Advertisment

பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்; நம்ப மறுக்கும் அப்பா - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :44

asha bhagyaraj parenting counselor advice 44

Advertisment

சிறு வயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 15 வயது பெண், தன்னுடைய வீட்டில் சொல்லி அதன் பிறகு என்னை பார்க்க வந்தார்கள். அந்த பெண்ணுக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும் தான். இவர்கள் ஜாயிண்ட் பேமிலியில் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய மாமா பையன், கடந்த 9 வருடங்களாக இந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறான். அந்த பையன், இவளை விட குறைவான வயது தான். ஏற்கெனவே இருக்கக்கூடிய நிலைமையினால், இந்த பெண் இது பற்றி யாரிடம் சொன்னாலும் அதை நம்ப மாட்டார்கள் என்ற எண்ணம் வருகிறது. அம்மா இறந்த பின், அப்பா இல்லாத போது, வீட்டில் உள்ள உறவினர்கள் இந்த பெண்ணை ரொம்பவே மட்டம் தட்டி பேசுவார்கள். இது பற்றி தன் அப்பாவிடம் சொன்னாலும், அதை அவர் நம்ப மறுக்கிறார். பெண்ணுக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் இப்படி பேசுகிறாள் என்று பல மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

மகளுக்கு அதிகளவில் கோபம் இருப்பதால் பிரச்சனைகள் இருக்கிறது, மாத்திரை சாப்பிட்டால் தான் அவள் சரியாவாள் என்று அப்பா என்னிடம் சொல்கிறார். மாத்திரை சாப்பிடுவதால், முடி உதிர்வது போன்ற நிறைய பாதிப்புகள் வருகிறது என அந்த பெண் கூறுகிறாள். பாதிப்புகள் வராது என்று டாக்டர் சொன்னாலும், அந்த மாத்திரையை அவள் சாப்பிடவே தயாராக இல்லை. அந்த பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக என்னிடம் தனியாக சொன்னாள். இதை பற்றி மற்றவர்களிடம் சொன்னாலும் தன்னை தான் குற்றவாளி போல் பேசுவார்கள். இதற்கு எப்படி நோ சொல்வது கூட தனக்கு தெரியவில்லை என்றாள். இந்த பெண் 2ஆம் வகுப்பு படிக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர், ஆட்டோ டிரைவர், என அனைவரும்பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர். இது போக, போக தான் தனக்கு ஏதோ நடக்கிறது என்பதை அவள் உணர்கிறாள். இதனால், பள்ளிக்கு செல்லவே அவள் பயப்பட்டு படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டார். படிப்பை பாதியில் விட்டதால் அதை அப்பா குறை கூறிக்கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் தான் மாமா பையன், அவளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறான்.

Advertisment

பயம், மன அழுத்தம், கோபம் எல்லாமே இந்த துன்புறுத்தலால் தான் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தலில், ஆண்கள் மட்டும் நடந்துகொள்ளவில்லை, பெண் டீச்சரும் நடந்திருக்கிறார் என்று சொன்னாள். இந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னாலும், அதை அவர் நம்பமாட்டார், தன்னை தான் குற்றம் சொல்வார்கள் என்று அவள் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். எப்படி பவுண்டரி செட் செய்ய வேண்டும், எப்படி நோ சொல்ல வேண்டும், இதிலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று சொல்லிகொடுங்கள் என்று கேட்டாள். கோபத்தில் இருந்து வெளிவர என்கேஜ்ஜாக என்ன என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி கொடுத்தேன். பள்ளிக்கு போகமாலே வீட்டில் இருந்தே படிக்க முயற்சிகளை மேற்கொள்ள சொன்னேன்.

தனக்கு என்ன விதமான துன்புறுத்தல் ஏற்பட்டாலும், சத்தமாக கத்த வேண்டும். அப்பொழுது தான் எதிரில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வரும் என்றேன். அந்த பெண், தன்னை தற்காத்து கொள்ள ஏதாவது பயிற்சியில் சேர்த்துவிடுமாறு அப்பாவிடம் சொன்னேன். மைண்ட் ரிலேட்டடான விஷயங்களை அந்த பெண்ணுக்கு சொல்லி கொடுத்துகொண்டு இருக்கிறேன்.

Counseling
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe