advocate-santhakumaris-valakku-en-27

மனைவியின் தவறினை மன்னித்து மீண்டும் புதிய வாழ்க்கையைத்தொடங்கிய வித்தியாசமான கணவன் குறித்த வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரிநம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

விக்ரம் என்பவருடைய வழக்கு இது. மிகவும் மென்மையான மனிதர் அவர். அவருடைய வருங்கால மனைவி அவருடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்தார். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. எளிமையான, சந்தோஷமான வாழ்க்கையாக அவர்களுடைய வாழ்க்கை இருந்தது. அவர்களுடைய குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அந்தப் பெண்ணிடம் ஏற்கனவே ப்ரபோஸ் செய்த பையனையும் அழைத்தனர்.

Advertisment

அதன் பிறகு அவர்கள் இருவரும் அடிக்கடி ஃபோனில் பேசத் தொடங்கினர். இருவருக்குமிடையில் ஈர்ப்பு உருவானது. சென்னைக்கே வந்து செட்டிலான அவன், அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கினான். அவளுடைய கணவன் தன்னுடைய குடும்பத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்து வந்தான். அந்தப் பையனோடு மனைவி வெளியே சந்திப்பது குறித்த தகவல் அவனுக்கு கிடைத்தது. அதை விசாரித்த அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்தப் பையனோடு மனைவி தொடர்ச்சியாக ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.

அவளை அழைத்து அவன் அட்வைஸ் செய்தான். வீட்டில் அடிக்கடி ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்றான். ஆனால் அந்தப் பையன் அவளுக்கு இன்னொரு ஃபோன் வாங்கிக் கொடுத்து அதில் அவர்கள் பேசத் தொடங்கினர். அவளுடைய நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் தெரிந்தது. குழந்தையை கவனிக்கத் தவறினாள். அடிக்கடி வெளியே சென்றாள். அவள் இன்னொரு ஃபோன் வைத்திருந்ததும் கணவனுக்கு தெரிந்தது. என்ன பிரச்சனை என்று அவளிடம் விசாரித்தபோது, அவள் தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று கூறினாள். கணவன் சம்மதித்தான்.

Advertisment

அவள் காதலித்து வந்த பையனும் அந்த இடத்தில் படிப்பது அதன் பிறகு தான் அவனுக்குத் தெரிந்தது. இருவரும் சந்திப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை அவள் செய்தது தெரிந்தது. அவளை அழைத்து அவன் அறிவுரை கூறினான். அதன் பிறகும் அந்தப் பையனோடு அவளுடைய தொடர்பு தொடர்ந்தது. அவளுடைய பெற்றோரிடம் அதை அவன் தெரிவித்தான். அந்தப் பெண்ணின் மீது அவன் வழக்கு தொடுத்தான். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் தந்தை அவன் மீது வழக்கு தொடர்ந்தார்.

இறுதியில் அந்த வழக்கிலிருந்து விக்ரம் வெளியே வந்தான். விவாகரத்தும் கிடைத்தது. ஆனால் சில காலத்துக்குப் பிறகு அந்தப் பெண் தன்னுடைய தவறை உணர்ந்து தன் காதலனிடமிருந்து மீண்டும் தன்னுடைய கணவனிடமே வந்தாள். இவரும் அவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இப்போது மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.