Skip to main content

தோழியுடன் பழக்கம்; காதலனின் சந்தேகத்தால் விபரீத முடிவு எடுத்த சிறுமி - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :45

Published on 05/09/2024 | Edited on 05/09/2024
asha bhagyaraj parenting counselor advice 45

சிறு வயதில் ஏற்பட்ட காதலால், தற்கொலை முயற்சி எடுத்த சிறுமிக்கு கொடுத்த  கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

8வது படிக்கும் பெண், ஒரு பையனை காதலித்திருக்கிறாள். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்திருக்கிறது. அதன் பிறகு, அந்த பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறாள். நல்ல வேலையாக அதை பெற்றோர் தடுத்திருக்கிறார்கள். இதில் இருந்து அவளை வெளியே கொண்டு வர டாக்டரிடம் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் பெற்றோர் என்னை பார்க்க வந்தனர்.

நான் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, காலேஜ் முடித்து வேலைக்கு செல்லும் பையன் மீது இந்த பெண் காதல் கொண்டிருக்கிறாள். தோழி கூட நெருக்கமாக பழகுவதால் இவள் மீது பையன் சந்தேகப்பட்டிருக்கிறான். தன் மீது ஏதேனும் தவறு இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்தது. என்னை நான் ப்ரூஃப் செய்வதற்காக தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக அந்த பெண் சொன்னாள். நான் அந்த பெண்ணிடம், உன்னை பற்றி முதலில் தெரிந்துகொள். உன் மீது தவறு இருக்கிறது என்று எப்படி சந்தேகம் வரலாம்?. உன்னுடைய பவுண்டரிஸை முதலில் செட் செய்துகொள் என்று அட்வைஸ் கொடுத்தேன். அவர்களை பற்றி அவர்களுக்கு முழுமையாக தெரிந்துகொள்ளததால், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள். 

அந்த பெண்ணிடம், உன்னை நீ டிஃபைன் செய்ய வேண்டும் என்று கூறி ரைட்டிங் ஆட்டிவிட்டி கொடுத்தேன். புத்தகங்கள் படிக்கும் அந்த பெண்ணுக்கு, எந்த விஷயத்தையும் முக்கியத்துவம் கொடுத்து செய்யும் பழக்கமில்லை என்பதை உணர்ந்தேன். அதனால், அந்த இண்ட்ரஸ்டையும் கொண்டு வர ஆக்ட்டிவிட்டி கொடுத்தேன். இதற்கிடையில், அந்த பையனிடம் பேச ஆசைப்பட்டாள். அதை கூட நான் தடுக்காமல், சிறிய ஆக்ட்டிவிட்டியை கொடுத்து கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு நீயே முடிவு செய்துகொள் என்றேன். அதற்காக 15 நாள் டைம் கொடுத்தேன். இறுதியாக, அவனிடம் பேச அவளுக்கு விருப்பமில்லை என்றாள். சில ஆக்ட்டிவிட்டி கொடுத்தும் வருகிறேன். அதை நன்றாக செய்து வருகிறாள். 

 
The website encountered an unexpected error. Please try again later.