Advertisment

வெளிநாட்டு ஹவுஸ் ஓனர்; பறிபோன வீடு - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 13

lady-detective-yasmin-case-explanation-13

Advertisment

வீட்டு உரிமையில் ஏற்பட்ட பிரச்சனை பற்றியும் அதைப் புலனாய்வு செய்தது பற்றியும் குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் விவரிக்கிறார்

இந்த வழக்கு பற்றி நான் விவரிப்பது பலருக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். வெளிநாட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள தங்களுடைய வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். மாதம் தோறும் வீட்டு வாடகையை அக்கவுண்டில் செலுத்தி விட வேண்டும். ஆனாலும், சரியான நேரத்தில் அவர்கள் வாடகை செலுத்தவில்லை. "ஆறு மாதமாக வீட்டில் குடியிருந்தவர்கள் வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு எந்த வகையிலும் தொடர்பிற்கு அவர்கள் சுத்தமாக வரவில்லை. திடீரென வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு கோர்ட்டிலிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்திருக்கிறார்கள்.

அதாவது “இது எங்களுடைய சொத்து,எங்களை ஏமாற்றிஇந்த சொத்தை வாங்கிவிட்டீர்கள்” என்று ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்" என்றும் அது குறித்து விசாரித்து சொல்ல வேண்டும் என்றும் வெளிநாட்டு ஹவுஸ் ஓனர் தரப்பிலிருந்து எங்களிடம் கூறினர். இந்த வழக்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம்.

Advertisment

குறிப்பிட்ட அந்த வாடகை இருக்கும் குடும்பத்தை நாங்கள் பின்தொடர்ந்தோம். உண்மையில் இப்போது அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்ணின் கணவரிடம் இருந்துதான் வெளிநாட்டு ஹவுஸ் ஓனர்கள் வீட்டை வாங்கியுள்ளனர். அந்த கணவரோ லிவிங் டுகெதர் உறவில் அந்த பெண்ணுடன் இருந்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் இறந்துவிட்டார். அதனால் வாடகை கொடுக்காமல் அந்த பெண் இருந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் "என் கணவரை ஏமாற்றி இந்த சொத்தை வாங்கிவிட்டனர்" என்று அவருடைய உண்மையான குடும்பத்தினர் நோட்டீஸ் அனுப்பினர். இது வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு திடுக்கிட வைத்த தகவலாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து சொத்து வாங்குபவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் முழுமையாக பரிசோதித்து ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? இந்த சொத்திற்கு வேறு வாரிசுதாரர் இருக்கிறார்களா என்பதையெல்லாம் பரிசோதித்து வாங்க வேண்டும்.

ஏலத்தில் இருக்கும் சொத்தை போகியத்துக்கு வாங்கி ஏமாந்தவர்களும் நிறைய இருக்கின்றனர். அதன் பிறகு வீடும் இல்லாமல், பணமும் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் நம் அனைவருக்கும் தேவை.

Investigation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe