detective malathis investigation 72

Advertisment

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், காணாமல் போன இரண்டாவது கணவர் குறித்து மனைவி கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்

ஒரு பெண்மணி என் ஆபிஸுக்கு வந்தார். இரண்டு ஆண் பிள்ளைகள் கொண்ட அவர், கணவனை பிரிந்து சட்டப்பூர்வமாக டைவர்ஸ் வாங்கியிருக்கிறார். அதன் பிறகு, இந்த பெண்மணி வேறு ஒரு திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த நபரை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டார்.

மகன்களுக்கு எக்ஸ்ரா கரிக்குலர் ஆட்டிவிட்டிஸுக்காக கோச்சிங் செண்டருக்கு மகன்களை அழைத்துச் சென்ற போது, கோச்சருக்கும், தனக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனக்கும் ஏற்கெனவே டைவர்ஸ் ஆகிவிட்டது, அதனால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவர் கேட்டதன் பேரில் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக சொன்னார். கொஞ்ச நாள் நன்றாக தான் திருமண வாழ்க்கை சென்றது. அதன் பிறகு அவர் நடத்தி வரும் கோச்சிங் செண்டரை காலி செய்துவிட்டு காணாமல் போய்விட்டார் என்றார்.

Advertisment

அதன் பிறகு, டைவர்ஸ் ஆன லீகல் காப்பி, இரண்டாவதாக செய்த திருமணத்திற்கான ஆதாரத்தை வாங்கி கொண்டு நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டோம். அவருடைய நம்பர் இருக்கும் லொகேஷனை டிராக் செய்தோம். அந்த லொகேஷனுக்கு சென்று, அவர் நடத்தி வந்த கோச்சிங் செண்டரில் சேர்ந்து அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தோம். அவர் இருந்த அந்த குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடித்த பிறகு, அந்த பெண்மணியிடம் சொன்னோம். இந்த பெண்மணியும், அங்கு சென்று அவரை பிடித்து பிரபலமான ஒருவர் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்துள்ளார். அப்போது, அந்த நபருக்கு ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிந்துள்ளது. முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் செய்த இந்த இரண்டாவது திருமண வாழ்க்கையில் பலவற்றையும் அவருக்காக அட்ஜஸ்ட் செய்ததாகவும், இப்படிபட்ட நபரோடு இனிமேல் வாழமுடியாது அந்த நபரை விட்டு பிரிவதாகவும் என்னிடம் போன் போட்டு அந்த பெண்மணி சொன்னார். நாங்கள் அந்த ஃபாலோவ் செய்ததில் அவர் 4,5 பெண்களோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்தோம்.