Skip to main content

"உடைந்திருந்த அவளின் கண்ணாடி வளையல்கள், ஒரு நள்ளிரவில் உடைந்த அவனின் இதயத்தை ஒத்திருந்தது.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #5

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

ரபச


ஆக்ஸிஜனின் குமிழ்களோடு அமானுஷ்யங்களும் கைகோர்த்து உலகைச் சுற்றி வரும் இவ்வுலகில், "தன்" நம்பிக்கையை விடவும், ரத்தவாடையைத் தன் முதுகுப் பைகளில் சுமக்கும் வல்லூருகளின் வாசஸ்தலமான மூடநம்பிக்கைகளின் புதருக்குள்தான் எத்தனை நச்சு மிகுந்த நாகங்கள். அதன் விஷம் தோய்ந்த இரட்டை நாக்குக்கு பலியாகும் இரையை ருசிப்பதைப் போன்று மனிதனின் மனச்சுவர்களுக்கு கறும் வர்ணத்தை எளிதாய்க் குழைத்துப் பூசிவிடுகிறது. 

 

இந்த வார மைக்ரோ நொடியில் மையப்புள்ளிகளை இணைக்கும் மணித்துளிகள் துகள்களாய் மாறி நம்மை நெருப்புக் கங்குக்குள் கூட்டிச் செல்லப் போகிறது. கங்குகளின் சூட்டை உணர்ந்து நம்மை எச்சரிக்கும் இருதயத்தைக் கூட 'சும்மாகிட' என்று பலமுறை அதட்டியிருப்போம். அடுப்பின் ஜூவாலைக்குக் கட்டுப்பட்ட பாலினைப் போல் துர் எண்ணங்கள் நம்மனத்திரையில் தோன்றத்தான் செய்கிறது. அது நமை ஆக்ரமிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் பேய்ச் சிரிப்பு சிரிக்கத்தான் செய்கிறது. அவர்கள் நம்முள்ளேயே நிழலாய் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். நம் உள்ளுணர்வுகளில் அலட்டல் இல்லாமல் 'தெறிக்கவிடலாமா?' என்று சந்தர்ப்பத்திற்காக பசியோடு ஏங்கிக் கொண்டு இருக்கி"றான்" அல்லது "றாள்."

 

ஒரு புள்ளியில் அது அதீத தோல்வியோ, எமாற்றமோ, பரிதவிப்போ, பயமோ , துரோகமோ ஏதோவொன்று அவனுடன் நம்மை இணைத்துக் கொள்ளத் துடிக்கிறது. அது பசிகொண்ட யானையின் பிளிறல் போல அடங்கமறுத்து காட்டையே அழித்துத் தன் வெறி தீர்த்துக்கொள்ளும், இதுதான் இலக்கென்று இதுதான் தேவையென்று உணராமல் தன் எதிர்ப்பட்டவைகளையெல்லாம் தன்னோடு அனைத்துக் கொள்ளும் - கொல்லும். கட்டுப்படாத காட்டாற்று வெள்ளத்தைப் போலத்தான் மனிதனுக்குள் ஒட்டிக்கொள்ளும் சைக்கோத்தனமான நினைவுகளும், நொடிப்பொழுதில் புழுதிக்காற்றாய் சுழன்றடிக்கும். 

 

சுடுகாட்டுக்குப் பக்கத்தில்  அமாவாசையின் அடர் அழகில் அந்த குடிசையில் இருந்து மட்டும் செந்நிற ஒளி கீற்று பீறிட்டு எழுந்திருந்தது. மனித சாம்பல்களின் வெண்துகள்கள் காற்று மண்டலத்தின் புகை மூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு வெளியேற மனமின்றி அந்தச் சுடுகாட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அச்சாம்பல்களுக்கு நடுவில் வானின் மிகப்பெரிய நட்சத்திரம் தரையில் தன் கலவியைச் செய்வதைப்போல் ஒன்றுக்கொன்று கோடுகள் சுற்றியிருந்த அந்தத் தரைப்பகுதியில் உடல் இரண்டாய் துண்டிடப்பட்ட எலுமிச்சை குங்குமத்தில் தன் அலங்காரத்தை முடித்திருக்க, பன்னீரும், சந்தனத்தின் வாசனையைத் தாண்டி, சற்று முன் திசைக்கொன்றாய் பலிகொடுக்கப்பட்ட நிறைசூல் பன்றி, கரும்பூனையின் ரத்தமும் கலந்து கெட்டவாடை வீசியது அங்கே. சிவப்புக் கம்பளமாய் விரிந்திருந்த ரத்தத்தில் சற்று முன் நிர்வாணமாக்கியிருந்த அந்த நிறைசூல் பெண். 

 

உடைந்திருந்த அவளின் கண்ணாடி வளையல்கள் ஒரு நள்ளிரவில் உடைந்த அவனின் இதயத்தை ஒத்திருந்தது. கவனத்தைச் சிதறவிடாமல் தலையைச் சிலுப்பி, தன் முன் மல்லாந்திருந்த அந்த மேடிட்ட வயிற்றுக்குள் இத்தனை நேர அதிர்ச்சியில் பயந்திருந்த சூலை எடுத்து புசித்த ரத்தனின் கண்கள் கறுப்பு மையின் அடர்த்திக்கு நடுவில் அடர் சிவப்பாய் பயமுறுத்தியது. சற்று முன் ரத்தனின் கோரப் பற்களுக்கு இரையான அவளின் வயற்றுப்பகுதி காலியாகி இருக்க, நிலைத்த கண்களில் கடைசி நிமிட உயிர் மரணப் போராட்ட வலி உறைந்து போய் இருந்தது. பன்றியின் கொழுப்பினை அவள் பிளந்த வயிற்றில் ஊற்றி கரும்பூனையின் ரத்தத்தில் நிறை சூலறந்து புசித்த அரைவயிற்றுப் பிள்ளையின் மீதமிருந்த தொப்புள்கொடியைத் திரியாக்கி தீபமேற்றினான். ரத்தம் பூசிய அரைப்பிள்ளையின் மண்டையோட்டை கரும்பானைக்குள் போட்டு வெள்ளைத் துணியால் மூடி முன்பிருந்த எட்டுக்குள் அருகில் ஒன்பதாவதாய் வைத்து அழகு பார்த்தான்.

 

ரக

 

அடுத்த மண்பாட்டம் காலியாகவே இருந்தது இன்னமும், அதை எப்போது நிரப்பப் போகிறாய் ரத்தன் என்று அந்த பானைக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. நான் ரத்தன் மாந்திரீகமும், மந்திர உச்சாடணமும் தாலாட்டாய் வருடி வளர்ந்த கேரள நம்பூதரியின் மகன் முகத்திலும், உடலிலும் இருந்த ஆண்மை உடலில் இல்லாமல் போனது என் குறையில்லை தான்?! எனக்குள் மறைந்திருந்த ரகசியத்தை வெளிக்கொண்டு வந்தாள் லட்சுமி. ராத்திரியின் படுக்கைகளில் சிந்தும் அவளின் கண்ணீர் முத்துக்களுக்கு 700 நாட்களுக்குள் விலக்களிக்க முன் வந்தாள். மன்றாடினேன் நான். எதையும் தருகிறேன் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்று! என் கர்ப்பப்பை நிறைக்கும் ஆண்மைத்திரவம் சுரக்காத நீ.... அச்சிலடமுடியாத வார்த்தைகளால் கலங்கடித்தாள். 

 

ஏளனமும், இளப்பமும், அவளுடன் நிற்கவில்லை, பார்க்கும் விழிகளெல்லாம் என் இயலாமையைக் கொடூர புன்னகைக்கு தகவல் அனுப்பியது. சற்றே சாய்ந்து மேடிட்ட வயிற்றைச் சுமந்து, பூரண சந்திரனின் முகத்தோடு கைநிறைய வளையல்களைச் சுமந்து வரும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நீ அதற்கு லாயக்கில்லை என்று அவர்கள் என்னை ஏளனமாய் கண்டு சிரிப்பதைப் போல் தோன்றும். பார் எங்கள் ஆண்மையை என்று அவள் தலைசாய்த்து வரும் கணவனின் திணவெடுத்த தோள்கள் பரிகசிக்கும். என்னுள் ஏதோ விலகியது அவர்களை அந்தச் சிரிப்பினை மேடிட்ட வயிற்றில் நான் அடைய முடியாத பொக்கிஷத்தை எனக்குள் நிரப்பிக்கொள்ள வழியை யோசிக்க அதன் முடிவே இன்று எட்டு மண்பாண்டங்களின் கர்ப்பம். 

 

http://onelink.to/nknapp

 

இதில் என் லட்சுமியும் இருக்கிறாள். மூன்றாவதா நான்காவதா என்று சரியாய்த் தெரியவில்லை, நிலவொளியின் நிர்வாணத்தில் அவளின் நிர்வாணம் எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை, கூந்தல் சுமந்த மலர்களுக்கும், பளிங்கு கைகளுக்குள் சிக்கிக்கொண்ட வளையல்களுக்கும் நான் விடுதலையளித்தேன் அன்றைய இரவு, அதேபோல் அவளின் வயிற்றுப்பிள்ளைக்கும். உப்பிய வயிற்றுக்குள் பாளம் பாளமாய் விரிந்த அக்கோடுகளை எல்லாம் இரத்தச் சிவப்பாக்கினேன். அள்ளிக் கொட்டிய நெருப்பின் சூட்டைத் தணித்தது அவளின் அலறலோடு சிந்திய ரத்தமும் மரணச்சிரிப்பின் முன்னால் அவளின் ஏளனச்சிரிப்பு அடங்கியிருந்தது. அதன் பிறகு என் நிறைசூலிப் பலிகள் என் ஆண்மையைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது எட்டாவது தடவையாய், அது பெண்தான் என்றில்லை அப்பலிகள் அதுவாகக் கூட இருக்கலாம். அது சுமக்கும் சூல் பூச்சிகள் எல்லாமே என் நா சுவைக்கும் மாமிச பிண்டங்கள். அதன் ரத்தத் தீற்றல்கள் என் அபிஷேகத் தீர்த்தங்கள். இப்போது சொல்லுங்கள் நான் ஆண்மை நிரம்பியவன் தானே!

 

 

Next Story

ஐ.ஜி. தலைமையில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Awareness program for women led by I.G.

 

புதுக்கோட்டை உட்கோட்டத்தில் நகர ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மத்திய மண்டலம் காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (07.12.2021) பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

இதில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் சைபர் குற்றங்கள், இலவச உதவி எண்கள் 155260, 181, 1098 & 112 குறித்துமான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியாரின் பாடலைப் பாடி விழப்புணர்வு ஏற்படுத்தினார். 

 

மேற்படி நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் தமிழரசி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஷியா சுரேஷ், மாவட்ட குழந்தை நல அலுவலர், மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா, ராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

 

Next Story

முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும்... குட்டியானையில் ஏறி கல்லூரி போகும் மாணவிகள் குமுறல்!

Published on 25/10/2021 | Edited on 26/10/2021

 

ரக


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகரப் பேருந்துகள் பெண்கள் பயணக்கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்தார். அதனால் அனைத்து நகரப் பேருந்துகளும் விலையில்லா பேருந்துகளாகிவிட்டது. அதே நேரத்தில் கல்லூரி செல்லும் மாணவிகள், நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்காததால் குட்டியானை எனப்படும் நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனத்தில் ஏறி தினசரி கல்லூரி செல்லும் அவல நிலையும் தமிழகத்தில் தான் நடக்கிறது. 

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலிருந்து திருவோணம் வழியாக ஒரத்தநாடு செல்லும் பிரதானச் சாலையில் பயணித்த போது தான் அந்த ஆபத்தான பயணத்தை நம்மால் காணமுடிந்தது. குட்டி யானை வாகனங்களில் நாற்று கட்டுகளை ஏற்றிச் செல்லும் பல வாகனங்கள் முந்திச் செல்ல அடுத்து நடவுக்குச் செல்லும் பெண்களை ஏற்றிக் கொண்டு சில நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனங்கள் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் துக்க நிகழ்வுக்காக மாலைகளுடன் ஒருநான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனம் சென்றது, அதில் ஆண்களும் பெண்களும் சென்றனர்.

 

இந்தக் காட்சிகளை பார்த்த சில நிமிடங்களில் ஒரு நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace)  வாகனத்தில் சுமார் 50, 60 மாணவிகள் பேக்குகளுடன் நின்று கொண்டிருக்க வாகனம் நம்மை முந்திச் சென்றது. வேலைக்கும் துக்கத்துக்கும் குட்டியானை வண்டியில போறாங்க; மாணவிகள் ஏன் இப்படி போறாங்க என்ற கேள்வி எழ அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலைக்கல்லூரி முன்பு நின்றது அந்த குட்டியானை வாகனம். அதிலிருந்து மொத்த மாணவிகளும் கீழே இறங்கி நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே வேக வேகமாக கல்லூரிக்குள் ஓடினார்கள். 

 

அதில் சில மாணவிகளை நிறுத்தி இப்படி சரக்கு வாகனங்களில் பயணிக்க கூடாது. சமீபத்தில் கூட அதாவது அக்டோபர் 7 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகரில் இருந்து பரவாக்கோட்டைக்கு நடவுக்காக ஒரு டாடா ஏசிஇ-ல் போனவர்கள் அந்த வாகனம் கவிந்து அதில் போன 15 பேரும் படுகாயமடைந்தார்கள். சிலர் இன்னும் சிகிச்சை முடிந்து வீடுவந்து சேரல. அதனால படிக்கிற நீங்கள் இது போன்ற சரக்கு வாகனத்தில் பயணிக்கலாம்? போலீஸ் பிடிச்சு அபராதம் விதிப்பாங்க. சம்மந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் கூட செய்வாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. இடை மறித்த சில மாணவிகள்.. அண்ணா நீங்க சொல்று எல்லாம் சரி தான்.

 

நாங்க செய்றது ஆபத்தான சட்டத்திற்கு புறம்பான பயணம் தான் ஒத்துக்கிறோம். ஆனால் ஏன் இப்படி ஆபத்தான பயணம் செய்றோம்னு தெரியுமா? ஒரத்தநாடு கலைக்கல்லூரியில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தினசரி வந்து போற சுமார் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கிறோம். கரோனா காலத்துக்கு முன்னால எங்க ஊருக்குள்ள டவுன் பஸ் வரும் ஏறி கல்லூரிக்கு வருவோம். ஆனா கரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட பிறகு கிராமங்களுக்குள்ள டவுன் பஸ்கள் சரியா வருவதில்லை. அதிலும் டவுன் பஸ்ல பெண்களுக்கு இலவச பயணம் என்று முதலமைச்சர் அறிவித்த பிறகு சுத்தமாவே டவுன் பஸ் வரல. எங்கள் வசதிக்காக முதல்வர் அறிவிச்ச திட்டத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முடக்கி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துறாங்க.

 

நேரத்துக்கு கல்லூரி வரனும் அதனால் எல்லா மாணவிகளும் ஆளுக்கு 10, 20 ரூபாய் சேகரித்து தினசரி லோடு ஆட்டோவுல தான் வந்து போறோம். பஸ் விடச் சொல்லி பல முறை போராடியும் பலனில்லை. இது தமிழக முதல்வர் கவனத்துக்கு போனால் தான் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.  இதில் பலரும் முதல் பட்டதாரிகளாக படிக்க வரும் பெண்கள். போக்குவரத்து வசதி இல்லாத இதே நிலை நீடித்தால் பல நூறு மாணவிகளின் பட்டதாரி என்னும் கனவு படிப்பு கனவாகவே போய்விடும். தமிழக அரசு மாணவிகளின் நலன் கருதி கறம்பக்குடிக்கு மற்ற பல கிராமங்களுக்கும் பழைய நகரப் பேருந்துகளை இயக்கினால் நல்லது; கல்லூரி செல்லும் மாணவிகள் பெரும் பயனடைவார்கள்...