. அதிலும் குடும்ப பெண்கள், குழந்தைகளை கவனிப்பது கணவனை கவனிப்பதில் மட்டுமே ஈடுபாடோடு இருக்கிறார்கள். தவிர தன் ஆரோக்கியம் மீதான கவலைகள் குடும்ப பெண்களுக்கு இருப்பதே இல்லை. எப்போதும் சோர்வாக இருப்பது, எந்த வேலையும் செய்ய முடியாமல் போவது, கோபப்படுவது மாதிரியான ஒரு நிலைமைக்கு பெண்கள் வருகிறார்கள். கர்ப்பம் சம்பந்தமாகவோ, மார்பு சம்பந்தமாகவோ பரிசோதிக்க மாட்டார்கள். பிரஸ்ட் கேன்சர் மாதிரியான சோதனை செய்ய மாட்டார்கள். கிராமங்கள், நகரங்கள், மிடில் கிளாஸ் பெண்கள் என எல்லா பெண்களும் தனக்கான அந்தரங்க உறுப்புகளில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை யாரிடமும் சொல்வதில்லை.
15 நாள் தொடர்ந்து ரத்தப் போக்கு ஆகிறது என்றால் வெளிப்படையாக வெட்கமே இல்லாமல் சொல்ல வேண்டும். அது வழியாக இத்தனை குழந்தைகளும் பிறந்திருக்கிறது. மனித இனத்திற்கான காரணமே அந்த ரத்தம் தான். அது கெடுதலே இல்லை, அது ஒரு கரு. அப்படி வந்தால் தீட்டு என்று சொல்லி பெண்கள் மீதும் ஒரு கட்டமைப்பை திணிக்கப்படுகிறது. தொடர்ந்து ரத்தப்போக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். ஹீமோகுளோபினுக்கான உணவுகளை எடுக்க வேண்டும். மனநிலை ஆலோசனை எடுக்க வேண்டும். ஹார்மோன்ஸ் பேலன்ஸுக்கான உணவுகளை எடுக்க வேண்டும். எல்லாமும் சரி ஆகும் வரை தொடர்ந்து அதை செய்யுங்கள். இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் சரி ஆகிடும் நம்புங்கள், சரி ஆகிடும். கர்ப்ப பையே இல்லாமலும் நாம் நன்றாக இருப்போம் என்ற மன தைரியம் வேண்டும்.