Advertisment

நர்ஸுடன் அறைக்குள் இருந்த கணவன்; உறவு கொள்ள தயங்கிய மனைவியின் முடிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 68

advocate santhakumaris valakku en 68

Advertisment

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ரமா என்ற பெண்ணுடைய வழக்கு இது. மிடில் கிளாஸ் பெண்ணான இவருக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்திற்கு முன்னரே, மாமியார் ஒரு பேராசை பிடித்த பெண் என்று பெண் வீட்டார் எல்லோரும் நினைக்கிறார்கள். இருப்பினும், பெண்ணுக்கு 25 பவுன், மாப்பிள்ளைக்கு 5 பவுன், பைக்குக்கு 60,000 ஆயிரம் ரூபாய், மேற்படி 20,000 என பெண்ணுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் சீதனமாகப் பெண் வீட்டார் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு குறைவான நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என மாமியார் கண்டிசன் போட பெண் வீட்டாரும் சம்மதித்த பின் திருமணம் நடக்கிறது.

சந்தோஷமாக போன திருமண வாழ்க்கையில், சில நாட்களுக்கு பின் மாப்பிள்ளை பெண்ணுடைய அப்பா குறைவான பணம் மட்டுமே கொடுத்ததாக பெண்ணை குத்தி காட்டுகிறான். மாமியாரும், நகைகளைக் குறை சொல்லி அதை வாங்கி லாக்கரில் வைத்து விடுகிறார். வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண்ணுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விருந்துக்குச் செல்வதற்கு தன்னுடைய நகையை கேட்டதற்கு, மாமியார் திட்டி அதை தர மறுக்கிறார். வருத்தமான பெண்ணும், இதை பற்றி தன்னுடைய அம்மா அப்பாவிடம் சொல்கிறார். இதற்கிடையில் பெண் கர்ப்பம் ஆக, உடனடியாக உதவித்தொகை பெறுவதற்காக கார்பரேஷன் ஹாஸ்பிட்டலில் ரெஜிஸ்டர் செய்ய சொல்கிறார் மாமியார். ரெஜிஸ்டர் செய்யும் கணவர் பெயிண்டர் வேலை பார்ப்பதாகச் சொன்னால் தான் உதவித்தொகை கிடைக்கும் எனப் பையன் சொல்ல, அதன்படியே பெண்ணும் ரெஜிஸ்டர் செய்கிறாள். பையன் என்ன வேலை செய்கிறான் என்பதை பெண்ணுக்கு சொல்ல மறுக்கிறான். நாட்கள் செல்ல செல்ல, பெண்ணை அதிகமாக வேலை வாங்குகிறார் மாமியார். வேலை பார்ப்பதால் கால் வலிக்கிறது என பெண் சொல்ல, இதற்கும் அம்மா அடித்ததால் தான் காலி வலிக்கிறது வெளியே சொன்னாலும் சொல்வாய் எனப் பையன் ஒருமாதிரியாக பேசுகிறான். இத்தகைய கஷ்டங்களுக்குள்ளும் பெண் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள்.

Advertisment

கர்ப்பமான பெண் என்பதால், உடல்நிலை காரணமாகப் படுக்கும் போது கூட மாமியார் திட்டிவிடுகிறார். மாமனாரிடம் சாப்பாடு கொடுத்தாலும் கூட அதை பெண்ணின் முகத்தின் மேலே தூக்கி எறிகிறார். இதற்கிடையில், பெண்ணும் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னதற்கு, திரும்பி வரும்போது மாத மாதம் செக் அப்புக்கு போவதற்கு பணத்தை உங்கள் வீட்டில் வாங்கி வா என பையன் சொல்கிறான். அவளும் எதுவும் பேசாமல் தன்னுடைய வீட்டிற்கு வந்து ஒரு 10 நாள் இருந்து காலி வலியை போக்குகிறாள். அம்மா சொன்னதன் பேரில், பெண்ணும் தன்னுடைய கணவன் வீட்டிற்கு வந்து வேலை செய்ததால் மீண்டும் அவளுக்கு கால் வலி வருகிறது. இதற்காக கணவன் ஒரு நர்ஸ்ஸை அழைத்து மனைவிக்கு ஊசி போடவிட சொல்கிறாள். சிறிது நேரம் கழித்து, அந்த நர்ஸ்ஸும், கணவரும் அறையை பூட்டி அங்கு இருப்பதை பார்த்து இவள் ஆச்சரியமடைகிறாள். பழைய கணக்கை பார்த்து பணம் கொடுத்ததாகக் கூறி அவன் அரை மணி நேரம் கழித்து அவன் அறையை விட்டு வெளியே வருகிறான். இதில் சந்தேகமடைந்த அவள் பக்கத்து வீட்டாரிடம்விசாரிக்கும் போது, மூத்த மகனின் மனைவியையும், இரண்டாவது மகனின் மனைவியையும் மாமியார் கொடுமைப்படுத்தியதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவர்களுடன் தனியாக குடியேறியிருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், கணவரும் அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களையும் சைட் அடித்துக்கொண்டிருந்தான் என்பதும் தெரியவருகிறது.

நர்ஸ்ஸுடன் அறைக்குள் தன் கணவன் இருந்த விவகாரத்தை தன் மாமியாரிடம் சொன்னாலும், மருமகளை திட்டிவிடுகிறாள். கணவனிடம் சொன்னாலும், அவனும் திட்டுகிறான். குழந்தை பிறந்ததும், 5 பவுனில் தங்கத்தில் அரைஞான்கொடியை வாங்கி குழந்தைக்கு போட்டால் தான் மருமகள் வீட்டுக்கு வர வேண்டும் எனப்பெண் வீட்டாரிடம் மாமியார் கண்டிசன் போடுகிறார். வேறு வழியில்லாமல், பெண் வீட்டாரும் அதை போட்டுவிட்டு மகளை கணவனின் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அந்த 5 பவுன் நகையையும் மாமியார் தன்னுடைய லாக்கரில் போட்டுவிடுகிறார். குழந்தை பிறந்திருப்பதால் தன்னால் வேலை செய்ய முடியாது, அதனால் ஒரு வேலைக்காரியை வைத்துக்கொள்வோம் என மருமகள் சொல்ல, மாமியார் மறுத்து குழந்தையை உன்னுடைய வீட்டில் விட்டுவிட்டு நீ தான் வேலை பார்க்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார். இதற்கிடையில், நர்ஸுடன் அறைக்குள் இருந்ததற்கு பின்னால், கணவனிடம் உறவு கொள்ள மனைவிக்கு முடிவதில்லை. தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக தன்னுடைய நகைகளை மருமகள் கேட்க, மாமியார் கொடுக்க முடியாது என மறுக்கிறார். இதில் வாக்குவாதம் ஆக, கணவன் ரமாவை அடித்துவிடுகிறான். மேலும் பெண் வீட்டார், குழந்தை பிறந்ததற்கு என்னென்ன செலவுகள் செய்தீர்கள் என பார்க்க வேண்டும் என மனைவியிடம் பில்லை வாங்கி ஃபோர்ட்ரஸில் கொடுத்து ரீஇம்பெர்ஸ் ஆஃப் மனி கேட்கிறான். அதற்கு பின்னால் தெரிகிறது, பையன் ஃபோர்ட்ரெஸில் வேலை பார்க்கிறான் என்று. ஃபோர்ட்ரெஸிலே இலவசமாக ட்ரீட்மெண்ட் செய்யலாமே, பின் ஏன் கார்பரேஷனில் அட்மிட் செய்தீர்கள் என மனைவி கேட்க, உன் தகுதிக்கு இதுவே போதும் எனக்கணவன் திட்டுகிறான்.

இந்த நிலையில் தான், ரமா பெற்றோருடன் என்னை பார்க்க வந்தாள். நடந்த விஷயத்தையெல்லாம் சொன்னார்கள். நாங்கள், பெண்ணை கன்னத்தில் அறைந்ததால் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில் ட்ரீட்மெண்ட் செய்த பில்லை வைத்து டாக்குமெண்ட் தயார் செய்து டைவர்ஸுக்கு ஒரு கேஸ் போட்டோம். உடனடியாக குழந்தைக்கு தன்னுடன் வர வேண்டும் என பையன் ஒரு கேஸை போடுகிறான். 5 வயது வரைக்கும் குழந்தை அம்மாவிடம் இருக்கும். அதனால், 8 மாத குழந்தையை கொடுக்க முடியாது என நீதிபதி சொல்ல, குழந்தையை பார்க்க வேண்டும் என பையன் சொல்கிறான். கோர்ட்டுக்கு வரும் போது மட்டும் குழந்தையை காண்பிப்பதாக மனைவி சொல்ல, அதன்படி வரும்போது மட்டும் குழந்தையை அவன் பார்க்கிறான். நகைகளை கேட்டதற்கு, அவர்கள் கொடுக்க வில்லை என்று பையன் வீட்டார்கள் சொன்னார்கள். அதன்பிறகு, போலீஸ் ஸ்டேசனில் ஒரு கேஸை போட்டு, செக்சன் 27 ஆஃப் ஹிந்து மேரேஜ் ஆக்ட்டின் கீழ் நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என ஒரு கேஸை போட்டோம். அவன், கோர்ட் வாசலிலேயே டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என மனைவியை திட்டுகிறா. நாங்கள் உடனடியாக மனைவிக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சமாக 15,000 ஆயிரம் கொடுக்க வேண்டும் என பெட்டிசனை போட்டோம். விசாரணை செய்ததற்கு பிறகு, இரண்டு பேருக்கும் சேர்த்து 10,000 ஆயிரம் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னது. 3 வருடமாக கேஸ் நடந்ததால், 3 வருடத்திற்கும் சேர்த்து 3, 60,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அவனும், பெண்ணுடம் வாழ மாட்டேன் என சொன்னதற்கு பிறகு, நகைகளை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்ல அதன்பிறகு, கொஞ்ச கொஞ்சமாக 30 பவுனுக்கு கீழ் நகைகளை பையன் வீட்டார் கொடுத்தார்கள். அதன் பிறகு, தனக்கும், குழந்தைக்கும் எந்தவித பணமும் அவனிடம் இருந்து வேண்டாம் என பெண் சொல்ல, மீயூட்ச்சுவல் கன்செண்டில் இருவருக்கும் விவகாரத்து ஆனது.

Santhakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe