jay zen manangal vs manithargal 35

திருமணத்திற்குப் பின்பு பழைய காதலைத்தொடர்ந்த காதலர்களின் குடும்பத்திற்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

தம்பி பிரச்சனைக்காக அண்ணன் பேச வந்திருந்தார். தம்பி, நல்ல மனிதர் திருமணமாகிவிட்டது நல்ல மனைவி ஒரு குழந்தை எல்லாரும் இருக்கிறார்கள் என்று பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தார். தம்பிக்கு கல்லூரியில் ஒரு காதல் இருந்தது. ஆனால், வீட்டில் ஒத்துக் கொள்ளாமல் எதிர்த்தார்கள். பல முறை முயன்று பார்த்தும் கடைசியில் தம்பி ஓகே என்று பெற்றோர் பார்த்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். காதல் உறவை அதோடு முடித்து விட்டார்.

Advertisment

இப்போது திருமணம் ஆகி நல்ல குழந்தைகள் என்று நன்றாக இருந்தார். அண்ணன் வந்ததற்கு காரணம் என்னவென்றால் தம்பியும் அவரது மனைவியும் பிரிகிறார்கள். அதன் காரணத்தை அண்ணன் கண்டுபிடித்து சொன்னார். காரணம் என்னவென்றால், தம்பியின் பழைய காதலி உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் பிரச்சனை. ஆனால், அந்த காதலிக்கும் திருமணம் ஆகிவிட்டது. காதலை விட முடியாமல் இருவரும் தொடர்ந்து பழகி வருகின்றனர். அந்த பக்கம் காதலியின் கணவருக்கும் விஷயம் தெரிந்து விடுகிறது, இங்கே தம்பியின் மனைவிக்கும் விஷயம் தெரிந்து விடுகிறது. எனவே, இரு பக்கமும் அவரவர் துணையுடன் விவாகரத்துக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

நான்கு பேரை அவரவர் துணையுடனும், பின்னர் இந்தக் காதலர்கள் ஒரு கவுன்சிலிங் என மூன்று செஷன்கள் கவுன்சிலிங்கில் நடத்தப்பட்டது. தம்பியின் மனைவி சுத்தமாக இனிமேல் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்து விடுகிறோம் என்ற எண்ணத்துடன் ரொம்ப பலமாக இருந்தார். ஆனால், காதலியின் கணவர் கொஞ்சம் பார்க்கலாம் என்பது போல இருந்தார். ஆனால், காதலர்களிடம் பேசும்போது தான் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. இருவரிடமும் இந்த மனமுறிவு ஏற்பட்டவுடன் நீங்கள் இருவரும் திருமணம் செய்ய தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு விருப்பமில்லை என்றனர். அந்தக் காதலியின் கணவரிடம் பேசும் போது இருவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் நாளை முதல்இருந்து நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டார். அந்தக் காதலி தனது தவறை உணர்ந்து அவரது காலில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்று விட்டார்.

Advertisment

இப்போது தம்பி மட்டுமே இருக்கிறார். அவர் மனைவி போய்விட்டார். இவர் போய் தன் மனைவியிடம் போய் மன்னிப்பு கேட்டும் மனைவி ஏற்க தயாராக இல்லை என்று போய்விட்டார். நிறைய பேர் விவாகரத்து வழக்கு போட்டால் எல்லாம் முடித்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் விவாகரத்து வாங்க கோர்ட்டுக்கு அடிக்கடி போய் வருவதே மிகப்பெரிய தண்டனை தான். மியூச்சுவல் கன்சென்ட் போட்டு விவாகரத்து வாங்க கோர்ட் போனாலும் மனைவி ஒத்துக் கொள்ள, கணவர் ஒவ்வொரு முறையும் விவாகத்து வழங்க தயாராக இல்லை என்று தான் போராடுகிறார். அதனாலேயே நெடு நாள் நீடிக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போகும்போது மற்றவர்கள் இதை விட மோசமான காரணங்களினால் விவாகரத்து வாங்க வந்திருக்கும் கதைகளை, இந்த பெண் கேட்க கேட்க தன் கணவனுக்கு விவாகரத்து செய்வதை கொஞ்சம் மறுபரிசீலனை செய்கிறார். அடுத்ததாக அவர் என்னையும் தொடர்பு கொண்டார். தன் கணவனை மன்னித்து கொள்ள தயாராக இருப்பதாக சொன்னார். தவறு என்று காலம் முழுவதும் பிரிந்து போய்விடலாம் தான், அதுவும் ஒரு வகை. இன்னொரு பக்கம் தவறு நடந்து விட்டது, மன்னித்து மறப்பது என்பது ஒரு வகை. ஒரு மாதம் டைம் எடுங்கள். மன்னித்துவிட்டு மீண்டும் தான் மன்னித்ததே பெரியது என்று பேசக்கூடாது. முழுமையாக அவரை மன்னித்து விட்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று கவுன்சிலிங்கில் பேசி முடிவுக்கு வரப்பட்டது. கோர்ட்டு பிராசஸை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு யோசித்து கடைசியாக கணவனை மனைவி மன்னித்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.