Advertisment

பையனுக்கு ஏற்பட்ட பருவமடையும் மாற்றங்கள்; செய்ய வேண்டியது என்ன? - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :33

asha bhagyaraj parenting counselor advice 33

Advertisment

பருவமடையும் நேரத்தில் 12வயது பையனுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், அந்த நேரத்தில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யரஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

ஒரு 12 வயது பையன், அவனுடைய பிரைவேட் பார்ட்டில் அடிக்கடி கை வைக்கிறான். இது குறித்து மருத்துவரிடம் போக வேண்டுமா? அல்லது அவனுக்கு மைண்ட் கவுன்சிலிங் தேவைப்படுதா என்று கேட்டு தாம் அந்த பையனுடைய பெற்றோர் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம், முதலில் அவனுக்கு பியூபர்டி எடுகேஷன் (பருவமடைதல் கல்வி) பற்றி சொல்லிக் கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு அவர்கள் இல்லை என்றார்கள்.

பியூபர்டி பருவத்தில் பையனுக்கும் 50 சதவீத அளவில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளிடம் அவர்களுடைய உடல் பாகங்கள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்களும், குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பிரீடீன் என சொல்லக்கூடிய 8 வயது முதல் 12 வயது வரை உள்ள பருவத்தில் உங்களுடைய குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி கண்டிப்பாக பியூபர்டி எடுகேஷன் பற்றி கண்டிப்பாகசொல்லிக் கொடுக்க வேண்டும். அதை செய்யவில்லையென்றால், மற்றவர்களிடம் இருந்தும், சமூக வலைத்தளத்தில் இருந்தும் தவறான தகவலை பெற்றுக் கொண்டு தவறான பாதையில் சென்றுவிடுவார்கள். அதற்கு முன்னாடியே, பெற்றோர்கள் அதுபற்றி கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். பருவமடையும் காலத்தில், ஆண்களுக்கு செமன் லீகேஜ் நடக்கும். அந்த நேரத்தில், பிரைவேட் பார்ட்டை எப்படி பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Advertisment

முதல் செஷனில், அந்த பையனுக்கு பியூபர்டி எடுகேஷன் பற்றி சிலவற்றை சொல்லிக் கொடுத்தேன். அது போல், அவனது பெற்றோருக்கு சொல்லிக் கொடுத்து அவனுடைய பிரைவேட் பார்ட்டை செக் பண்ணுங்க என்றெல்லாம் சொன்னேன். அந்த பையன் ஏதாவது ஒரு வீடியோ பார்த்து அது மாதிரி செய்திருக்கலாம். சில நேரத்தில் ஸ்டிரஸ்ஸால் (Stress) கூட சில குழந்தைகளுக்கு தன்னை மீறி அந்த இடத்திற்கு கை போகும். படிப்பு, எமோஷன், ஹார்மோன்ஸ் மாற்றங்கள் மூலம் அந்த பிரீடீன் வயதில் நம்மை விட குழந்தைகளுக்கு அதிக ஸ்டிரஸ் இருக்கும். இது பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும்.

உன் உடம்பில் ஹார்மோன்ஸ் மாற்றத்தால் பியூபர்டி நடக்கிறது. அப்படி நடக்கும் உன் மனதிலும், உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அந்த சமயத்தில், ஏதாவது ஒரு வீடியோ உங்களுக்கு அனுப்பி அது பிடித்துவிட்டால் அதையே பார்க்க தோன்றும். எப்போதாவது பார்த்தால் பரவாயில்லை, ஆனால், திரும்ப திரும்ப அதையே பார்க்க தோன்றினால், அந்த இடத்தில் உனக்கு உதவி தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் எங்களிடம் சொல் என்று பெற்றோர்கள் குழந்தைகளோடு பேச வேண்டும். அப்படி சொன்னால், கண்டிப்பாக குழந்தைகள் பெற்றோர்களிடம் வருவார்கள். நான் அந்த பையனிடம், உனக்கு உன்னுடைய பிரைவேட் பார்ட்டை தொட வேண்டும் நினைத்தால், உடனடியாக உன் மைண்டை டைவர்ட் செய்ய வேண்டும். நீங்கள் கெட்ட பையன் கிடையவே கிடையாது. மற்ற பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறமோ அது போல் தான் இதுவும் என்றேன். இதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்றெல்லாம் சொன்னேன். அந்த பையனும் முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.

Counseling
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe