Advertisment

மனைவி சொன்ன அந்த வார்த்தை; 6 மாதமாக பெட் ரூமுக்கு போகாத கணவர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 59

jay zen manangal vs manithargal 59

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், நேர் எதிர் மனநிலை கொண்ட தம்பதிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

Advertisment

தேவையான பொருட்கள் தவிர தேவையில்லாத பொருட்களை தனது வீட்டில் வைத்துக்கொள்ளாமல் மினிமலைஸ் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபர் கவுன்சிலிங்கிற்காக வந்தார். இவருடைய மனைவி, அளவுக்கு அதிகமாக செலவு செய்யக்கூடியவராக இருக்கிறார். கணவர், தான் வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும், அதன் பின்னால் அன்றைய தேதியை எழுதி வைத்து, 6 மாதம் கழித்து பார்க்கும்போது அது பயன்பட்டிருக்கிறது என்றால் அதை தானே வைத்துக்கொள்வார். ஒருவேளை அந்த பொருள் பயன்படவில்லையெனில், அதை யாரோ ஒருவருக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுத்துவிடுவார். வீட்டில் தேவையில்லாத பொருள் ஏன் இருக்கிறது என்று நினைக்கக்கூடியவர். இப்படிப்பட்ட குணாசியத்தை கொண்டவர் தான் அவர். இதற்கு எதிராக அவரது மனைவி இருக்கிறார்.

Advertisment

உதாரணமாக, ஏற்கெனவே வாட்ச் கட்டியிருக்கும் கணவருக்கு, ஒரு புதிய வாட்ச் கிப்ட்டாக வருகிறது. அப்படியென்றால், எந்த வாட்ச்சை கட்டப்போகிறோமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றொரு வாட்ச்சை டிஸ்போஸ் பண்ணிவிடுவோர். எதற்கு அநாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆனால், அவரது மனைவி, குறைந்தபட்சமாக 6 வாட்ச்சை வைத்திருக்கிறார். இதில் தான், இவர்களுக்குள் பிரச்சனை வருகிறது. அதே போல், 3 பெட் ரூம் கொண்ட இவரது வீட்டில், பயன்பாட்டுக்கு உள்ள ஒரு பெட்டை மட்டும் வைத்துக்கொள்வார். ஆனால், வீட்டுக்கு யாராவது வந்து தங்கினால் தேவைப்படும் என்பதற்காக 3 பெட் ரூமிலும் 3 பெட்டை வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இது ஒரு பக்கம் சரி என்பது போல் இருக்கும், இன்னொரு பக்கம் வறட்டு பிடிவாதமாக இருக்கும். வீடு என்பது பயன்பாடு இல்லாத பொருள் ஒன்று கூட இருக்கக்கூடாது என்று கணவர் நினைக்கக்கூடியவர். ஒரே மாதிரியான ஸ்டைலில் ட்ரஸ் போடக்கூடிய இவருக்கும், பலவகையான ஆடைகளை அணியும் மனைவிக்கும் பிரச்சனை வருகிறது. தாம்பத்திய உறவும் தேவையில்லை என்று தான் நீங்கள் கூறுவீர்கள் என்று மனைவி கேட்டதால், அந்த கேள்வியினால் மனமுடைந்த அந்த நபர் ஆறு மாதம் வரை பெட் ரூம்க்கு போகாமல் இருந்திருக்கிறார். இதனால், இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு பேரும் பிரியும் அளவுக்கு வந்துவிட்டார்கள். இதில் இரண்டு பேருக்குமே பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

இதனையடுத்து, அவரது மனைவியை வரச்சொன்னேன். வீட்டில் எது அநாவசியம், எது அவசியம் என லிஸ்ட் போடச் சொன்னேன். ஒரு அறையை மைண்டில் கொண்டுவந்து, இந்த அறையில் எதுவெல்லாம் அநாவசியம், எதுவெல்லாம் அவசியம் என்று எழுதச் சொன்னேன். அநாவசியமான பொருட்களை மனைவி எழுதும்போதும் கணவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே போல், அவசியமான பொருட்களை மட்டும் எழுதச் சொன்னேன். அந்த பொருட்களை எழுதும்போதெல்லாம், அந்த பொருட்கள் தேவையான என இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இன்றைக்கு தேவையில்லை என்றாலும், நாளைக்கு தேவைப்படும். அதற்காக இப்பவே தூக்கி எரிந்துவிடுவதா? என்று சொன்னேன். அவசியமான பொருட்களை மனைவி எழுதி முடிக்கையில், இவருக்கு முரண் வருகிறது. இவரோட பிரச்சனை என்னவென்றால், அந்த பொருட்கள் இன்றைக்கு தேவையில்லை என்ற மனநிலையில் இருப்பதுதான். மனைவிக்கு, அந்த பொருட்கள் பின்காலத்தில் அது தேவைப்படலாம் என்று நினைத்துக் கூறுகிறார்.

இந்த வீட்டில் மூன்று விதமான கேட்டகரியில் பொருட்கள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம். அது என்னவென்றால், இன்றைய அவசியம், கொஞ்ச காலத்தில் தேவைப்படும் அவசியமான பொருட்கள், அவசியமில்லாத் பொருட்கள் என்று மூன்று வகையாக பிரிக்கிறோம். கொஞ்ச காலத்தில் தேவைப்படும் அவசியமான பொருட்களை எழுதும் போது அந்த நபர் தடுமாறியும், அவசியமில்லாத பொருட்களை எழுதும்போது மனைவியும் தடுமாறியும் இருக்கிறார்கள். ஆசைப்படும் பொருளை வாங்குவதற்கு சம்பாரிக்கும் நபர் ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நாம் தான் சம்பாரிக்க வேண்டும் என்று அவரது மனைவிக்கு சொல்லி புரியவைத்தேன். மூன்று வகையான கேட்டகரியில், பொருட்களை பிரிக்கும்போது அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக புரிந்துகொள்கிறார்கள். இப்படி லிஸ்ட் போட்டு பார்க்கையில், அந்த வீட்டில் இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவையில்லாத பொருளாக இருக்கிறது. மற்றப்படி எல்லாப் பொருட்களும் தேவையானதாகவே இருக்கிறது. இதற்காகவா, பெட்ரூம்க்கு போகாமல் இருந்தீர்கள் என்று கணவரிடம் கேட்டு, அளவுக்கு மீறி ஆசைப்பட்டு தேவையில்லாத பொருட்களை வாங்கத் தேவையில்லைஎன்று மனைவியிடமும் சொல்லிபுரியவைத்தேன். இப்படி கேட்கும் போது தான் அவர்களுக்கு புரிந்தது. தேவை, தேவையில்லை என்ற சமரசத்தை நமக்குள்ளே கொண்டு வந்துவிட்டால், அந்த பிரச்சனை அங்கேயே முடிந்துவிடும். ஒருவேளை, கொண்டு வராவிட்டால் கடைசியில் அது தாம்பத்திய உறவில் தான் பிரச்சனையாக வரும். எதற்காக எதை இழந்தோம் என்று கேள்வி கேட்டப்படி தான் இந்த செக்சனை முடித்தேன்.

Counseling
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe