Advertisment

இல்லற வாழ்வில் நோயும் துரோகமும்; இளம்பெண்ணின் கண்ணீர் கதை - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 12

lady-detective-yasmin-case-explanation-12

Advertisment

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் குறித்த வழக்கு ஒன்றை பற்றிய தகவல்களை நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்து கொள்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி நோய் இருந்தது. தனக்கு ஏற்கனவே திருமணமானபோது கணவருக்கு எச்ஐவி இருந்தது குறித்து தனக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைத்ததால் தனக்கும் அந்த நோய் பரவியதாக அவர் தெரிவித்தார். தற்போது கணவர் உயிருடன் இல்லை. அதன் பிறகு அந்தப் பெண் எச்ஐவி நோய் இருக்கும் இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் பாசமாக இருக்கும் கணவர் தன்னிடம் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை என்று அவர் கூறினார்.

வீட்டில் வயாகரா மாத்திரைகள், காண்டம் ஆகியவை இருந்ததை இவர் பார்த்திருக்கிறார். ஆனால் தன்னுடன் சந்தோசமாக இல்லாமல்இதை வைத்து என்ன செய்கிறார் என்று சந்தேகித்து நம்மிடம் வந்தார். அவருடைய கணவரை நாங்கள் பின்தொடர ஆரம்பித்தோம். வேலை தொடர்பாக அவர் எப்போதும் பிசியாகவே இருந்தார். அந்தப் பெண்ணுடைய மாமியாரும் நாத்தனாரும் அடிக்கடி மருந்தகத்துக்கு சென்று ஏதோ வாங்கி வருவதை நாங்கள் கவனித்தோம். காண்டம் மற்றும் வயாகரா மாத்திரைகளை அவர்கள் தான் வாங்கிச் செல்கிறார்கள் என்பது எங்கள் விசாரணையில் தெரிந்தது.

Advertisment

ஆனால் இதை எதற்காக அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவருக்கு நிறைய சொத்துகள் இருந்தன. விருப்பமில்லாமல் தான் அவருடைய தாய் அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி தன்னுடைய மகளுக்கு சொத்துக்களை கொடுப்பதற்காகத் தான் தாய் அனைத்தையும் செய்தார் என்பது அதன் பிறகு தெரிந்தது. கணவரிடம் உட்கார்ந்து அனைத்தையும் பொறுமையாகப் பேசும்படி நாங்கள் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை வழங்கினோம். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையை அவரே பார்த்துக் கொண்டார்.

Investigation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe