Advertisment

சேமிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஈகோ கணவன் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 10

jay-zen-manangal-vs-manithargal-10

வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கவுன்சிலிங் கதையை ‘மனங்களும் மனிதர்களும்’தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளும் கணவனும் மனைவியும் மிக அரிது. வித்தியாசமான ஒரு கணவன் மனைவியை நான் பார்த்தேன். முதலில் கணவர் என்னிடம் வந்தார். மனைவியோடு தனக்கு தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், விவாகரத்து பெற்றுவிட முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். பல்வேறு அவமானங்களை சந்தித்து பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவர் அவர். அதனால் பணம் குறித்த சிந்தனையே அவரிடம் அதிகமாக இருந்தது. பணம் குறித்து அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக குடும்பத்துக்கே தெரியாமல் அவர் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தார்.

Advertisment

எனக்கு இந்த விஷயங்கள் நெருடலாக இருந்தது. அவருடைய மனைவியையும் பார்க்க வேண்டும் என்று நான் கூறினேன். தன்னுடைய கணவருக்கு ஈகோ அதிகம் இருக்கிறது என்றும், அனைத்திலும் தன்னையே முன்னிறுத்திக் கொள்வார் என்றும் அவருடைய மனைவி கூறினார். குழந்தைகளுக்காகவே தான் உயிரோடு இருப்பதாகவும் அவர் கூறினார். கணவர் தான் சரியில்லை என்பது இதன் மூலம் தெரிந்தது. தனக்கு மனரீதியாக ஒரு உறவு தேவைப்பட்டதால் தனக்கு இன்னொரு தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் கூறினார். இருவருக்குமே இரண்டு வெவ்வேறு வாழ்க்கைகள் இருந்திருக்கின்றன.

எதார்த்தமான வாழ்க்கைக்குத் திரும்பினால், வெளிப்படையாகப் பேசினால் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்று கணவரிடம் கூறினேன். அதையே மனைவியிடமும் கூறினேன். இருவரும் அதற்கு சம்மதித்தனர். மூன்று பேரும் அமர்ந்து பேசினோம். இருவரும் தங்களுடைய தரப்பை விளக்கினர். அவர்களுக்குள் ஒரு புரிதல் வந்தது. மனங்கள் இணைந்தன. தவறை உணரும்போது பிரச்சனைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அவர்கள் இணைந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. கணவன் மனைவிக்குள் உண்மையாகவே பிரச்சனை இருக்கிறது, பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொள்வது தான் சரி. ஆனால் தங்களிடம் உள்ள பிரச்சனைகளை மறைத்து, அதனால் விவாகரத்து பெற முயற்சிப்பது தவறு.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe