அடிக்கடி நச்சரிக்கும் மாமியார்; கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:108

New Project

advocate santhakumaris valakku en 108

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

சஞ்சிதா என்ற பெண்ணுடைய வழக்கு இது. தன்னுடைய பெற்றோருடன் என்னை வந்து பார்த்தார். அக்காவுடைய பையனை சஞ்சிதாவுக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். சஞ்சிதா நிறைய செலவு செய்வதாகவும், அவர் அவரது அப்பா அம்மா பேச்சை கேட்பதாகவும், தனது அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவதாகவும் அவரது கணவர் நிறைய குற்றச்சாட்டை வைத்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், இந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிறார். அதனால், நான் ரெஸ்டிடியூஷன் ஆஃப் கான்சுகல் ரைட்ஸ் என்று சேர்ந்து வாழ்வதற்காக மனு போடுகிறேன்.

சஞ்சிதாவின் தந்தை என் ஜினியரிங் வொர்க்‌ஷாப் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த கம்பெனியில் தனது அக்கா பையனும் வேலை செய்து வந்துள்ளார்.வந்த கொஞ்ச நாளிலேயே தொழிலை நன்றாக அவர் கற்றுக்கொண்டுள்ளார். அந்த பையனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. பையன் கெட்டிக்காரனாக இருப்பதால் அந்த பையனை தனது சஞ்சிதாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த பையனை திருமணம் செய்து கொள்ள சஞ்சிதா மறுத்துள்ளார். சஞ்சிதாவை சமாதானப்படுத்தி தனது அக்கா பையனுக்கே அவரது தந்தை திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணம் ஆன ஆரம்ப காலத்தில் எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், சீர் குறைவாக செய்திருப்பதாகவும் நகைகள் கம்மியாக கொடுத்திருப்பதாகவும் சஞ்சிதாவின் மாமியார் அடிக்கடி நச்சரித்து வந்துள்ளார்.  மேலும், தனது மகனையும் சஞ்சிதாவுக்கு எதிராக அடிக்கடி தூண்டிவிடுகிறார். இதனால் மாமியாரை சஞ்சிதாவுக்கு பிடிக்காமல் போகிறது. ஒரு நாள் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் போது பையனிடம் சஞ்சிதாவின் தந்தை விசாரிக்கிறார். அப்போது, இந்த ஒர்க் ஷாப்பை தனது பெயரில் எழுதி வைக்க அம்மா விரும்புகிறார் என அந்த பையன் சொல்கிறார். தனக்கு ஒரு பையன் இருக்கும் போது எப்படி ஒர்க் ஷாப்பை மருமகனுக்கு எழுதி கொடுக்க முடியும் என எண்ணி சஞ்சிதாவின் தந்தை ஒர்க் ஷாப்பை எழுதி வைக்க முடியாது என மறுக்கிறார்.

இதை அமைதியாக கேட்டு விட்டு, வீட்டுக்கு வந்த உடனே தனது அம்மாவிடம் சொல்கிறான். இதில் கோபமடைந்த பையனுடைய அம்மா, சஞ்சிதாவிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடும். இதில் கோபித்துக் கொண்டு சஞ்சிதா தனது வீட்டுக்கு சென்றுவிடுகிறார். 3 மாதம் கழித்து சமாதானம் செய்து வைத்து சஞ்சிதாவை, கணவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை காணாமல் போயிருக்கிறது. இது குறித்து தனது மாமியாரிடம் கேட்க, என்னை திருடி என்கிறாரா? நகையை உன் அம்மா வீட்டில் தான் வைத்திருப்பாய் என்று கூறி மீண்டும் சஞ்சிதாவோடு சண்டை போடுகிறார். உடனே, தனது அம்மாவிடம் சஞ்சிதா கூறுகிறார். அவரும், தனது மகள் தாலிக் கொடியும் 2 வளையலும், 1 மோதிரம் மட்டும் தான் போட்டிருந்தாள் என கூறியுள்ளார். கொஞ்ச நாள், இந்த பிரச்சனை போய்கொண்டிருக்கிறது. இதனிடையே, சஞ்சிதா கர்ப்பமாகிறாள். மாமியார் ஒழுங்காக கவனிக்க மாட்டார் என்று கூறி சஞ்சிதாவை அவரது அம்மா தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். 4 மாதம் கழித்து அந்த பெண்ணை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த தடவை, இன்னொரு நகை காணாமல் போயிருக்கிறது. மீண்டும் தனது மாமியாரிடம் கேட்க, அவரும் இல்லை என மறுத்துவிடுகிறார். உடனே தனது அம்மாவுக்கு போன் போட்டு நடந்த விவரத்தை சஞ்சிதா சொல்கிறார். இதில் அந்த அம்மா கோபமடைந்து சஞ்சிதாவின் அப்பாவிடம் சொல்கிறார். தனது சொந்த அக்கா என்பதால் அவரும் அமைதியாகி விடுகிறார். சில நாட்கள் கழித்து சஞ்சிதாவின் தந்தை, சஞ்சிதாவை பார்க்க வருகிறார். தனது அக்காவிடம் பேசி இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கிறார். அக்கா சண்டை போட்டாலும், அவரை சமாதானம் செய்கிறார். சில மாதங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு என்ன செய்தாலும், மாமியார் அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பார். ஒர்க் ஷாப்பில் தனது மகனை உட்கார வைத்துவிட்டார் என்று சஞ்சிதாவின் கணவருக்கு வருத்தம் இருக்கிறது.

மறுபடியும், தனது அக்காவிடம் பேசி இந்த நகை பிரச்சனையே வேண்டாம் என்று மீதமுள்ள நகைகளை பேங்கில் சஞ்சிதாவின் தந்தை வைக்கிறார். நகையை பேங்கில் வைப்பதற்கு மாமியாருக்கு விருப்பம் இல்லை. இருப்பினும், வேறு வழியில்லாமல் நகைகளை பேங்கில் வைத்துவிடுகிறார். மனைவி அடிக்கடி தனது அப்பா அம்மா வீட்டுக்கு சென்றுவிடுகிறாள் என பையன் கோபித்துக்கொள்கிறான். தனிக்குடித்தனம் சென்றுவிடலாம் என சஞ்சிதா கேட்டாலும், அதற்கு அந்த பையன் மறுத்துவிடுகிறான். இந்த சமயத்தில், சஞ்சிதா மீண்டும் கர்ப்பமாகிறாள். இந்த நேரத்தில் தனது கணவர் மீதுள்ள பாசத்தாலும், அப்பாவின் அறிவுரையாலும் தனது கணவர் வீட்டிலேயே சஞ்சிதா இருக்கிறாள். இந்த பையனும், தனது அம்மாவுக்கு தெரியாமல் சஞ்சிதாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து வருகிறான். இரண்டு குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் அதற்கும் மாமியார் சஞ்சிதாவோடு அடிக்கடி சண்டை போடுகிறாள். ஆனால், அந்த பையன் சஞ்சிதா மீது பாசமாக தான் இருக்கிறான். இந்த சூழ்நிலையில், அந்த பையன் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். நாங்களும் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் செய்தோம். ஆனால், அவர் எதற்கும் சம்மதிக்கவில்லை. இதனால், தனது இரண்டு குழந்தைகளுக்கும் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும் என இண்டெரிம் அப்ளிகேஷம் என மனுவை இந்த பெண் ஒரு கேஸை போட்டாள். ஆனால், மனைவி வேறு ஒரு இடத்தில் வேலை செய்து ரூ.12,000 சம்பாரிப்பதாகவும், தனக்கு ரூ.10,000 தான் சம்பளம் கொடுப்பதாகவும் தன்னால் அவ்வளவு பெரிய பணத்தை கொடுக்க முடியாது எனவும் அந்த பையன் நீதிமன்றத்தில் சொல்கிறான்.

அதன் பின்னர், மாத மாதம் இரண்டு குழந்தைகளுக்கும் தலா ரூ.3,000 கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. ஒரு மாதத்திற்கு ரூ.6,000 கொடுப்பதற்கு அந்த பையனால் முடியவில்லை.  இதற்கிடையில், குழந்தைகள் மீதும் அந்த பையனுக்கு பாசம் வந்தது. அதன் பின்னர், இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினோம். தனிக்குடித்தனம் கேட்கவில்லை என்றால் மனைவியோடு சேர்ந்து வாழ தயார் என அந்த பையன் சொன்னான். அதே மாதிரி, ஒர்க் ஷாப்பை எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடாது என சஞ்சிதாவும் சொன்னாள். இப்படி மாறி மாறி வேண்டுகோள் வைத்தனர். அதற்கு இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் நாங்கள் சமாதானமாக போகிறோம் என வழக்கை முடித்து வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சொன்னோம். அதன் பிறகு, கையெழுத்து போட்டு இருவரும் மகிழ்ச்சியோடு ஜோடியாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்கள்.

Advocate Santhakumari Valakku En
இதையும் படியுங்கள்
Subscribe