Advertisment

காதலியை கட்டியணைத்த கணவன்; உச்சநீதிமன்றம் வரை சென்ற மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:109

santha

advocate santhakumaris valakku en 109

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

Advertisment

விஜயலஷ்சுமி என்ற பெண்ணுடைய வழக்கு இது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த இப்பெண் நல்லா படித்திருக்கிறாள். இவருக்கு மேட்ரிமோனியல் மூலமாக அமெரிக்காவில் இன்ஜினியரிங் வேலை செய்யும் ஒரு வரன் வருகிறது. இரு குடும்பத்துக்கும் பிடித்து போய் திருமணம் வரை செல்கிறது. இந்த பெண்ணுக்கு 100 சவரன் வரை நகை போடுகிறார்கள். திருமணம் முடிந்த பின், விஜயலஷ்சுமியை அமெரிக்காவில் கொண்டு போவதாக சொன்னால் பெண்ணின் குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷமடைகிறார்கள். இரண்டு பேரும் சந்தோஷமாக பேசி பிடித்து இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் செய்கிறார்கள். திருமணம் முடிந்து 1 வாரம் ஆனதும் பெண்ணுக்கு விசா எடுப்பதற்காக பையன் மட்டும் அமெரிக்கா செல்கிறான். இதற்கிடையில், சென்னையில் உள்ள மாமியார் வீட்டிற்கு விஜயலஷ்சுமி வருகிறாள். ஆரம்பத்தில், மாமியார் அடிக்கடி எதாவது நச்சரித்துக் கொண்டே இருக்கிறார். இருப்பினும், விஜயலஷ்சுமி பொறுமையாக இருக்கிறாள்.

Advertisment

இரண்டு மாதம் கழித்து விசா வருகிறது. இந்த பெண்ணும் தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா செல்கிறாள். அமெரிக்காவை பார்த்து சந்தோஷமடைந்த விஜயலஷ்சுமி அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், அந்த பையன் மறுப்பு தெரிவிக்கிறான். இதற்கிடையில், நாகரீகமாக இல்லை என விஜயலஷ்சுமியிடம் அந்த பையன் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருக்கிறான். இவளும் அதை பொறுத்துக் கொண்டே இருக்கிறாள். அப்பறம் ஒரு நாள், ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் மெசேஜ் செய்திருப்பதை விஜயலஷ்சுமி பார்க்கிறாள். அதில், அந்த பெண்ணிடம் கொஞ்சி கொஞ்சி பேசியிருக்கிறான். இந்த பெண் யார் என்று கேட்டால், தோழி தான் அவள் ஒரு நாள் அவள் வீட்டிற்குச் செல்வோம் என்று கூறுகிறான். இவளும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். இரு நாள், இருவரும் அந்த பெண் வீட்டிற்குச் செல்கிறார்கள். வீட்டிற்கு நுழைந்தவுடனேயே அந்த பெண், இவனை இறுக்கமாக கட்டியணைத்து முத்தம் எல்லாம் கொடுக்கிறாள். இதனை கண்டு விஜயலஷ்சுமி மிகவும் மனசு உடைந்து போகிறாள். அன்றைய நாள் இரவில், விஜயலஷ்சுமியை தனியாக தூங்க சொல்லிவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது உன்னுடைய குழந்தை என் வயிற்றில் சுமப்பதாக அந்த பெண் கூறுவதை விஜயலஷ்சுமி கேட்கிறாள். இதனால் மனமுடைந்து நடந்தவற்றை அவனிடம் விஜயலஷ்சுமி கேட்கிறாள். ஆனால், அவன் இதை சாதாரணமாக விடுகிறான்.

ஒரு நாள், அந்த பெண்ணை அழைத்து தன் கணவரிடம் இருந்து விலகி இருக்குமாறு விஜயலஷ்சுமி கேட்கிறாள். உடனே அந்த பெண் அழுது நடந்தவற்றை அவனிடம் சொல்ல, அதை கேட்டு இவனும் விஜயலஷ்சுமியிடம் சண்டை போடுகிறான். இப்படி 3 பேரும் சண்டை போட்டு களேபரமாக்கிறார்கள். உடனே இந்தியாவுக்கே திரும்பிவிடு என விஜயலஷ்சுமியிடம் அவன் சொல்லிவிடுகிறான். ஆனால், அதை மறுத்துவிடுகிறாள். இதற்கிடையில் விஜயலஷ்சுமி வயிற்றில் ஒரு குழந்தை வளர ஆரம்பிக்கிறது. முதல் 5 மாத காலத்தில் அங்கேயே இருக்கிறாள். ஆனால், கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜயலஷ்சுமியை இந்தியாவுக்கு அனுப்பி விடுகிறான். அந்த பெண்ணும் இங்கே வருகிறாள். கர்ப்ப காலத்தில் அடிக்கடி விஜயலஷ்சுமியிடம் அவன் மெசேஜ் செய்து நலம் விசாரிக்கிறான். இவளும் அந்த பெண்ணை விட்டு தன்னிடம் நல்லா பழகுவதாக என்ணி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். அடுத்து விஜயலஷ்சுமிக்கு சீமந்தம் வருகிறது. ஆனால், தன்னால் வர முடியவில்லை சில மாதங்கள் கழித்து வருகிறேன் என்கிறான். குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது அதனால், சிசேரியன் பண்ணு என்று அவன் சொல்கிறான். இவளும் அதை கேட்டு சிசேரியன் செய்கிறாள். குழந்தை பிறக்கிறது, அவன் பார்க்கவே வரவே இல்லை. விஜயலஷ்சுமி தொடர்ந்து போன் செய்து பார்க்கிறாள், அவன் எடுப்பதே இல்லை. மாமியாரிடம் கேட்டாலும் அமெரிக்காவில் தான் இருக்கிறான் எங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிடுகிறார். இவளும் பலமுறை அவனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். ஆனால் அவனை பற்றிய தகவலும் எதுவும் கிடைக்கவே இல்லை.

இந்த நேரத்தில் விஜயலஷ்சுமி என்னிடம் வந்து நடந்தவற்றை கூறினாள். நான் சேர்ந்து வாழ வேண்டும் என்ற மனுவை போட்டு அமெரிக்காவுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், அந்த நோட்டீஸுக்கு எந்த பதிலும் வரவே இல்லை. 3,4 மாதம் எந்த தகவலும் கிடைக்காததால் அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் மூலம் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அதற்கு எதுவும் பதில் வராததால் மெயிண்டென்ஸ் கேட்டு அவன் வேலை செய்யும் இடத்தை அறிந்த அங்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பிறகு அந்த நோட்டீஸ் அவன் கைக்கு சென்ற பின், தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அவன் மனு போட்டான். இந்திய தூதரகத்தில் உள்ள கவுன்சில், இந்த பெண் சார்பாக வாதிட்டது. இங்கு நான் ஒரு வழக்கு நடத்தி வந்ததால், என்னிடம் வழக்கு நிலைமையை பற்றி கேட்க நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.

அங்கு நடைபெற்ற விசாரணையில், குழந்தைக்கு மாத மாதம் குறிப்பிட்ட தொகையை மெயிண்டென்ஸாக தர வேண்டும் என்று கூறி விவாகரத்து வழங்க தீர்ப்பு வழங்கிவிட்டது. உடனடியாக நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, விஜயலஷ்சுமி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லை, அதனால் அந்த அமெரிக்காவின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டோம். அதன்படி, அமெரிக்காவின் தீர்ப்பை ரத்து செய்து விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. குழந்தைக்கு, மாதம் மாதம் ்மெயினெண்ட்ஸ் மட்டும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, அவன் மாத மாதம் குழந்தைக்கு மெயினெண்ட்ஸ் கொடுத்து கொண்டிருக்கிறான். இவளும் சந்தோஷமாக லண்டனில் படிக்க போவதாகக் கூறி சென்றாள்.

Valakku En Santhakumari Advocate
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe