Advertisment

இரண்டு பெண்களோடு தொடர்பில் இருந்த கணவன்; கச்சிதமாக சிக்கவைத்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 81

advocate santhakumaris valakku en 81

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

Advertisment

காமாட்சி என்ற பெண்ணுடைய வழக்கு இது. இவள், கொஞ்சம் மந்த புத்தி உடையவள்.சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, ஒரு வரன் வருகிறது. 3 படகு வைத்துள்ளதாக பையன் சொல்ல, இருவருக்கும் பிடித்து போகிறது. திருமணத்திற்கு முன்பாக, பையன் 3 படகு வைத்திருக்கவில்லை என்றும், அந்த படகுகளில் வேலை பார்ப்பதாகவும் பெண் வீட்டாருக்கு தெரியவருகிறது. வேலையில் பையன் கெட்டிக்காரன் என்பதால், காமாட்சிக்கு 20 பவுன் நகையும், பையனுக்கு 3 பவுன் நகையும் போட்டு காமாட்சியினுடைய அப்பா திருமணம் செய்து வைக்கிறார்.

Advertisment

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், ஒரு வருடத்தில் குழந்தை பிறந்துள்ளது. அடுத்து மூன்றாவது வருடத்தில் இன்னொரு குழந்தை என நன்றாக சென்று கொண்டிருந்தது. எப்போது சீக்கிரம் வீட்டுக்கு வரும் கணவன், சில நாட்கள் கழித்து வீட்டுக்கு தாமதமாக வந்து கொண்டிருக்கிறான். இதை பற்றி காமாட்சி கேட்டாலும் அவன் கண்டுகொள்வதில்லை. சில நாட்கள் கழித்து மது குடித்து வீட்டுக்கு வந்து காமாட்சியிடம் காரணமில்லாமல் வாக்குவாதம் செய்கிறான். மனைவி மீதும், குடும்பத்தின் மீதும் உள்ள ஈர்ப்பு கொஞ்ச கொஞ்சமாக பையனுக்கு குறைந்துகொண்டே வருகிறது. மகள் இல்லாமல், மாப்பிள்ளை பல இடங்களுக்கு சுற்றித் திரிவதாக சுற்றிவுள்ளவர்கள் சொல்ல, காமாட்சியின் அப்பாவுக்கு சந்தேகம் வருகிறது. இதனையடுத்து, மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்திற்கே சென்று, மாப்பிள்ளையிடம் நன்றாக இருக்கும்படி காமாட்சியினுடைய அப்பா அறிவுரை கூறி வருகிறார்.

அதன் பின்னர், தொடர்ந்து 3 நாட்கள் பையன் வீட்டுக்கே வரவருதில்லை. இதைப்பற்றி காமாட்சி தன் அப்பாவிடம் சொல்ல, அவரும் மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்திற்கு போன் போட்டு கேட்கிறார். ஆனால், பையன் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். அப்போது தான் பையன், வேறு ஒரு பெண்ணினுடைய வீட்டுக்கு அடிக்கடி சென்று, தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக அவர்களுக்கு தெரிகிறது. காமாட்சியின் அப்பாவும், முதலாளியும், இந்த உறவை கைவிடும்படி அறிவுரை கூறினாலும், பையன் திருந்துவது போல் இருக்கிறான். காமாட்சி சொன்னதன் பேரில், பையன் தன்னுடைய அம்மா வீட்டுக்கு குடும்பத்தோடு குடிபோகிறான். ஆனால், அங்கு மாமியாருக்கும், மருமகளுக்கு ஒத்துப்போவதில்லை. ஒரு நாள் இவர்களுக்குள் சண்டை வரவே, தான் வாங்கிய ஒரு வீட்டில் பையனும் காமாட்சியும் வேறு ஒரு வீட்டுக்கு குடிபோகிறார்கள். இதற்கிடையில், பையனுக்கு இன்னொரு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே போகும்படி காமாட்சியிடம் அடிக்கடி சண்டை போட்டு அடிக்கிறான். ஆனால், ஒருபோதும் தான் வீட்டை விட்டு வெளியே போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாள். ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே, காமாட்சியை அழைத்துக்கொண்டு அவளுடைய அப்பா போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்.

போலீஸும், பையனைகண்டித்ததோடு மட்டுமல்லாம் அவன் தொடர்பில் இருந்த இரண்டு பெண்களையும் அழைத்து அறிவுரை சொல்லிபையனை விட்டு விலகுமாறு கூறி குடும்பத்தை ஒன்று சேர்த்திருக்கிறார்கள். ஆனால், போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று தன்னை பற்றி புகார் அளித்ததால், காமாட்சி மீது மீண்டும் சண்டை போட்டு, குடும்ப நீதிமன்றத்தில் டைவர்ஸுக்கு கேஸ் போட்டுவிட்டான். மனைவி மந்த புத்தி உள்ளவள், அவளோடு வாழ விருப்பமில்லை என்றெல்லாம் அந்த மனுவில் போட்டான். இந்த நிலையில், தான் காமாட்சி என்னை சந்தித்து விஷயத்தைச் சொன்னார். கணவனோடு வாழ விருப்பப்பட்டு, டைவர்ஸ் கொடுக்க மறுத்தாள் காமாட்சி. அதனால், நாங்கள் கோர்ட்டில் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு மனு போட்டோம். மேலும், காமாட்சி குழந்தைகள் என ஆள் ஒன்று மெயிண்டென்ஸாக மாதத்திற்கு ரூ.5000 என மொத்தம் ரூ.15,000 கேட்டோம். ஆனால், அவன் கொடுக்க மறுத்து 3 வருடமாக இந்த கேஸை இழுத்தான். நீதிபதி கண்டித்ததும், மனு போட்டத்தில் இருந்து தற்போது வரை உள்ள பணத்தை கொஞ்ச கொஞ்சமாக கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதலில் 1 லட்ச ரூபாயை கொடுத்தான். காமாட்சி கடைசி வரை டைவர்ஸ் கொடுக்காததால், இப்போது வரை மாத மாதம் 15,000 ரூபாயை கொடுத்துக்கொண்டு இருக்கிறான். டொமெஸ்டிக் வைலன்ஸ் கேஸ் வேறு கொடுத்ததால், காமாட்சியும், குழந்தைகளும் இப்போது அந்த வீட்டில் தான் நன்றாக இருக்கிறார்கள். பையனும் எப்போதாவது மனைவியை பார்த்து அங்கு இரண்டு, மூன்று நாட்கள் தங்கி கொண்டு வருகிறான். காமாட்சியினுடைய வாழ்க்கை இப்படியே நகர்கிறது. மனைவி மந்தமாக இருப்பதாக நினைத்த கணவனை, கச்சிதமாக சிக்க வைத்து காமாட்சியினுடையநன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறது..

Advocate Santhakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe