asha bhagyaraj parenting counselor advice 39

பெற்றோரை கெட்ட வார்த்தையால் திட்டி, அடிக்கும் 22 வயது பையனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

Advertisment

பெற்றோரை திட்டுவது, அடிப்பது, வெர்பல் அப்யூஸ் வார்த்தைகளை பயன்படுத்துவதுமாய் 22 வயது பையன் இருக்கிறான். அவனுடைய பெற்றோர் அந்த பையனை அழைத்து என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தனர்.

Advertisment

அவனிடம் ஒவ்வொரு முறையும் பேசும் போது வீட்டில் நடந்த சம்பவங்களை கூறுவான். அவனுடைய பழைய கால நினைவுகளில் இருந்து அவனால் வெளியவே வரமுடியவில்லை. அப்பா அம்மா இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் அவர்களுடைய செக்ஸ் லைப்பை பற்றி மகன் முன்னாடி பேசுவது, இருவரும் மாறி மாறி கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது, சண்டை போடுவது, மகனை அசிங்கமாக பேசுவதுமாய் இருந்திருக்கிறார்கள். அவனிடம் செக்சன் நடத்தும் போது பயங்கரமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவான். இவன் இப்படி ஆனதற்கு முழு காரணமே இவனுடைய பெற்றோர் தான்.

வீட்டில் எது நடந்தாலும், பையன் மீது பழி சுமத்திருக்கிறார்கள். இதனால் ட்ரிகர் ஆகி, அம்மா அப்பாவை கண்டபடி அடிக்கிறான். பெற்றோர் மட்டுமல்லாது அவனது உறவினர்கள் கூட அவனுடைய அம்மா அப்பாவை திட்டிருக்கிறார்கள். பழைய கால நினைவுகளை மறக்க முடியாமல் பழிகாடாக ஆகியிருக்கிறான். ஒரு நாள் செக்சனின் போது, அம்மாவையே என் முன்னாடி அடிக்கிறான். அவனை சமாதானப்படுத்த எனக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

Advertisment

பழைய கால நினைவுகளை சரிப்படுத்த நான் உனக்கு உதவி செய்கிறேன், அதனால் உன் எதிர்காலத்தை பார்க்க வேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னேன். அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய வேலைகள் கூட அவனால் செய்யமுடியவில்லை. அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவனுடைய பெற்றோர் எதை செய்தாலும் அந்த இடத்தில் கோபப்பட்டு அம்மா அப்பாவை திட்டுகிறான். உங்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் என்னுடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. என்னை தனியாக விட்டிருந்தால் இந்த மாதிரி நான் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன் என்று அவனது பெற்றோரிடம் கூறி அவனுடைய பாஸ்டில் இருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

இவர்களது சண்டையால் என்னுடைய எதிர்காலமும், செக்ஸ் லைஃப்பும் எப்படி இருக்கும் என்ற பயம் தான் அதிகமாக இருக்கிறது என்று என்னிடம் கூறுகிறான் . இதுவரை 13 செக்சன் வரை நடந்திருக்கிறது. ஆனால், இன்னும் அதிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. தொடர்ந்து அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன்.