Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை:  ‘கார்டு மேல இருக்கற நம்பரை சொல்லுங்கோ’ பகுதி – 03

Published on 20/02/2023 | Edited on 21/02/2023

 

digital-cheating-part-3

 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சங்கர் குமார் போஸ். நகரத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். பெரியதாக பள்ளிக்கு போனதில்லை. ஓரளவு எழுத படிக்க தெரியும். வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதில் பணமும் போட்டு வைத்திருந்தார். ஒருநாள் அவரது செல்போன் எண்ணுக்கு புதியதாக ஒரு எண்ணில் இருந்து ஃபோன் கால் வந்தது. எதிர்முனையில் அந்த மாநில மொழியான பெங்காலியில் ஒருவர் பேசியுள்ளார்.

 

ஃபோன் குரல்: “எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பேசுறோம்” 
போஸ்: “சொல்லுங்க சார்”
ஃபோன் குரல்: “உங்க வங்கி ஏ.டி.எம் கார்டு லாக்காகியிருக்கு”
போஸ்: “ஏன் சார்?”
ஃபோன் குரல்: “நீங்க உங்க ஆதார் நம்பரை லிங்க் செய்யல, அதான் லாக் ஆகியிருக்கு”
போஸ்: “நான் என்ன செய்யட்டும் சார்”
ஃபோன் குரல்: “நீங்க ஃபேங்க் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் எடுத்து வந்து எழுதி தரனும். இல்லன்னா சொல்லுங்க நாங்க கேட்கற டீட்டய்லு சொல்லுங்கோ, இங்கிருந்தே லாக் எடுத்து விடுது”
போஸ்: “என்ன டீட்டய்ல்ஸ் சார்”
ஃபோன் குரல்: “உங்க ஏ.டி.எம். கார்டு மேல இருக்கற நம்பரை சொல்லுங்க” 
அவரும் வங்கியில் இருந்து அதிகாரி பேசுகிறேன் என்றதும் பயம் கலந்த மரியாதையுடன் தன்னிடமிருந்த ஏடிஎம் கார்டு எடுத்து அதன் மேலிருந்த 16 டிஜிட் எண்ணை சொல்லத் துவங்கினார்.

 

ஃபோன் குரல்: “நீங்க சொன்ன நம்பரை போட்டுட்டன். கார்டு நம்பருக்கு கீழே மாசம், வருஷம் இருக்கும், அதைச் சொல்லுங்க”
போஸ்: “……………………”
ஃபோன் குரல்: “இப்போ உங்க மொபைல் ஃபோன்க்கு ஒரு ஓடிபி வரும் அதைச் சொல்லுங்க”
போஸ்: “நம்பர் வந்திருக்கு சார்”
ஃபோன் குரல்: “அந்த நம்பரைத்தான் சொல்லுங்க”
நம்பர் சொன்னதும்.. 
ஃபோன் குரல்: “கொஞ்ச நேரத்தில் உங்க ஏடிஎம் கார்டு அன்லாக்காகிடும்” என்பதோடு ஃபோன் உரையாடல் முடிவடைந்தது.

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; இரண்டு நிமிட ஃபோன் காலில் நம்மை ஏமாற்றுவது யார்?  பகுதி – 1

 

செல்ஃபோன் உரையாடல் முடிந்த அடுத்த 20 நொடிகளில் சங்கர் குமார் போஸ் வங்கி கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. எதுவும் புரியாமல் பேங்க் மேனேஜர் எனச் சொன்னாரே, அவர்கிட்டயே கேட்போம் என அந்த மொபைல் எண்ணுக்கு திரும்ப அழைத்துள்ளார். கால்ஸ் எடுக்கவில்லை. வங்கிக்கு நேரடியாக ஓட்டமும், நடையுமாகச் சென்று என் அக்கவுண்ட்ல பணம் எடுத்திருக்காங்க என்றுள்ளார். 

 

கௌண்டரில் அமர்ந்திருந்தவர், “உங்க பேங்க் பாஸ் புக் எங்க? அது இருந்தால்தான் பார்க்க முடியும்” என்கிறார்.
சார், “எனக்கு என் அக்கவுண்ட் நம்பர் தெரியும்”
“அந்த அக்கவுண்ட் உன்னதுன்னு நான் எப்படி நம்பறது? பேங்க் பாஸ்புக் எடுத்துவா, போ” என விரட்டியுள்ளார் வங்கி அதிகாரி. வீட்டுக்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவந்து காட்டியதும் காபி குடித்துக்கொண்டே செக் செய்தவர்கள், “உங்க கார்டு வழியா ஆன்லைன்ல பொருள் வாங்கியிருக்கிங்க.” 
“எனக்கு ஆன்லைன்னா என்னன்னு தெரியாது” சார். 
“என்னய்யா கதை சொல்றியா?, உன் ஏடிஎம் கார்டு மூலமாதான் பொருள் வாங்கியிருக்க.”
“நான் வாங்கல சார்.” 
“நீ வாங்கலன்னா என்ன, உன் பையன், பொண்ணு யார்னா வாங்கியிருப்பாங்க.”
“இதோ பாருங்க சார். கார்டு எங்கிட்ட இருக்கு”
வங்கி அதிகாரி குழப்பமாகி, “நல்லா யோசிச்சி பாருங்க”
“கார்டு எப்பவும் எங்கிட்டதான் சார் இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கார்டு லாக்காகியிருக்கு, அதை எடுத்துவிடறேன்னு பேங்க்லயிருந்துதான் ஃபோன் செய்து ஏடிஎம் கார்டு நம்பர் கேட்டாங்க. தந்தேன்”  
“வங்கியில இருந்து யாரும் அப்படி போன் செய்து நம்பர் கேட்கமாட்டாங்க.” 
“நான் என்ன பொய் சொல்றன்னா, இதோ பாருங்க எனக்கு போன் வந்த நம்பர்.”
“உங்களுக்கு வந்த நம்பருக்கு திரும்ப ஃகால் பண்ணுங்க.”
சங்கர் குமார் போஸ் மீண்டும் ஃகால் செய்தபோது, ‘நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். நீங்கள் சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளவும்’ என ரெக்கார்டட் வாய்ஸ் பேசியது. 
“நீ எவன்கிட்டயோ ஏமாந்திருக்க.”
“சார் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் சார், ஏதாவது பண்ணுங்க சார்.”
“நாங்க ஒன்னும் செய்ய முடியாது, போலிஸ்க்கு போ.”

 

கொல்கத்தா மாநகரத்திலுள்ள ஒரு போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார் போஸ். “நீ சொல்றது ஆன்லைன் மோசடி, சைபர் க்ரைம் தான் விசாரிக்கனும். நீ அங்கப்போய் புகார் தா” என்றனர். அவர் அங்கிருந்து சைபர் க்ரைம் காவல்நிலையத்துக்கு சென்றார். இங்க புகார் வாங்கமாட்டோம். நீங்க அந்த ஸ்டேஷன்லயே புகார் தாங்க. அவங்கள எங்களுக்கு அனுப்பச் சொல்லுங்க என்று சைபர் க்ரைமில் சொல்லியுள்ளனர். நீண்ட அலைச்சலுக்கு பிறகு போலிஸ் அதிகாரிகள் புகார் வாங்கினர். புகாரை வாங்கியவர்கள் ஃசைபர் செல்லுக்கு அனுப்பினர். அவர்கள் புகாரில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்புகொண்டார்கள். அது சுவிட்ச் ஆப் என்றே பதில் சொன்னது. அந்த நம்பரை சர்விஸ் வழங்கும் கம்பெனியிடம், இந்த நம்பர் யார் பெயரில் உள்ளது, அவரின் முகவரி வேண்டும் எனக் கேட்டு சைபர்செல் போலிஸார் மெயில் செய்து பதிலுக்காகக் காத்திருந்தனர்.

 

வடஇந்தியாவில் படிக்காதவங்க நிறைய. அவங்க ஏமாறுவாங்க. படிச்சவங்க ஏமாறமாட்டாங்க எனச் சொல்பவர்களா நீங்கள். வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போன்றதுதான் அது. அந்த புகார் வந்த அடுத்த நாட்களில் மேற்குவங்கத்தில் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் வந்து புகார் தந்தனர். 

 

மேற்குவங்கத்திலுள்ள ரவீந்திரபாரதி பல்கலைக்கழகம் புகழ்பெற்றது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் பவுலா சென்குப்தா, ஷேக்ஸ்பியர் சாரணி. இருவரும் கடந்த 2022 ஜனவரி மாதம் பெஹாலா காவல்நிலையத்துக்கு அரக்க பறக்க வந்து நின்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், எங்கள் ஏடிஎம் கார்டு லாக்காகி உள்ளது, அதை அன்லாக் செய்கிறோம், உங்க பேங்க் டீட்டய்ல்ஸ் தாங்க எனச்சொல்லி பேசினார்கள். எங்கள் இருவர் வங்கி கணக்கில் இருந்து 8.5 லட்சம் எடுத்துவிட்டார்கள் என கண்ணீரோடு புகார் கூறினர். இப்படி தினமும் நிறைய புகார் வருது. நீங்க புகார் எழுதி தந்துட்டு போங்க என்றனர் காவல்துறையினர். 

 

புகார் தந்துள்ள விவகாரம் பெஹாலா காவல்நிலையத்துக்கு உட்பட்ட டிசி ஸ்வாதி பங்கலியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே சைபர்செல் டிசி பிதிஷா கலிதா தலைமையில் தனிப்படை அமைத்தார். பேராசிரியர்களிடம் அவர்கள் பேசிய மொபைல் எண் வாங்கி செல்போன் கம்பெனியிடம் கால் டீட்டய்ல்ஸ், அட்ரஸ், மொபைல் ஐ.எம்.இ.ஐ. நம்பர் கேட்டு மெயில் அனுப்பினர். இப்படி கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் 2500 பேருக்கும் மேலானவர்களிடம் ‘கார்டு மேலே இருக்கற நம்பரை சொல்லு’ எனப்பேசி 8 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். இது பதிவான வழக்குகள் மட்டுமே. பதிவாகாத வழக்குகள், காவல்நிலையத்துக்கே வராத வழக்குகள் எவ்வளவு இருக்கும் என நினைத்தால் மலைப்பாக இருக்கிறதா? அப்படியென்றால் இந்தியா முழுக்க எவ்வளவு வழக்குகள் இப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். 

 

இப்படி ஏமாற்றும் முறையை சைபர்செல் போலிஸார், ஃபோன் பிஷ்சிங் என்கின்றனர். அதாவது ஃபோன் வழியாக உங்களுக்கு தூண்டில் போட்டு மோசடி செய்வது. இந்த வகை மோசடி இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பேசுகிறோம் எனச்சொல்லி பேசுவது, பின்னர் அது ஆர்.பி.ஐ.யில் (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா) இருந்து பேசுவதாக பேசுகின்றனர். தற்போது ஃபோன் பிஷ்சிங் என்பது குறைந்துவிட்டது. ஆனால், அது பல குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் பல குட்டிகளை ஈன்றுள்ளது. 

 

எந்தெந்த வகையில் மோசடி நடக்கிறது எனக் கேட்பவர்களுக்கு தொடர்ச்சியாக ஆன்லைனிலேயே துணி ஆர்டர் செய்து, ஆன்லைனிலேயே சாப்பாடு வரவைத்து சாப்பிடுவது, ஆன்லைனிலேயே டூர் செல்ல ரயில், விமானம், பஸ் டிக்கட் புக் செய்வது, உறவினர் திருமணத்துக்கு ஆன்லைன் வழியாக கிப்ட் கார்டு ப்ரசன்ட் செய்வது என ஆன்லைனிலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு மோசடிகளின் வகைகள் தெரிந்திருக்கும். அடுத்தடுத்த பாகங்களில் வருவது எதுவும் தெரியாத அப்பாவிகளுக்கே. 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்…

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: அவ்வளவு ரிஸ்க்லாம் இல்ல பாஸ்.. இது ரொம்ப சிம்பிள் பகுதி - 2 
 

 

 

Next Story

“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
CM MK Stalin tweets about Modi new digital India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி!. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?. சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?. இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘டிஜிட்டல் மயமான இந்தியா...’ - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

pirmeminister modi says digitization changed in india at g 20 summit  

 

ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் மாநாடு கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

அப்போது அவர் பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரசிய - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் வாரணாசி மாநாட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மக்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நமது செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த மாவட்டங்கள் இப்போது நமது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளன.

 

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து தங்களது நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தியாவில் டிஜிட்டல் மயத்தால் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களது அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஆறுகள், மரங்கள், மலைகள்,  இயற்கை என அனைத்திற்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறோம். கடந்த ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து லைஃப் இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் பருவ நிலை மாற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரமளித்தல் அவசியம்.

 

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் நின்று விடவில்லை. அதையும் தாண்டி பெண்கள் தலைமை தாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முகவர்களாக பெண்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும். மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் புனித தலமான வாரணாசி நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் வாரணாசியின் எழுச்சியை தங்களால் உணர முடியும். இது என்னுடைய பாராளுமன்றத் தொகுதி என்பதால் உரிமையுடன் இதைக் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை காணுங்கள். சாரநாத்தையும் காணுங்கள். இவை உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்" என உரையாற்றினார்.