இ-டெண்டர் ஊழல் (சத்தீஷ்கர்)- E-TENDER SCAM (CHHATTISGARH).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHH okk.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
எல்லாமே ஆன்லைன் டெண்டர் தான் என்று அரசு சொல்கிறது. ஆனால், காண்ட்ராக்ட் டெண்டர் அறிவிப்புக்கு முன்பே ஒப்பந்தக்காரர்களுடன் கொஞ்சிக் குழாவி எப்படி டெண்டர் விடப் போகிறோம் என்று விவரங்களை பகிர்வது இதுவே சத்தீஷ்கர் பாஜக முதல்வராக இருந்த ராமன்சிங்கின் பழக்கமாக இருந்திருக்கிறது. 2016 முதல் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் இ-டெண்டர் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக பொதுக்கணக்குத் துறை கண்டுபிடித்தது. சத்தீஷ்கர் அரசின் 17 துறைகள் சார்பில் கோரப்பட்ட ஆயிரத்து 971 டெண்டர்களுக்கு 477 காண்ட்ராக்டர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் 74 கம்யூட்டர்களை பொதுவாக உபயோகித்திருந்தனர். 4 ஆயிரத்து 601 கோடி மதிப்புள்ள இந்த டெண்டர்களுக்கு மாநில அரசு அதிகாரிகளே உதவியிருப்பதும், இந்த பணப்பரிவர்த்தனையில் வருமானவரி முறைகேடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. ஒரே இ-மெயில் முகவரியிலிருந்து ஏராளமான டெண்டர்கள் விண்ணப்பிக்கப் பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மின்சார ஊழல் (மத்தியப்பிரதேசம்)- ELECTRICITY SCAM (MADHYA PRADESH).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MADH sssss.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மத்தியப்பிரதேசத்தில் மின்துறை அமைச்சராக இருந்த பராஸ் ஜெயின், தனது மகளும், மருமகளும் நடத்திய கம்பெனிக்கு மாநில மின்துறையின் 180 கோடி ரூபாய் திட்டத்தை வழங்க சலுகை செய்தார். இவர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்க வேண்டும். அதற்காக அவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக இருமுறை டெண்டர் காலக்கெடுவையும் இவர் நீடிக்க உத்தரவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இ-டெண்டர் ஊழல் (மத்தியப்பிரதேசம்)- E-TENDER SCAM (MADHYA PRADESH).
மத்தியப்பிரதேசத்திலும் இ-டெண்டர் முறைகேடுகளில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசாங்கமே ஆன்லைன் டெண்டர்களில் மோசடி செய்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே இந்த மோசடி தொடர்ந்திருக்கிறது. டெண்டர்களில் மற்ற ஏலதாரர்கள் கோரியிருந்த விலை விவரங்களை சில குறிப்பிட்ட ஏலதாரர்களுக்கு அதிகாரிகளே தெரிவித்தனர். இதன்மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
நிலநடுக்க நிவாரண நிதியிலும் ஊழல்! (EARTHQUAKE RELIEF FUND SCAM).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GUJARAT omkkk.jpg)
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த சமயத்தில் 2001 ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய அந்த நிலநடுக்கத்திலிருந்து மீள பல்வேறு நாடுகளும் மாநிலங்களும் நிதியை வாரிக்கொடுத்தன. ஆனால், அந்த நிதியிலும் பாஜக எம்எல்ஏ மோசடி செய்தார். தனது பள்ளி இடிந்துவிட்டதாக கூறி பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 20 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெற்றார். ஆனால், அது உண்மையில்லை என்று அறியப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற வழக்கின் முடிவில் அந்தத் தொகையை 10 சதவீதம் வட்டியோடு அரசுக்கு திரும்பத்தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)