Colonel muruganandham pattalam 01
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் முருகானந்தம், ராணுவம் பற்றியும் அதில் உள்ள அமைப்புகள் பற்றியும் ‘பட்டாளம்’ என்ற தொடரின் வழியாக நம்மிடம் பகிர்ந்து வருகிறார்.
இந்தியாவினுடைய எல்லைக்கு வெளியே வரும் அச்சுறுத்தல்கள், எப்போதுமே இருக்கும் அச்சுறுத்தல்கள். மேற்கு பக்கம் இந்தியாவை சீர்குலைக்கக்கூடிய நாடாக பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசம், வடக்கில் சீனா ஆகிய நாடுகள் எப்போதுமே நமக்கு அச்சுறுத்தல்கள் கொடுக்கக்கூடிய நாடுகள். இரண்டு தரப்புகளில் இருந்து நமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இந்தியாவை இறையாண்மையை காப்பாற்றுவதற்கு ஒரு வலிமையான படைகள் தான் இந்திய ராணுவம், இந்திய கப்பல்படை, மற்றும் இந்தியன் விமானப்படை ஆகிய மூன்று படைகள். இந்த மூன்றுக்கும் ஆர்மிடு போர்ஸ் (Armed forces) என்று பெயர். இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அச்சுறுத்தல்களை பாதுகாப்பதற்கு தான் மூன்று படைகளின் பணியே. ஆர்மி, நேவி மற்றும் ஏர்போர்ஸ் மட்டும் தான் இந்திய ராணுவம்.
அதே மாதிரி, இந்தியாவுக்குள்ளேயும் பலவிதமான சர்ச்சையும், பலவிதமான பிரிவுகள், பலவிதமான பிரச்சனைகள் உள்ள நாடு தான் இந்தியா. அதனால், இந்தியாவுக்குள்ளேயும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு பல அடுக்குகளில் போலீஸ் படை இருக்கிறது. அதாவது ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு போலீஸ் இருக்கிறது. வன்முறையை தடுப்பதற்கு கிரைம் பிரிவு இருக்கிறது. உளவுத்துறையை பார்ப்பதற்கு இண்டர்னெல் செக்யூரிட்டி அண்ட் உளவு ஸ்தாபனம் இருக்கிறது. இந்த மாநில போலீஸால் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லையென்றால், ரிசர்வ்டு போலீஸ் இருக்கிறது. அவர்கள் ஸ்டேட் ஆர்ம்டு போலீஸ் என்பார்கள். அவர்கள் கைகளில் எப்போதும் துப்பாக்கி இருக்கும். ஏதேனும் கலவரம் வந்தால் ஸ்டேட் ஆர்ம்டு போலீஸ் அதை தடுப்பார்கள். அவர்களாலும் கலவரத்தை தடுக்க முடியவில்லை என்றால், மத்திய அரசு வைத்திருக்கும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் வருவார்கள்.
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் என்றால் மிலிட்டரி அல்லாத பாராமிலிட்டர் ஆர்கனைசேஷன். மிலிட்டர் இல்லாத ஆபரேஷன் செய்யக்கூடியவர்கள். அதில் பிஎஸ்எஃப் (எல்லை பாதுகாப்பு படை), ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை), சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை), எஸ்எஸ்பி (சாஷஸ்த்ரா சீமா பால்), ஆகியவை இருக்கிறது. இது இல்லாமல், ரிபைனரிஸ், போர்ட் ஆஃப் சென்னை, உயர் நீதிமன்றங்கள், ஏர்போர்ட், அட்டாமிக் பிளாண்ட், அட்டாமிக் பவர் ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்கு சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (CISF) இருக்கிறது. சிவிலும், இந்திய மக்களும் எங்கெல்லாம் இருப்பார்களோ அங்கு சிஐஎஸ்எஃப் இருப்பார்கள். இந்த 5 படைக்கும், சிபிஓ (சென்ட்ரல் பாராமிலிட்டரி ஆர்கனைசேஷன்) என்று இருக்கும். இவை மிலிட்டர் இல்லாத துணை ராணுவம் என்று சொல்வார்கள்.
அச்சுறுத்தல் நிரந்தரமாக இருந்தால், மிலிட்டரி படைகள் எல்லாம் செயல்படுவார்கள். அதே போல், அச்சுறுத்தல்கள் தற்காலிகமாக இந்த மாதிரி் சிபிஓ ஆர்கனைசேஷனில் இருந்து சில பேரை எடுத்து ஒரு டீமை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த அச்சுறுத்தல்களை போக்க வைப்பார்கள். இந்த மாதிரியான செயல்படுவதற்கு நேஷனல் செக்யூரிட்டி கார்ட் (NSG) என்று இருக்கிறது. இந்த நிறுவனம் தான் விஐபிக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, பிளாக் கமாண்டர்ஸ்லாம் கொடுக்கும். இந்த நிறுவனத்தில் போலீஸ் அதிகாரிகளும் இருப்பார்கள், மிலிட்டரி அதிகாரிகளும் இருப்பார்கள் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த டீமை உருவாக்குவார்கள். அந்த நடவடிக்கை முடிந்த பின்னர், அந்த டீமை கலைத்துவிடுவார்கள். எடுத்துக்காட்டுக்கு, வீரப்பனை பிடிப்பதற்கு ஜெயலலிதா ஐஐ தேவாரம் தலைமையில் ஒரு டீமை உருவாக்கினார்கள். அந்த டீமில், ஸ்டேட் போலீஸ், ஆர்ம்டு போலீஸ், கர்நாடகா போலீஸ், உளவுத்துறை உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். வீரப்பனை பிடித்ததற்கு பிறகு அச்சுறுத்தல் முடிந்ததால் அந்த டீமை கலைத்துவிட்டார்கள். சர்வீஸ் எலிமெண்டஸ் என்று சொல்லக்கூடிய ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கிறது. மீதி எல்லாம் உள்துறை அமைச்சகத்தில் கீழ் இருக்கிறது.