/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mala_4.jpg)
முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளின் நடவடிக்கை குறித்து பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு பெற்றோர், தன்னுடைய மகள் வீட்டில் வித்தியாசமாக நடந்து கொள்கிறாள். இந்து மத குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள், வீட்டில் சாமிக்கு படைத்த பிரசாதத்தை அந்த பெண் சாப்பிடுவதில்லை. அதனால், அவள் நடவடிக்கையைப் பற்றி விசாரித்துக் கூறும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
அதன்படி, நாங்கள் அந்த கேஸை எடுத்து அந்த பெண்ணை ஃபாலோவ் செய்கிறோம். ரொம்ப நாள் ஃபாலோவ் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. ஒருநாள், ஒரு பையனுடன் அவள் பைக்கில் போகிறாள். அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு, அந்த பையனை ஃபாலோவ் செய்தோம். அந்த பையனுடைய குடும்பம் என எல்லாவற்றையும் பார்த்தால் அவர்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த பையனுடன் ஏற்பட்ட காதலினால் தான், இந்த பெண் சாமிக்குப் படைத்த உணவை சாப்பிடுவதில்லை எனத் தெரியவந்தது.
நாங்கள் அந்த பெற்றோரை அழைத்து விஷயத்தைச் சொன்னோம். உங்களது மகள், அந்த பையனைக் காதலித்து பழகி அந்த குடும்பத்துடன் சேர்ந்ததால், இந்து கடவுளுக்குப் படைத்த பிரசாதத்தை சாப்பிடுவதில்லை. பெண் முடிவு எடுத்துவிட்டாள் இனிமேல், அவளை ஃபோர்ஸ் செய்யாமல் அவள் போக்கில் விடுவதே நல்லது எனக் கூறினேன். அவர்களும், தனது மகளிடம் பேசியதில், தான் மதம் மாறியதாகவும் எடுத்த முடிவில் ஸ்ட்ராங்கா இருப்பதாகவும் கூறியிருக்கிறாள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)