Skip to main content

'வெட்டுபவனிடம் தான் ஆடு தன் நம்பிக்கையை வைக்கும்'... லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #4

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

உங்கள் நாக்கிற்கு வேர்கிறது பெண்ணின் அங்கங்கள் பற்றி பேசும் போது. உள்ளங்கையில் நம்மைச் சுமந்த அன்னையின் சூட்டில் உணராத இன்பத்தையா சின்னஞ்சிறு பெண்ணின் வளராத அங்கங்களில் உணரப் போகிறீர்கள். வெறும் யோனியின் உருவத்தை மட்டுமே கற்பனை செய்து கொள்ளும் கண்களுக்கு எங்கே தெரிவது வெறும் நரம்புகள் சுருண்ட ரத்தப்பிண்டத்தின் கலவைதான். அதைத் தாண்டியும் உங்கள் வக்கிரங்களுக்கு அங்கே இடமளிக்க மட்டுமே பெண் பிள்ளைகள் பிறக்கவில்லையென்பது.

அந்த மருத்துவமனையின் வராண்டாவில் கால் வைக்கும் போது இதயம் எம்பி வாய் வழியே வெளியே வந்துவிடுமோ என்று பயம் கொண்டது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடிக்கொண்டு இருக்கும் பிஞ்சுகளின் கூடாரம் அது. கையில் பொம்மையுடன் எச்சில் ஒழுகிய வாயோடு இனிப்பை மென்றுகொண்டு எமன் எதிரிருக்கையில் அமர்ந்திருக்கிறான் என்று உணராமல் இடைக்கால சந்தோஷத்தை குழந்தைகளால் மட்டுமே அனுபவிக்க முடியும். தீராத நோயின் பிடிக்குள் சிக்கிக் கொண்ட பிஞ்சுகளின் போராடும் சுவடுகளை இந்த மருத்துவமனைச் சுவர்கள் நித்தமும் பேசிக்கொண்டு இருக்கும். காண்பதற்கும் கேட்பதற்கும் தான் நெஞ்சுரம் வேண்டும்.

 

cgh



மொட்டைத்தலையுடன், செவ்வாழை நிறம் கருத்திட்ட முகமும் ஒட்டிய கன்னமும் இடுங்கிய விழிகளுமாய் புருவமயிர்களை உதிர்தல் என்று அந்த கடிவாளம் கட்டாத சாத்தானின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அந்த நாட்களை நினைவு கூறும் போது இன்றைய தினம் எனக்கு கருப்பு தினமே!

உடலின் மூலங்களை கொஞ்ச கொஞ்சமாக கொல்லும் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தை தன் இன்னல்கள் எல்லாம் நீங்கிவிட்டதென்று விண்ணுலகின் நட்சத்திரங்களில் ஒன்றாய் பறந்தாள். அந்த பிஞ்சின் ரணத்திற்கு ஒரு தீர்வாய் இந்த மரணம் இருந்தாலும் நிர்கதியான அவளின் பெற்றோர்களின் நிலையோ பரிதாபம். மூல காரணங்கள் எல்லாம் ஆராயப்பட்ட அந்த முகத்தின் வெள்ளோட்டம் பார்க்கும் தைரியம் எனக்கில்லை மாறாக தவிப்பும் துடிப்பும் இருந்தது.

பெற்றோர்கள் இருவருமே பணிபுரியும் பல இடங்களில் பிள்ளைகள் எல்லாமே எடுப்பார் கைபிள்ளைகள் தான், அதுவே புவனாவின் நிலையும். நம்மைச் சுற்றியுள்ள எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்பதை மிகத் தாமதமாகவே நாம் உணர்கிறோம். அதற்குள் நிலைமை கை மீறிப் போகிறது, அடுக்குமாடிக் குடியிருப்புகள் செங்கல் சிமெண்ட் துகள்கள் மறைக்க பூசும் பூச்சைப் போல அதில் வசிக்கும் மனிதர்களும் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொள்கிறார்கள். சக மனிதர்களின் அறிமுகம் தவிர்த்து தொடுதிரையின் முகம் ரசிப்பதே இன்றைய நாகரீகம். அந்த காலனியில் தான் புவனாவின் குடும்பம் வசித்தது.

நான்கைந்து வீடுகளும் மதிற்சுவரும் செடிகளும் என ரம்மியம் மனதை அள்ளினாலும், எதிர்ப்பட்டால் கூட புன்னகைக்க மறுக்கும் இயந்திர மனிதர்கள். ஒய்வுக்கு ஒதுக்கப்பட்ட தினங்கள் கூட ஊதியத்திற்காக பணத்தை தேடி ஓடும் நடுத்தர வர்க்கத்தின் மனிதர்கள். ஆறரை மணிக்கு பள்ளியும், வகுப்பும் முடிந்து வீட்டுக்கு வரும் புவனாவின் இருப்பிடம் வாசல் படிக்கெட்டுகள்தான். சில நேரங்களில் நேரங்கழித்து வரும் பெற்றோருக்காய் காத்திருந்து கையிலிருக்கும் திண்பண்டங்களை சுவைத்து விட்டு படிக்கட்டியே தாய்மடியாக நினைத்து உறங்குவதும் உண்டு.

 

fg



போற வர்றவங்கயெல்லாம் ஒருமாதிரி பாக்குறாங்கம்மா எனக்கு சாவி கொடு, எதுக்குடி சாவி நான்தான் ஏழு ஏழரைக்குள்ள வந்திடறேனே உன்கிட்டே சாவியைக் கொடுத்தா திறந்துபோட்டுட்டு எங்கேயாவது போயிடுவே வீட்டுக்குள்ளே சாமான் எல்லாம் கிடக்கு. உயிரில்லாத பொருட்களுக்கு கொடுத்த பாதுகாப்பு உயிருள்ள பிள்ளைக்கு அவளின் விலைமதிப்பில்லாத மனதிற்கும் உடலிற்கும் கொடுக்கத் தவறிய இடத்தில் முளைத்தான் அந்த மிலிட்டரி தாத்தா.

வெட்டுபவனிடம் தான் ஆடு தன் நம்பிக்கையை வைக்கும். காதல் மட்டுமல்ல பார்வைகளில் மலருவதில்லை? வஞ்சகமும் கூட அந்த பெரிய மனிதரின் பார்வை ஆளரவமற்ற இடத்தில் அமர்ந்து இருந்த சிசுவின் மேல் அவளின் அங்கங்களின் மேல் மேயத் தொடங்கின நாளடைவில் சிரிப்பு பின் மெல்ல பேச்சு என்று பிள்ளையை நெருங்கினான் அந்த கயவன். 60 வயதிற்கு மேல் இருக்கும் மனிதன் சின்னப்பெண்ணிடம் பேசுவதை அங்கே யாரும் தவறாக நினைக்கவில்லை அப்படி நினைத்துவிட்டால் ஒருவேளை அந்தப் பிள்ளையைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுடையது ஆகிவிடுமே?! யார் வீட்டு பிள்ளையோதானே என்னவானாலும் ஒரு உச்சு கொட்டுதலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற வாசகத்தோடு இலகுவாக நகர்ந்து கொள்ளலாமே தவிர, வருமுன் தடுக்கப்போவதில்லை இங்கே அடுத்தவர்களை கவனிக்க அவர் பிரபலமாக இருக்கவேண்டும்.

சோர்வோடு வாசலில் எதிர்கொள்ளும் தேடிய தாயின் கண்களில் சில நேரங்களில் அவள் கைகளில் முளைத்திருக்கும் திண்பண்டங்கள் தென்படும். இதென்ன பிஸ்கெட் ? யார் கொடுத்தா ?

பக்கத்து வீட்டு மிலிட்டரி தாத்தாம்மா. பாவம் அவரு தனியாத்தான் இருக்கார் அவருக்கு யாரும் இல்லையாம் நான் அவர்கிட்ட இருக்கிற போனில படம் எல்லாம் பார்க்குறேனே. மகளின் ஆர்வத்தில் அன்னையுமே அந்த கயவனை காண்கிறாள். குடும்பத்திற்காக உழைக்க போவனை மனைவியின் மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பமே ஒத்திவைத்தது என்று நீலிக் கண்ணீர் வடித்தான், உங்கள் மகள் என் பேத்தியின் சாயல் என்று அணைத்து முத்தமிட்டான் வயதின் மூப்பு சந்தேகங்களை தள்ளிவைத்தது. ஆதரவிற்கு ஒரு உறவு என்று ஒரே குடும்பமாய், அலுத்து களைத்து வீட்டிற்கு வந்து பிள்ளைக்கென்று ஒரு குட்டி சமையல் செய்யும் வேலை இல்லாமல் போகவே கிடைத்த நிம்மதிக்கு விலை தன் சிசுவின் உடல் பாகங்கள் என்று அந்தத் தாய் உணரவில்லை. பாப்பா தூங்கிட்டா இங்கேயே இருக்கட்டும் என்று இரவுகள் கூட அங்கேயே நீண்ட கதவைத் தள்ளிக்கொண்டு இவள் பார்க்க புவனா நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருப்பதைப் போல தோன்றும் போதையின் மயக்கத்தில் மகள் தன்னையிழப்பதை அறியாமல் காமத்தின் மயக்கத்தில் இங்கேயும் ஒரு சங்கமம் அரங்கேற்றப்படும். எப்போதும் அவளின் விருப்பம் தாத்தாவின் வீடாகவே இருந்தது. போகாதே என்று தடுத்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள்.

 

fcg



ஒரு வருடம் கடந்த நிலையில் சுறுசுறுப்பான குழந்தை நத்தையாய் கூட்டிற்குள் சுருங்கினாள். தாத்தாவின் நண்பரும் இப்போது அந்த வீட்டில் ஆற்றில் போகும் நீரைப் போல அந்த இளங்குருதியைக் குடிக்க மற்றொரு ஓநாய். புவனா இரவு நேரங்களில் அலறி அலறி அழ ஆரம்பித்தாள். பெற்றவர்களுக்கு இப்போது மருத்துவமனை என்று போனால் கணிசமாக செலவாகும் அதிலும் வேலை பார்க்கும் இடங்களில் விடுமுறை போடவேண்டுமே என்ற தவிப்பில் அலுப்பு எதையோ பார்த்து பயந்திருப்பாள் என்றே சப்பைக் கட்டுகளை மனதிற்குள் சொல்லிக்கொண்டு நாளைக் கடத்தினர் பெரும் இடியைத் தன்மேல் இறக்கப்போகிறார்கள் என்று உணராத புவனாவின் பெற்றோர் அளவுக்கதிமான காய்ச்சலில் நினைவிழந்த மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். மற்ற அத்தனையும் விட பெற்றவளுக்கு இப்போது பிள்ளை முக்கியமாய்ப் பட்டது. பரிசோதித்த மருத்துவர் புழுவைப் பார்ப்பதைப் போல இவர்களைப் பார்த்தார். இது உங்க சொந்தக் குழந்தைதானா?

அவர்கள் தலையசைக்க, உங்க பொண்ணின் ரத்த அளவில் போதை மருந்தின் வீரியம் அதிகமா இருக்கு, டெஸ்ட் பண்ணதில் அந்த குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கும் மேல இந்த போதை கணிசமான அளவில் கொடுக்கப்பட்டு இருக்கு, அந்தக் குழந்தையின் உடம்பெல்லாம் முக்கியமா மறைவான பிரதேசங்களில் பற்கள் கொண்டு கடித்த தடம் எல்லாம் இருக்கு நீங்க பெத்தவங்கன்னா இதெல்லாம் உங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை ? மற்ற நேரங்களில் இல்லாமல் போனாலும் அவளைக் குளிக்க வைக்கும் போது கூட, இல்லை டாக்டர் அவ படிக்கிற பள்ளியில் தன்னோட வேலையை தானே செய்யணுமின்னு சொல்லித் தருவாங்களாம் அதனால குளிப்பது, யூனிபார்ம் போடுவது, என தன் வேலைகளை அவளே ஓரளவு செய்துக்குவா அதனால நீங்க என்னன்மோ சொல்றீங்களே கேட்கும் போதே அந்த தாயின் குரல் சற்றே உடைந்தது, அம்மா பாத்ரூம் போற இடம் எரியுது வலிக்குதும்மா அன்னைக்கு ரத்தம் கூட வந்தது தாத்தாகிட்டே சொன்னேன் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டாங்க. நீயும் போட்டு விடறீயா என்று பிள்ளை சொன்னபோது கூட அலட்சியமாய் தேங்காய் எண்ணெய் போடு என்று சொன்னது நினைவிற்கு வந்தது தலையில் அடித்துக்கொண்டாள்.

கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் படித்தவங்க தானே நீங்க அந்த குழந்தைக்கு இப்போ எச்.ஐ.வி பாதிப்பு இருக்கு முற்றிய நிலையில் இருக்கு இனிமே என்கையிலே ஒண்ணுமில்லைம்மா எல்லாம் கடவுள் கையிலேதான் டாக்டர் கையை விரித்து விட நான்கு நாட்களாக வெளியூர் போயிருக்கும் அந்த தாத்தாவின் வீட்டை உடைத்தனர். கோபத்தில் அவன் வீட்டில் சிரஞ்சிகளும் மருந்து பாட்டில்களும் இருவரும் அங்கேயே மடிந்து விழுந்து அழுதனர். சமுதாயத்தின் மூத்த தலைமுறை வெளியே தீர்த்துக் கொள்ள முடியாத ஆசைகளை அந்தக் குழந்தையிடம் தீர்த்துக் கொண்டது. போர்வை போத்திய சதைப் பிண்டங்களாகத்தான் சமூகத்திற்கு தெரிகிறத எங்கு நோக்கிலும் விரல்களின் வக்கிரங்கள் நீண்டதெல்லாம் நிலையில்லாத உடலைத்தேடி. புவனா என்ற அந்த புத்தகம் தன் எட்டாவது அத்தியாத்திலேயே முற்று பெற்றுவிட்டது அதுவும் கொடூரமாக.

 

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.