Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 9

Published on 06/08/2019 | Edited on 13/08/2019

ஊழல் ஒப்பந்தங்கள் (உத்தரப்பிரதேசம்)- ILLEGAL CONTRACTS (UTTAR PRADESH)

 

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9


உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி அமைச்சரவையின் மூன்று அமைச்சர்களின் செயலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டனர். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், சுரங்கத்துறை இணை அமைச்சர் அர்ச்சனா பாண்டே, கல்வித்துறை இணை அமைச்சர் சந்தீப் சிங் ஆகியோர் ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நபருக்கு ஒதுக்கிய வகையிலும், பணியிட மாற்றங்களுக்காகவும் லஞ்சம் பெற்றதாக வந்த புகார்களில் இந்த செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

மணல் கொள்ளை ஊழல் (மத்தியப்பிரதேசம்)- ILLEGAL SAND MINING SCAM (MADHYA PRADESH)

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9

 


மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தின் ஆதரவில் மணல் கொள்ளை கொடிகட்டிப் பறந்தது. அனைவருமே முதல்வர் சவுகானின் உறவினர்களாக இருந்தார்கள். 2017 ஆம் ஆண்டு நர்மதை ஆற்றில் இனி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது தடை செய்யப்படுவதாக முதல்வர் சவுகான் அறிவித்தார். ஆனால், மணல்கொள்ளை தொடர்ந்தது. சுரங்கத்துறை அதிகாரி ஒருவர் மணல்கொள்ளையரை பிடித்தார். அப்போதுதான் தெரிந்தது முதல்வர் சவுகானின் தம்பியின் மகன் தலைமையில் தான் அந்த கொள்ளை நடைபெறுகிறது என்பது.

 

கட்டமைப்பு குத்தகை ஊழல் மற்றும் நிதி மோசடி!- IL&FS SCAM.

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9

 

 

அரசுப் பணத்தை கொள்ளையடித்த இன்னொரு நிறுவனத்தின் ஊழல் இது. ஐஎஃப்&எஃப்எஸ் என்ற நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் 91 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தது. தனது கடனை தொடர்ச்சியாக கட்டத் தவறியதால் இந்திய பொருளாதாரத்தின் மீதே மோசமான விளைவை ஏற்படுத்தியது. இந்தக் கம்பெனியின் லாபம் 900சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடனோ 44 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து கடன்களை திரும்பச் செலுத்த வழியே இல்லை. கம்பெனியின் பங்குகளின் மதிப்பு ஒன்றுக்கும் உதவாது என்றும், கடனை ஈடுகட்ட முடியாது என்றும் கூறப்படுகிறது. எல்ஐசி, எஸ்பிஐ, சென்ட்ரல் பேங்க் ஆகியவை மட்டும் இந்த நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.

 

இந்த நிறுவனத்தின் நிலைமையை மேற்படி நிறுவனங்கள் எப்படி அறியாமல் போயின? இதற்கிடையில், மேற்படி நிறுவனத்தை கடன் நெருக்கடியிலிருந்து மீட்க உதவும்படி எல்ஐசி, எஸ்பிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மோடியின் பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் அழுத்தம் கொடுப்பதாக வெளியான தகவல் தீயாய் பரவியது. இந்த கம்பெனியின் 35 சதவீத பங்குகள் வெளிநாட்டவரிடம் இருக்கின்றன. ஜப்பான், அபுதாபி ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரின் பங்கு மிக அதிகம். இந்த நிறுவனத்தை காப்பாற்றுவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை காப்பாற்ற மோடி முயற்சிக்கிறார் என்று கூறப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணத்தை செலவழித்து இந்த தனியார் நிறுவனத்தை காப்பாற்ற மோடி ஏன் முயற்சிக்கிறார் என்பதே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியது.


வங்கி மோசடி ஊழல் (சத்தீஷ்கர்)- INDIRA PRIYADARSHINI MAHILA SAHAKARI BANK SCAM (CHHATTISGARH)

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள இந்திரா பிரியதர்ஷனி பேங்க்கில் மாநில முதல்வர் ரூ 54 கோடி அளவுக்கு மோசடி செய்த விவகாரம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வங்கியின் மேனேஜராக இருந்தவர்தான் முதல்வர் ராமன்சிங். எனவேதான் இந்த வங்கி அதிகாரிகள் முதல்வருக்கும், அவருடைய அமைச்சர்களுக்கும் ஏராளமாக பண உதவி செய்ய முன்வந்தனர். இந்த மோசடியை சி.டி. ஆதாரத்துடன் காங்கிரஸ் தலைவரின் மகன் அம்பலப்படுத்தினார். 


இண்டிகோல்டு நில பேர ஊழல் (குஜராத்)- INDIGOLD REFINERY SCAM (GUJARAT)

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9

 

 

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இண்டிகோல்டு ரீபைனரி என்ற நிறுவனம் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்புள்ள நிலத்தை விற்க அனுமதி கொடுக்கப்பட்டது. தொழிற்சாலை நிறுவ ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை இன்னொரு வணிக நிறுவனத்திற்கு விற்க அனுமதி கொடுத்தது மிகப்பெரிய மோசடி ஆகும். மோடி முதல்வராக இருந்தபோது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல், அரசு விதிகளை திருத்தி இந்த அனுமதியைக் கொடுத்தார். 2014ல் இந்த அனுமதியை உச்சநீதிமன்றமே நிறுத்திவைத்தது. அப்போது ஆனந்திபென் படேல் குஜராத் முதல்வராக இருந்தார்.

 

கோவா திரைப்பட விழா மெகா மோசடி ஊழல்!- IFFI MEGA SCAM (GOA)

 

adhanur cholan a to z corruptions of BJP SCAM PART 9

 

 

கோவா மாநிலத்தில் சர்வதேச திரைப்பட விழா நடத்திய சமயத்தில் இந்த விழாவை வைத்து மாநில வருவாயில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. 2014ல் நடைபெற்ற இந்த விழாவுக்கான சில வேலைகளை அரசு டெண்டர் விட்டதில் 5 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக பொதுக்கணக்குத்துறை தெரிவித்தது. இந்த விழாவை நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்த ஒரு அமைப்பு தனியாக அலங்கார வேலைகளுக்காக 61 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவழித்தது. இந்த விழாவுக்காக 40 லட்சம் செலவில் 11 ஆயிரத்து 500 விலையுயர்ந்த பேக்குகள் வாங்கப்பட்டு, அதில் 8 ஆயிரத்து 400 பிரதிநிதிகளுக்கு மட்டுமே பேக்குகள் வழங்கப்பட்டது என்றும் பொதுக்கணக்குத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.








 

Next Story

முதலிரவில் வேண்டாம் என்ற மாப்பிள்ளை; நீதிபதிக்கே ஆச்சரியமூட்டிய வழக்கு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 1

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Advocate Santhakumari's Valakku En - 1

 

‘வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப்பார்' என்பார்கள். நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய திருவிழா. மிகுந்த பொருட்செலவோடும் மனநிறைவோடும் நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. பல்வேறு வேறுபாடுகள் காரணமாக நீதிமன்றத்தின் கதவைத் தட்டுபவர்கள் ஏராளம். அப்படி தன்னிடம் வந்த வழக்குகள் குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு மனம் திறக்கிறார். 

 

ஒருமுறை மருத்துவமனை சென்றிருந்தபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். நான் வழக்கறிஞர் என்பதை அறிந்ததும் அந்தப் பெண்ணின் தோழி "நீங்கள் இந்தப் பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் மேடம்" என்றாள். ஆனாலும் பயத்தினால் அந்தப் பெண் என்னை வந்து சந்திக்கவே இல்லை. அதன் பிறகு அந்தப் பெண்ணை அழைத்துப் பேசினேன். முரளி என்கிற பையனை இந்தப் பெண் ஒரு திருமண விழாவில் சந்தித்திருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். அடிக்கடி சந்தித்துப் பழகிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர். பெண் கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு பதிவுத் திருமணமும் நடைபெற்றுள்ளது. முதலிரவின்போது "இன்றைக்கு வேண்டாம். நான் களைப்பாக இருக்கிறேன்" என்கிறான் முரளி. இது இயல்பான ஒன்றுதான் என்று அப்போது அவள் நினைக்கிறாள். ஆனால் இதுவே தினமும் தொடர்கதையாக இருந்துள்ளது.

 

என்னவென்று புரியாமல் இதுகுறித்து முரளியின் அக்காவிடம் விசாரித்தாள். சிறுவயதில் இருந்து பெண்ணாக வாழ்ந்த அவன், பருவம் வரும்போது ஆணுக்கான உணர்ச்சிகளைப் பெற்றான், இதற்கான அறுவை சிகிச்சையையும் அவன் செய்துள்ளான் என்கிற அதிர்ச்சியான செய்தியை அவனுடைய அக்கா கூறினாள். தான் ஒரு திருநம்பி என்கிற செய்தியை ஏன் அவன் தன்னிடம் மறைத்தான் என்கிற கேள்வி அவளுக்கு எழுந்தது. தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறிய அவன், அதன் பிறகு வீட்டிற்கு வருவதையே தவிர்த்தான். திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எனவே அதுபற்றிய புரிதல் திருமணத்திற்கு முன்பே ஏற்பட வேண்டியது அவசியம். எனவே இந்தத் திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்தோம். இதுபோன்ற ஒரு வழக்கு என்னிடம் வந்தது அதுதான் முதல் முறை. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. திருமணத்திற்குத் தேவையான நேர்மை இந்தத் திருமணத்தில் இல்லை. எனவே இது ஒரு மோசடி. 

 

அந்தப் பையன் வழக்கில் ஆஜராகாததால் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. தற்போது அவள் மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். இதுபோல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வெளியே வர வேண்டும். பிரச்சனை தோன்றுகிறபோதே நம்மிடம் வந்துவிட்டால் சரியான நீதியை விரைவில் பெற்றுவிடலாம். நான் சொன்ன வழக்கு நீதிபதிக்கே ஆச்சரியமாக அமைந்த ஒன்று.

 

 

Next Story

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 18

Published on 21/12/2019 | Edited on 06/01/2020

கும்பமேளாவுக்கு கையகப்படுத்திய நிலத்தை விழுங்கிய பாஜக தலைவர்கள்!- UJJAIN SIMHASTHA KUMBH MELA SCAM (MADHYA PRADESH)


மத்தியப் பிரதேச பாஜக தலைவர்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள். ஊழலிலேயே ஊறித் திளைத்தவர்கள். அந்த மாநிலத்தில் உள்ள சிம்மஹஸ்தா கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்காக அரசு சார்பில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், 2016 ஏப்ரலில் கும்பமேளா முடிந்தவுடன் அந்த இடத்தை பாஜக தலைவர்கள் பலர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினர். தனிநபர்களும் ஆக்கிரமித்து வீடுகளையும், பெரிய கட்டடங்களையும் கட்டத் தொடங்கிவிட்டனர். அடுத்த கும்பமேளாவுக்குள் அந்த இடம் முழுவதையும் தனியார் விழுங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

athanur chozhan bjp  a to z part 18

 
நிலத்தை ஏப்பம் விட்டதோடு மட்டுமின்றி, கும்பமேளாவுக்காக ஒதுக்கிய நிதியிலும் 2 ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிவிட்டனர். அன்றைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உஜ்ஜையினி கும்பமேளாவுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மாநில சட்டசபையில் அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்திலோ கும்பமேளாவுக்காக 4 ஆயிரத்து 471 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

athanur chozhan bjp  a to z part 18



இந்த இரண்டு தொகைகளுக்கும் இடையே வித்தியாசப்படும் 2 ஆயிரத்து 470 கோடி ரூபாய் குறித்து முதல்வர் கருத்தே தெரிவிக்கவில்லை. அதேசமயம், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை நாள் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ், மீண்டும் ஒரு பொய்யை சொன்னார். கும்பமேளாவுக்கா மாநில அரசு 3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் தெரிவித்தார். கும்பமேளாவுக்கா வாங்கிய பொருட்களில் ஏராளமான விலை முறைகேடுகள் இருந்தன.
 


குஜராத் பல்கலைக்கழக நிலத்தை ஓட்டல் கட்ட கொடுத்த பாஜக அரசு!- UNIVERSITY LAND SCAM

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இரு்ககிறது நவ்ஸாரி வேளாண் பல்கலைக்கழகம். இந்த பல்கலை.க்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலத்தை, சத்ரலா இந்தியன் ஹோட்டல் குழுமத்திற்கு குஜராத் அரசு தாரை வார்த்தது. இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாக எதிர்த்ததையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை ஹோட்டல் கட்ட கொடுத்தது அரசு. இதன்காரணமாக 426 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

athanur chozhan bjp  a to z part 18


 

 
வியாபம் ஊழல்!- VYAPAM SCAM (MP)

பாஜக ஆட்சி செய்த மாநில அரசுகளில் மத்தியப்பிரதேசம்தான் மிகப்பெரிய ஊழல்களில் சிக்கிய மாநிலம் என்று உறுதியாக கூறலாம். மத்தியப்பிரதேச வேலைவாய்ப்பு தேர்வுகள் வாரியத்தில் நடைபெற்ற ஊழல் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெற்றதில்லை. இந்தத் தேர்வில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று அது அம்பலமானது. தேர்வு முடிவுகளில் நடைபெற்ற மோசடிகள்தான் இந்த ஊழலை வெளிப்படுத்தியது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, காப்பியடித்து தேர்வெழுத அனுமதித்தது, பதில் எழுதாமல் பேப்பரை கொடுத்து பின்னர் பதில் எழுதியது, போலியாக அதிக மதிப்பெண் வழங்கியது என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் அரங்கேறின. இந்த ஊழல் வெளியானதும் இதில் தொடர்புடை பாஜக அரசின் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் ஷர்மா கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க, ஊழலில் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டனர். இந்த ஷர்மா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நெருங்கிய நண்பர் என்பதை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

athanur chozhan bjp  a to z part 18