detective-malathis-investigation-86

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.

Advertisment

ஒரு பெண் என் அலுவலகத்திற்கு வந்து, தான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் படிக்கவில்லை இருந்தாலும் அவரை திருமணம் செய்துகொண்டு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன் என்றார். பின்பு தான் சாம்பாதிக்கும் வருமானத்தில் தன் கணவர் கடன் வாங்கி சுயதொழில் செய்ய உதவியதாகவும் கூறிளாள். மேலும் இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதையும் அந்த குழந்தையுடன் கணவர், அவரது இரண்டாவது மனைவியுடன் இருக்கிறார். அந்த இரண்டாவது மனைவிக்கும் இப்போது குழந்தைகள் இருக்கிறது. தனியாக தவிக்கவிட்டு சென்று விட்டனர் என்று புலம்பினார்.

Advertisment

பொறுமையாக அந்த பெண்ணிடம் நடந்ததை விசாரித்த போது, திருமணமாகி சில காலங்கள் ஆகி தன் கணவர் அந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுடன் இரண்டு வருடம் அவர் பழகி வந்திருக்கிறார். முதலில் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறாள். அதன் பிறகு மீண்டும் தன் கணவர் வந்ததும் குழந்தை அப்பா இல்லாமல் வாழக் கூடாது என்பதற்காக அந்த பெண் தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறாள்.

அதன் பின்பு, கணவர் தன்னை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்து அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். குழந்தைக்கு எதையாவது வாங்கி கொடுத்து அந்த இரண்டாவது மனைவியுடனே குழந்தையையும் வைத்துக்கொண்டு அம்மா பாசமே இல்லாத அளவிற்கு குழந்தையை மாற்றிவிட்டார். இதை தனது பெற்றோர்களிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தையை பிரிந்தும் வாழமுடியவில்லை. அதனால் கணவரின் இரண்டாவது குடும்பத்துடன் தானும் சேர்ந்து வாழவா? என்று கேட்டாள்.

Advertisment

இதையெல்லாம் கேட்ட பிறகு நான் அந்த பெண்ணிடம், உன்னுடைய குழந்தைக்கு என்ன வயது என்றேன். அதற்கு 14 வயதாகிறது என்றாள். இப்போது ஆலோசனை மட்டும்தான் என்னால் கூறமுடியும். அதனால் இதுவரை செய்து வந்த தியாகத்தை நிறுத்து உன் கணவரையும் குழந்தையையும் விட்டு தனியாக வாழ பழகு என்றேன். மேலும் சுய மரியாதைதான் முக்கியம் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் யாருடன் இருக்க வேண்டும் என்ற புரிதல் குழந்தைக்கு வந்துவிடும். இல்லையென்றால் இன்னும் சில காலங்களில் திருமணமாகி தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கிவிடுவார்கள். அதனால் எதற்கும் கலங்காமல் தைரியமாக முடிவெடு என்று அறிவுரையுடன் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.