Advertisment

மருத்துவருடன் நெருக்கம் காட்டிய மனைவி; மனமுடைந்த கணவர் எடுத்த முடிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 69

advocate santhakumaris valakku en 69

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

Advertisment

பிரவீன்குமார் என்பவருடைய வழக்கு இது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, நன்றாக படித்து பாரின் செல்லக்கூடிய அளவுக்கு தன்னை தேர்த்தி வைத்திருக்கூடிய ஒரு நல்ல மனிதர். பிரவீன் குமாருக்கும் அவரது தம்பிக்கும் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தைகளுக்காக செலவழிக்கக்கூடிய ஒரு நல்ல பெற்றோர். பிரவீன்குமாருக்கு மைசூரில் இருந்து ஒரு பெண் வரண் கிடைக்கிறது. அப்பர் மிடிள் கிளாஸ்ஸை சேர்ந்த அந்த பெண்ணை பிரவீன்குமாருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

Advertisment

வீட்டுக்கு வந்த அந்த பெண்ணுக்கு பிரவீன்குமாருடைய வீட்டை பிடிக்கவில்லை. வசதியானவர்கள் என பொய் சொல்லி திருமணம் செய்திருக்கிறார்கள் என அந்த பெண் நினைக்கிறாள். வீடும் மாமனார், மாமியார் பெயரில் இருப்பதால் பிரவீன்குமாரிடையே இதை பற்றி கேட்கிறாள். அந்த பையனும், தான் உன்னை ஏமாற்றவில்லை, திருமணம் நடப்பதற்கு முன் தன்னை பற்றி முழுமையாக சொல்லி தான் திருமணம் செய்திருக்கிறேன் எனச் சொல்கிறான். ஆனால், இந்த வீட்டில் ஒரு கார் கூட இல்லை, அதனால், ஏமாற்றி தான் திருமணம் செய்திருக்கிறீர்கள் எனச் சொல்ல, மனைவி ஆசைப்படி பேங்கில் லோன் வாங்கி ஒரு காரை வாங்குகிறான். ஆனாலும், அவன் வாங்கி வந்த காரை பற்றி குற்றம் சொல்லி சலிப்பு தட்டுகிறாள். வீடு மாமனார் மாமியார் பெயரில் இருப்பதால், வீடு வாங்கிய கடனை கட்டத் தேவையில்லை எனக் கணவரிடம் மனைவி சண்டை போடுகிறாள்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல, மனைவிக்கு இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் இருப்பதால் ஐ.வி.எஃப்க்கு செல்லும்படி டாக்டர் அறிவுரை கூறுகிறார்கள். இதை தெரிந்துக்கொண்ட பிரவீனுடைய அப்பா, வீட்டை பேங்கில் கொடுத்து அதில் வரும் பணத்தை எடுத்து டீரிட்மெண்ட் செய்யுமாறு கூற, ஹாஸ்பிட்டலில் டீரிட்மெண்ட் செய்கிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐவிஎஃப் டீரிட்மெண்ட் பெயிலியர் ஆகிவிடுகிறது. இதற்கிடையில், பிராஜக்ட் விஷயமாக ஜெர்மனிக்கு செல்ல ஆஃபர் வர, தன் மனைவி ஆசைப்படி டூரிஸ்ட் விசா மூலம், இருவரும் ஜெர்மனிக்கு செல்கிறார்கள். அங்கு மனைவி சந்தோஷமாக இருக்க, இரண்டு வருட காலத்திற்கு ஜெர்மனியில் வேலைக்கு கொடுக்குமாறு கம்பேனிக்கு லெட்டர் போட, அவனுக்கு அந்த ஆஃபரும் கிடைக்கிறது. அங்கு சென்ற மனைவி, மீண்டும் கணவருடன் சண்டை போடுகிறாள். ஊரில் இருந்த கார் இங்கு வேண்டும் என சண்டை போட, பிரவீனுடைய அப்பாவும் அந்த காரை விற்று மேலும் ஒரு இருபதாயிரம் பணத்தை போட்டு பையனுக்கு அனுப்புகிறார். இதற்கிடையில், ஜெர்மனியில் இருந்து மும்பை வந்து இரண்டாவது முறையாக ஐவிஎஃப் செய்கிறார்கள். ஆனாலும், அந்த டீரிட்மெண்டும் பெயிலியர் ஆகிவிடுகிறது. டோனார் ஸ்பெர்ம் வைத்து குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என மனைவி கூற அதை முயற்சி செய்கிறார்கள். மூன்றாவது முறையாகவும் அது பெயிலியர் ஆகிவிடுகிறது.

கடைசி வரை குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததால் அப்செட் ஆகி, ஆண்மை இல்லாதவன் என தன் கணவனை குறை கூறுகிறாள். பிரவீனை டீரிட்மெண்ட் செய்ய அவன் ஆண்மை உள்ளவன் தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள ஐரோப்பா நாட்டில் அத்தனை இடத்திற்கு டூர் கூப்பிட்டு போகிறான். மேலும், மனைவியின் மனநலத்தை பாதுகாக்க சைகாட்ரிஸ்ட் டாக்டரிடம் அழைத்து போகிறான். ஆல்பம் சாங் போடும் அந்த சைகாட்ரிஸ்ட் டாக்டரிடம் பேசிய இவள், மகிழ்ச்சியாகி தானும் ஆல்பம் சாங் போட வேண்டும் என மனைவி நினைக்கிறாள். மனைவி சந்தோஷம் தான் முக்கியம் நினைத்த பிரவீன் குமார், சைகாட்ரிஸ்ட் டாக்டருடன் ஆல்பம் சாங் போட அனுமதித்து தினமும் அனுப்புகிறான். இதற்கிடையில், ஜெர்மனியில் வேலை பார்க்க முடியாததாலும், தன் அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பிரவீன் கூற அதற்கு அவனுடைய மனைவி வர மறுக்கிறாள். எவ்வளவு சொல்லியும் வரமுடியாது என அடம்பிடித்த அவள், பிரவீன் மட்டும் தனியாக இந்தியா வந்து அவளை அழைக்கிறான். ஆனால், சைகாட்ரிஸ்ட் டாக்டருடன் பிசியாக இருப்பதாகக் கூறி அவள் வர மறுக்கிறாள். அந்த டாக்டருடன் இருப்பதால் மனசு ஃபீரியாக உள்ளதாக அவள் நினைத்திருக்கிறாள்.

இந்த சமயத்தில், பிரவீன்குமார் என்னிடம் வந்து சேர்ந்த வாழ வேண்டும் எனக் கூறினான். நாங்களும், அவளுக்கு சேர்ந்த வாழ ஒரு நோட்டீஸ் அனுப்பினோம். இரண்டு மாதமாகியும் அவளிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மனைவியின் தொடர் நச்சரிப்பில் மனமுடைந்த பிரவீன் குமார் ஒரு கட்டத்தில் அவள் மீது டைவர்ஸ் வழக்கு போடலாம் என முடிவுக்கு வந்தான். நாங்களும், அவளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸை வாங்கிய பிறகும், அந்த பெண் திரும்பியே வரவில்லை. அதன் பிறகு, இந்த பையனுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைத்தார்கள்.

Santhakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe