jay zen manangal vs manithargal 89
உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.
ஒரு அம்மா தனது மகள், மகனோடு வருகிறார். அவர்கள் குடியிருக்கும் அப்பார்மெண்டில் யாராவது தண்ணீர் கேன் போடும் பையன் வந்தால் கூட அந்த பையனோடு இந்த அம்மாவை தொடர்புப்படுத்தி அவரது கணவன் பேசுவார். இந்த பெண், ஏதாவது ஒரு நல்ல உடை அணிந்தாலோ யாரோ ஒருவரை மயக்குவதற்காகவே இந்த உடை அணிகிறாய் என கணவன் சந்தேகப்படுவார். இந்த பெண்ணும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி கொண்டே இருக்கிறார். ஆனால், அவர் சந்தேகத்தின் உச்சிக்கே சென்று விடுவதால் அப்பாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிடு என்று மகனும் சொல்லிவிடுகின்றனர்.
இந்த நேரத்தில் அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து பேசுகிறேன். சந்தேகத்தில் அந்த மனிதரின் செயல்கள் அனைத்து அறுவறுத்தக்கவையாக இருந்தது. அனைத்தையும் கேட்டுவிட்டு அந்த நபரை கவுன்சிலுக்கு வருமாறு கேட்டேன். ஆனால் அவர் வர முடியாது என்று சொல்லிவிட்டார். 3,4 மாதங்களாக குடும்பத்தினர் போராடி அவரை கவுன்சிலுக்கு அழைத்து வந்தார்கள். அவரிடம் கேட்ட போது, காதில் கேட்க முடியாத வார்த்தையெல்லாம் அவர் சொன்னார். அந்த அளவுக்கு தன் மனைவி மீது சந்தேகப்பட்டார். முதல் செக்ஷனில், தன் மீது எந்த தவறும் இல்லை, அதனால் மனைவி தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார்.
அனைத்தையும் கேட்டுவிட்டு, உங்கள் மீது தவறு இல்லையென்றால் மனைவி விவாகரத்து செய்ய வேண்டுமென்று ஏன் காத்திருக்கிறீர்கள் நீங்களே மனைவியை விவாகரத்து செய்துவிடுங்கள் என்றேன். தயக்கத்தோடு பேசினார். அவர் தயக்கத்தோடு சென்று இரண்டாவது செக்ஷனுக்கு வந்தார். மறுபடியும் பழைய மாதிரியே ஆரம்பித்தார். நான் மீண்டும் மனைவியை விவாகரத்து செய்துவிடுங்கள் என்று அதையே சொன்னேன். 5 செக்ஷன் வரை இப்படியே சென்றது. மகள், மகனிடம் பேசி பார்த்தேன், என் மீது தவறு இருக்கும் என தோன்றுகிறது, அதனால் கொஞ்சம் யோசிக்கிறேன் என்றார்.
6 மாதம் கழித்து 4 பேரும் குடும்பத்தோடு வந்தார்கள். முன்னாடி பேசியதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் சந்தோஷமாக வந்தார்கள். தன் மீது தான் தவறு இருக்கும் என்று உணர்ந்து மனைவி மற்றும் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். தான் குடும்பத்தோடு வாழ்வதற்கு நீங்கள் காரணம் என்று நன்றி சொல்லி கிளம்பினார். ஒருவர் தன் மீது குற்றம் சொன்னால், தன் மீது எந்த தவறும் இல்லை என தன்னை நிரூபிக்க பார்ப்போம். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்கள் அதை சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள். அது மாதிரி தான், மனைவியை சந்தேகப்படுத்தி பேசியதால் ஆரம்பத்தில் அவர் தன்னை நிரூபிக்க பார்த்திருக்கிறார். அதன் பின்னர், அதை கண்டுகொள்ளாமல் விட்டதால் தன் மீது தான் தவறு இருக்கிறது என்று அந்த நபர் உணர்ந்திருக்கிறார்.