Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

Published on 13/07/2019 | Edited on 15/07/2019

வறுமையின் பெயரால் ம.பி. பாஜக முதல்வர் சுருட்டிய கோடிகள்! (BUNDELKHAND PACKAGE SCAM- MADHYA PRADESH)

 

 

 

madhya pradesh

 

 

மத்தியப்பிரதேச மாநிலத்தையும், உத்தரப்பிரதேச மாநிலத்தையும் உள்ளடக்கிய மலைப்பகுதி மாவட்டங்களை பண்டெல்கண்ட் என்று அழைப்பார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தப் பகுதியில் 6 மாவட்டங்கள் இருக்கின்றன. வறட்சியின கோரப்பிடியில் சிக்கிய இந்த மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக 2008- ஆம் ஆண்டு ரூ.7,400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் இந்தப் பணத்தை வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிட்டதாக கூறியது. ஆனால், கண்கூடாக எதுவுமே செய்யப்படவில்லை. பணத்தை பாஜகவினர் மொத்தமாக விழுங்கிவிட்டனர்.

 

 

 

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் சத்தீஷ்கர் பாஜக அரசு மோசடி! (BUDGET SCAM (CHHATTISGARH)

 

 

chhattisgarh

 

 

 

2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுக்கான சத்தீஷ்கர் மாநில பட்ஜெட் நிதி 80,200 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவே இல்லை. இதை கண்டுபிடித்த பொதுக்கணக்கு தணிக்கைத்துறை அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியாக கண்டித்தது.

 

 

 

ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவின் குவாரி ஊழல்! BAJRI SCAM (RAJASTHAN)

 

 

rajasthan

 

 

ராஜஸ்தானில் மணல் மற்றும் கல் குவாரிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. ஆனாலும், வசுந்தராராஜே அரசு சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி அளித்தது. எனவே மார்க்கெட்டில் தடையில்லாமல் மணல் கிடைத்தது. ஆனால், ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டது. இந்த கள்ளமார்க்கெட் வர்த்தகத்திற்காகவே பாஜக அரசு முறையான குவாரி கொள்கையை வகுக்க மறுத்தது. 

 

 

 


ராஜஸ்தான் பாஜக அரசின் இன்சூரன்ஸ் பாலிசி மோசடி! BHAMASHAH HEALTH INSURANCE SCAM (RAJASTHAN)

 

 

 

rajasthan

 

 

ராஜஸ்தானில் பமாஷா ஸ்வஸ்தியா பீமா யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழக்கத்தை விட இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்தன. இவற்றில் பெரும்பாலானவை மோசடியான விண்ணப்பங்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. தேவையில்லாத மருத்துவ சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை கோரப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அந்தச் சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை ஒருபோதும் கொடுத்ததே இல்லை. இந்த இன்சூரன்ஸ் தொகையை விண்ணப்பித்த நோயாளிகளும் உண்மையில் நோய்வாய்ப்பட்டவர்கள் இல்லை. இந்த மோசடி குறித்து வெளியான பிறகும் அரசு தனது மவுனத்தை கலைக்கவே இல்லை. அரசுக்கும் இத்தகைய பிராடு மருத்துவமனைகளுக்கும் இருந்த தொடர்பு இதன் மூலம் அம்பலமாகியது.

 

 


கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க ஹவாலாவை பயன்படுத்திய குஜராத் பாஜக தலைவர்கள்! (BITCOIN SCAM)

 

 

 

 

bit coinscam

 

 

 

குஜராத் பாஜக தலைவர்கள் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கள்ளப்பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலமாக நல்ல பணமாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் நளின் கொட்டாடியா தலைமறைவானார். அவரை இப்போது வரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், குஜராத் சிஐடி போலீஸார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தான் இதில் மாற்றப்பட்டதாக கூறி பாஜகவை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.

 

 

 

கோவா அரசின் கட்டட வாடகை ஊழல்! (BUILDING SCAM- GOA)

 

 

goa

 

 

 

கோவா அரசு அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களுக்காக ஒரு ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 538 ரூபாய் வாடகை கொடுத்ததாக அந்த மாநில பாஜக முதல்வர் மனோகர் பரிக்கர் அரசு கூறியது. இந்த கட்டிட வளாகம் நிலேஷ் அமோன்கர் என்பவருக்கு சொந்தமானது. இவர் கோவாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வர்த்தகர். இந்த கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் காலி செய்து ஒரு ஆண்டு சும்மாவே கிடந்தது. இப்படிப்பட்ட நிலையில் அன்றைக்கு உள்ள நடைமுறை வாடகைக் கட்டணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக கோவா அரசு கணக்குக் காட்டியது பெரிய ஊழலாக கருதப்பட்டது.

 

முந்தைய பகுதி:


ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி1

 

அடுத்த பகுதி:
 

 ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -3

 

 

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கண்ணீர் மல்க ஆதங்கப்பட்ட பட்டியலின பெண்; ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள். 

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.